(Reading time: 13 - 26 minutes)

அவளுக்கு பின் இறங்கிய கயல் தேன்நிலா எங்கோ பார்வை பதித்தப்படி நிற்பதைப் பார்த்து அவளது பார்வை சென்ற திசையில் தனது பார்வையைப் பதிக்க அவளாலும் தனது பார்வையை நம்ப முடியவில்லை...

“என்னதான் உறவிறுந்தாலும்

        உன்னைதான் நெனைக்குறேன்...

இருந்தாலும் உசுறு இல்லாம

        என்னோமோ இருக்கிறேன்...”

தனக்கே இவ்வாறு என்றால் தனது தோழியின் நிலை என்று யோசித்தவள்...அவளது புறம் தனது பார்வையை திருப்பினாள்...

தேன்நிலாவின் பார்வை அங்கே தான் நிலைத்து இருந்தது..

அவளது இமைகள் கூட இமைக்க மறந்து போனது போல் கயலுக்கு தோன்றியது...

அவ்வாறு இருந்தது தேன்நிலாவின் நிலைமை...

தனது தோழியின் கண்கள் அங்கு இருந்த பிளக்ஸ்சிலும் அங்கு ஒட்டி இருந்த போஸ்டர்களிலும் இருப்பதை பார்த்த கயலுக்கு தனது தோழியை நினைத்து மனது கலங்கியது....

தன்னை நிதானப்படித்துக் கொண்டு கயல் "தேனு..." என்று தேன் நிலாவின் தோளைத் தொட்டாள்...தான் தொடுவது கூட தெரியாமல் நிற்கும் தனது தோழியைப் பார்த்த கயல் அவளை உலுக்க அவள் உலுக்களில் நினைவு பெற்ற தேன்நிலா கண்களில் கண்ணீருடன் தன் தோழியைப் பார்க்க..

.அவளது நிலைமையைப் புரிந்து வைத்திருந்த கயல்,"மனச தேத்திக்க தேனு..."என்று அவளை அணைக்க முற்பட அவளது கைகளில் இருந்து திமிறியவள்...தனது கைகளில் இருந்த பைகளை கீழேப் போட்டவள்,வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தாள்...

பகல் 12 மணி சூரியன் கொளுத்த அதனையும், தனக்கு இருந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் ஓடினால் தேன்நிலா...

அவளது கால்கள் நேராக பொய் நின்றது வேந்தனின் வீட்டை தான்...

அவளது கண்கள் முன் இருந்தவைகளை பார்க்கும் பொழுது நடப்பவைகள் அனைத்தும் உண்மையே என்று அவளுக்கு தோன்றியது..

தனது அன்னையும்,மாமாவும் இருக்கும் அந்த வீட்டின்  வாசலில் இருந்த வாழைமரம் அங்கு நடக்கும் சுபநிகழ்ச்சியை அறிவுறுத்துவதாக இருந்தது...

அவளது கால்கள் அதன் போக்கில் உள்ளே செல்ல அங்கு இருந்த சொந்தங்களின் கூட்டம் நடக்க போகும் சுபநிகழ்ச்சிக்கான நேரம் நெருங்குவதை உணரவைத்தது...

சமையல் பகுதியில் இருந்து வந்த வாசனை உணவுகள் தயாராகிவிட்டதை  அனைவருக்கும் உணர்த்தி அவர்களின் நாக்கின் சுவை நரம்புகளை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது...

இதில் எதிலும் லயிக்காமல் இருந்தது  தேன்நிலாவின் மனது...ஏன் சுற்றத்தைக் கூட மறந்துதான் போயிருந்தால்  அவள்...

“என்னை தான் அன்பே மறந்தாயோ...

        மறப்பேன் என்றே நினைத்தாயோ...

என்னையே தந்தேன் உனக்காக...

        ஜென்மமே கொண்டேன் அதற்காக...

நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால்

        தூங்க மாட்டேன்...”

எவ்வாறு அவளால் மறக்க முடியாமல் இருக்கமுடியும்...இப்பொழுது நடக்கபோகும் நிகழ்ச்சி அவளது மதி மச்சான்னுக்கு ஆனதல்லவா...அவனை அவளது வாழ்வில் இருந்து பிரிக்கும் நிகழ்வல்லவா நடக்கப்போகிறது... அவளால் எப்படி அதை தாங்கிக் கொள்ள முடியும்...

அவளது மதி மச்சானுக்கும் அவளது சித்தி மகள் வேல்விழிக்கும் இன்று நடக்கபோகும் திருமண ஒப்பந்த நிகழ்ச்சியை அவளால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்...

அவளது கண்களில் தயாராக  வர இருந்தன கண்ணீர் துளிகள்...

தனது அண்ணன் மகன் மற்றும் தங்கை மகளின் விஷேஷத்திற்காக சந்தோசமாக வருபவர்களை வரவேற்றுக்  கொண்டிருந்த  அன்னம் தனது மகளை அங்கு கண்டதில் சந்தோஷம் வந்தாலும்...ஊருக்கு சென்ற பெண் பேய் அடித்தது போல் வருவதை பார்த்தவர் அவளது அருகில் வந்தார்...

“தேனு...என்னடா...ஆச்சு...எதுக்குடா ஒரு மாதிரி இருக்க...எதாவது பிரச்சனையா போன இடத்துல...” என்று அன்னம் தேன்நிலாவை பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்க  அவளோ  அவரிடம் தனது வேதனையை கொட்டுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்...

தனது மனதை அழுத்தும் துன்பத்தை தன் அன்னையிடம் கொட்டி விட வேண்டும்  என்று ஏங்கியது...ஆனால் அவர் இதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ என்ற நினைப்பு அவளை உயிரோடு கொன்றது...

அப்படியே அன்னம் அவள் சொல்வதை கேட்டு அவளுக்காக அனைவரிடமும் பேசினாலும் அவளது சித்தியும்,அவளது மாமாவின் குடும்பமும்  அதனை ஏற்றுக் கொள்ளுவர்களா என்ற சிந்தனையின் விளைவுகளால் கிடைத்த பதில்கள்...அவளது மனதை நடுங்க செய்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.