(Reading time: 8 - 15 minutes)

“என்னால முடிஞ்சா செய்றேன் . . சொல்லுங்க”

“என் வேலைல ஸ்டெரஸ் அதிகம். அமைதி தேடி வந்திருக்கேன். ஒரு வாரம் ஆசிரமத்துல ஸ்டே பண்ணலாமா?”

“தாராளமா தங்கலாம் ஆனா இங்க வசதி அதிகமில்ல உங்களுக்கு சரிபட்டு வருமா?” மென்மையாக பேசினார்

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல”

“சரி ஆசிரமத்துல தங்க . . உங்க பேரு விலாசம் கொடுக்கணும் . .” என்றார்  

“ஆஹ் எல்லா விவரமும் தரேன்” என்றான்

அவர் தன் மாணவர்களுடன் சென்றுவிட . . ஏனோ ஆகாஷ் மனதில் இங்கு வேறு ஏதோ சிக்கல்கள் பிரச்சனைகள் இருப்பதாக உணர்ந்தான். சுவாதி இதில் சம்மந்தபட்டிருக்கலாம் என தோன்றியது.

உடனே ஆசிரமத்தை அடைந்தவன் தான் அங்கு தங்க விருப்பம் கொண்டதையும் சுவாமிஜியிடம் ஒப்புதல் வாங்கிவிட்டதையும் கூறினான். அவர்கள் கொடுத்த படிவத்தை பூர்த்தி செய்து ஒரு வாரத்திற்கான பணத்தையும் கொடுத்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நினைவலைகள் அடங்க . . நிகழ்காலத்திற்க்கு வந்தவன். அறையை பூட்டிக் கொண்டு கீழே வந்தான். அவனுக்கு தினைமாவு கஞ்சி கொடுக்கப்பட்டது. குடித்தவனுக்கு அது உள்ளேயும் போகாமல் வெளியே துப்பவும் முடியாமல் தர்னா செய்ததை சிரமப்பட்டு முழிங்கினான். இன்னும் ஒரு வாரம் இதை குடிக்க வேண்டுமா என்ற சலிப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆசிரமத்தை சுற்றி வந்தான். அது மிகவும் பெரியதாக இல்லை. ஒரளவுக்கு மேல் உள்ளே போக அனுமதி இல்லை என்பதை தெரிந்துக் கொண்டான்.

மாடியில் இருந்து பார்த்த பெரிய அறையில் சிலர் மூலிகையை அரைப்பதும் பதப்படுத்துவதும் தெரிந்தது. அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. பின்னர் ஆர்வம் உள்ளவர்கள் தாங்களாகவே தங்களுக்கு தெரிந்த வேலைகளை செய்வதை கவனித்தான்.  

ஆகாஷ் நேற்று பார்த்த வினோத நபர்களை ஆசிரமத்தில் கண்டான். இவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என சிந்தித்த நொடிகள் கழிவதற்குள்  அவர்கள் வெளியே சென்றுக் கொண்டிருப்பதை கண்டான்.

அவ்விருவரை தொடர்ந்தான். வெளியே செல்லும் முன் ஆசிரமத்திறக்கு தெரிய படுத்த வேண்டும் என்பது அங்குள்ள விதி. மலையிலும் காட்டிலும் யாரும் தவறி சென்றுவிடக் கூடாது என்பதற்காக. ஆனால் அவர்களிடம் சொல்லிவிட்டு செல்வதற்குள் நேரம் கடந்து அவர்களை தவறவிடக் கூடாது என்பதால் சொல்லாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வந்த முதல் நாளே விதியை மீறும்படி ஆகிவிட்டதே என ஒருபுறம் மனம் சங்கடப்பட்டாலும். அவ்விருவர் மிகவும் முக்கியம் ஆயிற்றே.

காட்டுப் பாதையில் அவர்கள் லாவகமாக நடந்தனர். அதிலிருந்தே அவர்கள் அந்த இடத்திற்க்கு நன்கு பழக்கபட்டவர்கள் என்பதை புரிந்துக் கொண்டான். அவர்களை தொடர்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

மலைபாதைக்கு எதிர் திசையில் சென்றனர். அந்த காட்டு வழியில் மனித நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஒவ்வொரு செடியாக பிய்த்து முகர்ந்து பார்த்தவண்ணம் சென்றனர். ஓர் இடத்தில் அதிகமாக இருந்த செடிகளை அகற்ற அங்கே மூங்கில் கூடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் நிறைய இலை தழைகள் இருந்தன.

காட்டில் எதையே பரித்தனர் அதை அந்த மூங்கில் கூடையில் வேறு பல இலைகளின் நடுவே வைத்தனர். கிட்டதட்ட ஐந்து கூடைகள் இப்படி நிரப்ப பட்டன. 

நிரப்ப பட்ட கூடைகளை எடுத்து செல்ல தொடங்கினர். போக போக அடர்ந்த காட்டு பகுதியானது இரவா? பகலா? என தெரியாத அளவு இருள் சூழ்ந்து காணப்பட்டது. விலங்குகளின் விசித்திர சப்தம். அதனோடு மூலிகைகளின் நறுமணம். அடர்த்தியான மரங்கள் அச்சமூட்டுபவையாக இருந்தன.

எதிர் திசையில் நான்கு பேர் வர அந்த கூடைகள் கைமாறின. “யாருக்கும் தெரியாம எடுத்துட்டு போ . . லாரி ராத்திரி ஒன்பது மணிக்கு வரும் . .அதுவர இங்கயே யார் கண்ணுலயும் படாம இருங்க” என ஆசிரமத்தில் இருந்து சென்ற இருவரில் ஒருவன் வந்தவர்களிடம் அதட்டலாய் கூறினான்.

அவர்களும் சரியென தலையசைத்து ஓரிரு நிமிடம் பேசிவிட்டு சென்றுவிட்டனர். அந்த இருவரும் திரும்பி ஆசிரமம் அடையும் பாதையில் செல்ல தொடங்கினர்.

ஆகாஷை ஒரு கை பின் பக்கத்திலிருந்து பலமாக இழுத்தது. மற்றொரு கை அவன் வாயை பொத்தியது.

தொடரும் . .

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.