(Reading time: 14 - 28 minutes)

"பார்த்திபன் என்னுடன் சேர்ந்து தன் உயிரைப் பணயம் வைத்தான். எங்கள் இரு உயிரையும் இளவரசர் படையோடு வந்து காப்பாற்றினார். இது ஒரு கூட்டு முயற்சி மன்னா! தனி ஒருவனால் இதைச் செய்து முடிக்க முடியாது. உங்களின் பாராட்டு எனக்கு மட்டும் உரித்தானதல்ல. இவர்களுக்கும் சொந்தமானவை தான்".

சம்யுக்தன் கூறியதைக் கேட்டு, ரவிவர்மன் சம்யுக்தன் மேல் கொண்டிருந்த பழி உணர்ச்சி பனி போல் அப்படியே உருகியது. மன்னரும் சம்யுக்தன் ரவிவர்மனைப் பற்றிக் கூறியதைப் பெருமையாக உணர்ந்தார்.

பார்த்திபனுக்கோ, மன்னர் அவனைப் புகழ்ந்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியை அவன் ருசித்திருப்பானா என்பது சந்தேகமே. சம்யுக்தன் தன்னைப் பற்றிப் பெருமையாகக் கூறியது அவன் உள்ளத்திலும் உடலிலும் கிளர்ச்சியை உண்டாக்கியது. நன்றியோடு சம்யுக்தனின் முகத்தைப் பெருமை பொங்கப் பார்த்தான். அவனது கண்களில் ஆனந்த நீர் பூத்தது. அதை உடனே அப்புறப்படுத்தினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பூபதிக்கோ வேப்பங்காயைக் கடித்தது போலிருந்தது. "என்ன? என்னை மட்டும் ஒருமையில் விட்டுவிட்டான்" என்று பதறி அவர்களின் அருகில் சென்று ஒட்டிக்கொண்டான்.

"ஏய்ய்..பார்த்திபா! என்னை மட்டும் விட்டுவிட்டீர்களே. என்னையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லடா"

பூபதியின் கூற்றை பார்த்திபன் அசட்டை செய்து வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

பூபதிக்கு ஒரு கணம் மயக்கம் வந்தது போலிருந்தது.

"என் குதிரையை எத்தனை முறை கவர்ந்து சென்றிருக்கிறாய்? அந்த நன்றி கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா?"

"எத்தனை முறை சொல்வது? அதைக் குதிரை என்று சொல்லாதே. கழுதை என்று சொல்".

இவர்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது சம்யுக்தன் சிலை போல் ஓரிடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பார்த்திபன், "எதை இவன் இமைக்காமல் வெறித்துக் கொண்டிருக்கிறான்?" என்று சம்யுக்தன் பார்த்த திசையில் நோக்கினான்.

நோக்கிய அவனும் சிலை போலானான். அவன் இதயம் பிளவுபட்டு ஒரு கணம் இறந்துவிட்டது போல் ஒரு மாபெரும் அதிர்ச்சியை முகத்தில் வெளிபடுத்தினான்.

"சம்யுக்தா! அப்பெண் யாரென்று தெரிகிறதா?"

"அதைத் தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்"

"எனக்குத் தெரிந்து விட்டது"

சம்யுக்தன் பார்த்திபன் கூறப் போகும் பதிலை ஆவலோடு எதிர்நோக்கினான்.

"ஓலைக் குடிசை...ஆற்றங்கரை..." என்று சில வார்த்தைகளை குறிப்புகளாக ஜாடையாய்க் கூறினான்.

சம்யுக்தனின் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது போல் விடை கிடைத்தது. பிரகாசமடைந்த அவன் முகத்தில் அதிர்ச்சியும் கலந்திருந்தது.

"பகைவர்களுக்கு உதவிய மோர்க்காரி தானே இவர்?....!"

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 14

Next episode will be published as soon as the writer shares his next story.

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.