(Reading time: 13 - 26 minutes)

அவர் டீ குடித்துக்கொண்டு இருக்கும்பொழுதே பேருந்து வர மீதம் இருந்த  டீயை  குடித்துவிட்டு செல்வதற்குள் வேந்தன் தேன்நிலாவிடம் பேச ஆரம்பித்திருந்தான்...

அவன் பேச பேச தேன்நிலா அழுவதை பார்த்தவருக்கு மனது தாங்கவில்லை... தன்னிடம்  நடந்துக்கொண்டது போல தேன்நிலாவிடமும் எதாவது அதிகபடியாக பேசிவிடுவானோ என்று  பெற்றவரின் மனது அடித்துக் கொண்டது...

சிறிது நேரத்திலே தேன்நிலா அழுதுக்கொண்டே அன்னம் வீடு இருக்கும் திசையை நோக்கி செல்வதைப் பார்த்தவர் மனதுக்குள் ஒருவித நிம்மதி வந்து போனது...

அவள் அங்குதான்  செல்கிறால் என்பதை புரிந்துக் கொண்டவர்  கயலிடமிருந்த தேன்நிலாவின் உடமைகளை வாங்கிக் கொண்டு தனது  வீட்டை நோக்கி சென்றவர் தேவியையும் அழைத்துக்கொண்டு அன்னத்தின் இல்லம் நோக்கி சென்றார்...

இதுநாள் வரையில்... அதாவது தேவியை தான் திருமணம் செய்ய போவதாக என்று சந்தானபாண்டியிடம் கூறினாரோ அதன் பின் அவர்  அங்கு சென்றதில்லை...இன்று தனது அன்பு மகள் அங்கு இருப்பதால் சென்றார்...

மரகதம் தேன்நிலா வந்தவுடனே  சென்றிருக்க தனது களைப்பையும் பொருட்படுத்தாமல் அன்னைக்கு காலை உணவை தயாரித்தாள்...

அப்பொழுது அங்கு வந்த தேவி அதனை தனது வேலையாக எடுத்துக்கொள்ள... தேன்நிலா அவர்கள் இருவரிடமும்  ஒரு வார்த்தை கூட பேசவில்லை...அன்னம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் அவர்களிடம் பேசவேயில்லை...

ஒருவாரு அன்னம்  அவளை சமாதானம் செய்ய அவள் அனைவரிடமும் சமாதானம் ஆனாள்...கௌதமுக்கு இந்த விஷயம் தெரியாது...அவனும் தேன்நிலா கூறிய பின் ஊருக்கு வந்து தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு சென்றான்...அவனும் தனது பெற்றோரிடம் கோபப்பட அவனையும் அன்னம் தான் சமாதானப்படுத்தினார்...

கௌதம் மிகவும் கவலைப்பட்டு தனது நண்பர்களிடம் இதுபோல் எதாவது நடந்தால் தன்னிடம் கூறுமாறு  கூறிவிட்டு சென்றான்...

தேன்நிலா தனது அன்னையை நன்கு கவனித்துக் கொண்டாள்... அன்னமும் தனது மகளின் கவனிப்பில் நன்கு உடல் தேறி இருந்தார்...

கடைசி வருடம் என்பதாலும்,அவள் ப்ரொஜெக்ட் முடித்து விட்டதாலும் கல்லூரிக்கு  வருகை பதிவுக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலையில் இருந்தால் தேன்நிலா. அதனால் அவளால் தனது அன்னையுடன் நேரத்தை செலவிட முடிந்தது...

கல்லூரியில் அவளது வகுப்பு மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல பிளான் செய்தார்கள்...அவர்களது வகுப்பில் இவளை தவிர அனைவரும் வருவதாக கூறிவிட்டனர்... தேன்நிலா தான் வரவில்லை என்று அனைவரிடமும் கூறிவிட்டாள்..`

அவளுக்கு மனதில் ஒரு பயம் அவள் சென்றால் தனது அன்னையை யாரும் நன்கு பார்த்துக் கொள்ளமாட்டார்கள்,அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் தன்னிடம் கூறாமல் மறைத்து விடுவார்களோ என்று பயந்தாள்...

அவரது வகுப்பு மாணவர்கள் கயலிடம் முறையிட அவள் தேன்நிலாவின் நிலையை எடுத்துக் கூறி அன்னத்திடம் பேச கூறினாள்...

அவளது அறிவுரைப்படி அனைவரும் அன்று மாலையே அன்னத்தை சந்தித்து அன்னத்திடம் முறையிட,அன்னம் அவர்களிடம் அவள் வருவாள் என்று கூறி அனுப்பினார்...

தேன்நிலாவிடம் கெஞ்சி,கொஞ்சி,கோபப்பட்டு ஒரு வழியாக அவளை சுற்றுலா செல்ல ஒத்துக்கொள்ள வைத்தார்...

தனது தந்தையிடமும்,தேவியம்மாவிடமும் பல கட்டளைகளை பிறப்பித்து விட்டு தான் அவள் கிளம்ப தயாரானாள்...

அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை இந்த ஐந்து நாள் சுற்றுலா தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட போகிறது என்று தெரிந்திருந்தால் இந்த சுற்றுலாவிற்கு செல்ல அவள் ஒத்துக்கொண்டிருக்கவே மாட்டாள்...

நடக்கவேண்டியதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது...நடப்பது நடந்து தான் ஆகணும்...அதுவே தேன்நிலா வாழ்க்கையிலும் நடக்க ஆரம்பித்ததை யாராலும் தடுக்க முடியாது...தடுக்க முடிய போவதுமில்லை...(ஆப் ஸ்க்ரீன்ல விதி செய்யப் போற சதி...)

தேன்நிலா சென்ற மூன்று நாட்கள் கடந்து இருந்தன...நான்காவது நாள் காலை  பத்து மணியளவில் தங்களது கல்லூரியை வந்தடைந்தனர் அனைத்து மாணவர்களும்...

அவர்கள் சென்ற இரண்டு நாள் கழிந்த நிலையில் அவர்களுடன் வந்த பேராசிரியரின் தந்தை இறந்து விட அந்த பேராசிரியர் தான்  மட்டும்  ஊருக்கு கிளம்புதாகவும் கூற மாணவர்கள் அனைவரும் கிளம்பி அந்த பேராசிரியரது ஊருக்கு  அவருடன்  சென்று அங்கே அவருக்கு  அனைத்திலும் உதவியாய் இருந்துவிட்டு இன்று தான் ஊர் திரும்புகின்றனர்...

தனது கல்லூரியிலிருந்து தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஊரை வந்தடைந்தனர் தேன்னிலாவும்,கயல்விழியும்...

தனது ஊரில் இறங்கிய தேன்நிலாவின் உதடுகளில் மட்டும் இல்லை கண்களிலும்  சிரிப்பு தொலைந்து போனது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.