(Reading time: 15 - 30 minutes)

தான் வானவரயரின் சன் என்று இன்னும் அவருக்கே தெரியாது என்றான் தீரன். யாழிசையை வைத்து வானவராயரையும் சந்திக்கனும் என்றும் அதற்குமுன் தன்னை அவரின் மகன் என்று அவர் அடையாளம் தெரிந்துகொள்ள என்னிடம் என் மாம் கொடுத்திருந்த அவர்களின் பாரம்பரிய நகையை யாழிசையிடம் கொடுத்து வானவராயரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நினைத்திருந்ததாகவும்.

மேலும் தான் இப்பொழுது வெளிபடையாக வானவராயரை சந்திக்க முடியாது என்றும் அதற்கு காரணம்  சி.என்.ஜி நிறுவனம் இந்தியாவிற்கு தன்னை  அனுப்பிய நோக்கத்தையும் கூற ஆரம்பித்தான்.

நான் ஒரு எகானமிக் ஹிட்மேன் ஆகத்தான் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டேன். என்னுடைய பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் நான் ஒரு அமெரிக்க பிரஜை நான் பிறந்தது படித்தது தொழில் செய்வது எல்லாம் அமெரிக்காவில். என்னை நான் ஒரு அமெரிக்கனாகத்தான் உணரமுடிந்தது இங்கு வருவதற்கு முன்புவரை என்னுடைய மூளையை பயன்படுத்தி நான் பிறந்துவளர்ந்த நாட்டின் வளத்தை அதிகரிக்க அங்கு இருக்கும் பணக்காரர்களின் மூளையாக செயல்பட்டேன். உலகின் கனிம வளங்களை தம்பிடிக்குள் வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் மடைதிறந்த வெள்ளம்போல் கொண்டுபோய் சேர்ப்பதில் என்னுடைய பங்கு மிகப்பெரியது .என்னுடைய செயலுக்கு பக்க பலமாக இருப்பது பன்னாடுநிருவனங்கள் அரசாங்கம் வங்கித்தலைமை  முதலியன .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இத்தகைய நிறுவனங்கள் சார்பில் பொருளாதாரராகிய நான் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு, "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்குறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைப்பதுதான் என் வேலை.

வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது. வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும், அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன  

ஆனால் தான் தனது பூர்வீக பூமியை அழிக்கும் இந்த செயலை செய்ய தனக்கு விருப்பமில்லை என்று சொன்னால் வேறு ஒருவனை கொண்டு இந்த அழிவுச் செயலை நடத்தி முடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அந்த செயலை தான் செய்வதாக ஒத்துக்கொள்வதுபோல் இங்கு வந்ததையும், 

பின்  சி.என்.ஜி உள்நோக்கத்தை வானவராயரைபோல் இந்த மண்ணின் மேல் பற்றுள்ள மக்களின் செல்வாக்கு மிக்க ஒருவரிடம் பகிர்ந்துகொண்டு அதை மக்களிடம் எடுத்துச்சென்று சி.என்.ஜி காலூன்றும் முன்பே மக்களின் புரட்சி மூலம் அவர்களை துரத்த நினைப்பதை கூற நினைத்தான்.

மேலும் தான் நேரிடையாக வானவராயரை சந்தித்து இதனை பகிர்ந்துகொண்டால் தன் மேல் ஒருகண் வைத்திருக்கும் சி.என்.ஜி நிறுவனத்தின்  கோபம் உங்களின் பக்கமும் திரும்பும் அதனால் உங்களை அழிவிற்கு நானே காரணமாகிவிடுவேன். எனவே தங்களுக்குள்ள உறவுமுறையை வெளிப்படையாக கூறமுடியாமல் மறைமுகமாக இதை என் அப்பாவிடம் தெரிவிக்க யாழிசையை நான் தேர்ந்தெடுத்ததாகவும் அவளிடம்  கூற நினைத்திருந்தேன்.

ஆனால் உன்னுடைய பிட் நோட்டிசை படித்த யாழிசை தனது மண்ணுக்கு துரோகம் நினைத்திருக்கும்  கயவனாக என்னை  நினைத்துவிட்டதால் அவளிடம் சமாதானமாக பேசமுடியாமல் கடத்திக் கொண்டுப்போய் தன் கஸ்டடியில் வைக்கும் நிலைமைக்கு ஆளானதாயும் கூறினான் தீரன்.

தனது நோக்கத்தை விளக்கிக் கூறி தான் அவளை தனது திட்டத்தில் இணைத்துக் கொண்டு தனக்கு அவளின் மேல் உள்ள காதலை அவளுக்கு உணர்த்தி அவளுடன் வாழ்கையில் இணையனும் என்று நினைத்ததுவரை எல்லாவற்றையும் கூறிய தீரன், எல்லாம் உன்னுடைய ஓர் பிட் நோட்டிசால் தலை கீழாக மாறிவிட்டதை உணர்ந்து கோபமடைந்தேன்.

மேலும் இப்பொழுது யாழிசை மூலம் தன்னை நல்லவிதமாக வானவராயருக்கு உணர்த்த முடியாது. உன்னால் பிளாப் ஆன என் பிளானை உன்னைவைத்தே பினிஷ் செய்ய என் இடத்திற்கு உன்னை கொண்டுவந்திருக்கிறேன் மேன்... என்றான் தீரன்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.