அவளது முகத்தில் வந்துப்போன உணர்வுகள் அன்னத்தை பயம் கொள்ள செய்தது... அத்தனை உணர்வுகளையும் தனது மகளின் குரலில் பார்த்தால் அவர் என்ன உணர்வார்...
ஏன் தன் மகள் இவ்வாறு இருக்கிறாள் என்று அவர் யோசித்த நேரம் அதை தடை செய்யவென்று அங்கு வந்து சேர்ந்தான் அசோக்...
“அம்மா...ஒப்புபத்திரம் மாற்றிக்க போறாங்க வாங்க...”என்று அன்னத்திடம் கூற அவனது வார்த்தைகளுக்கு தலையசைத்தவரின் கண்கள் மீண்டும் தனது பெண்ணிடமே திரும்பியது...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
அவரது கண்கள் சென்ற இடத்தை பார்த்த அசோக் அதிர்ந்து தான் போனான்...அவளது காதலை பற்றி அவன் அறிவானே... அவள் இதனை எவ்வாறு தாங்குவாள் என்று அவன் யோசிக்காமல் இல்லை...
அவள் ஊரில் இல்லாதது அவனுக்கு நிம்மதியை தந்தது... ஆனால் அவள் எப்படி இங்கே என்று யோசித்தவனுக்கு அந்த காரணத்தை தெரிந்துக் கொள்வதை விட அந்த நிகழ்ச்சியை அவள் நேரில் பார்க்கும் சூழல் அமைந்துவிட்டதே என்று வேதனைக் கொண்டான்...
எவ்வளவு பெரிய கொடுமையான சூழ்நிலை தனக்கே தனக்கு சொந்தம் என்று நினைத்த ஒருவர் தனக்கு இல்லை என்ற நிலை வரும்பொழுது அதை உணர்ந்துக் கொள்ளுவதால் வரும் வலி எவ்வளவு கொடுமையானது...
அந்த நிலையில் அல்லவா இருக்கிறால் தேன்நிலா...அதை நினைதவனுக்கும் கூட வலித்தது...அந்த வலிகளுடன் அவன் அவளை நிமிர்ந்துப் பார்க்க அவனை குற்றம் சாற்றும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் தேன்நிலா...அந்த பார்வையில் நீங்கள் கூட என்னை ஏமாற்றிவிட்டீர்களே என்ற கேள்வி இருந்தது...
உள்ளே யாரோ அழைக்க எதில் இருந்து தப்பிப்பது போல அந்த இடத்தை விட்டு சென்றான் அசோக்...
அசோக் அங்கிருந்து போவதை பார்த்தவர் தனது மகளை இந்த நிகழ்ச்சி முடிந்தப் பிறகு விசாரித்துக் கொள்ளாமல் என்று நினைத்தவர் அவளையும் தனது கைகளில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார்...
அந்த வீட்டிற்குள் மருமகளாய் நுழைய நினைத்தவள் இன்று அந்த கனவுகளினை சிதைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நுழைந்து இருந்தால் அழையா விருந்தாளியகா...
அவள் நுழைந்த அடுத்த நிமிடம் அவளது கண்களில் விழுந்தது உதடுகளில் சிரிப்புடன் அங்கு உட்கார்ந்திருந்த அவளது மதி மச்சான்...
இன்னும் சிறிது நேரத்தில் வேறோருதவற்கு உரிமையாக போகும் அவளது மச்சான்...
அவளுக்கு அவனது உதடுகளில் மட்டுமே சிரிப்பு இருப்பதாய் தோன்றியது... அவளுக்கு புரியவில்லை காதல் கொண்டிருந்த மனதின் கானல் நீர் எண்ணங்கள் என்று...(அவன் தான் சந்தோஷமா இருக்கானே அப்படியே வந்த வழியா ஓடி போய்டு..)
அது அவளுக்கு முன்பே தெரிந்திருந்தால் அது மாதிரியான காரியங்களை அவள் செய்திருக்க மாட்டாள்...(என்ன செய்ய புத்தி மழுங்கி போச்சு...)
அங்கு தேன்நிலாவை பார்த்த மதிவேந்தனின் முகத்தில் எந்த வித உணர்வுகளும் இல்லை... தான் நினைத்ததை சாதித்துவிட்ட திருப்த்தி மட்டுமே அவனிடம் இருந்தது...
அதை தேன்நிலா கவனிக்க தவறினாள்...
ஒப்புபத்திரம் மாத்திக்கொள்வதற்கான நேரம் நெருங்க மாப்பிள்ளையின் பெற்றோர்களும்...,பெண்ணின் பெற்றோர்களும் ஊரின் முன்னே மாற்றிக்கொள்ள தயாரானார்கள்,அப்பொழுதுதான் தேன்நிலா யாரும் எதிர்பார்க்காத அந்த காரியத்தை செய்தால்...

காதலி காதலிக்க படுவாளா...
Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page
{kunena_discuss:1175}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.