Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

நேரத்தோடு சாப்பிட்டு முடித்தவள் துணிகளை அடுக்க அறைக்கு சென்றாள். முதலில் தாராவின் அறையில் அவளுக்கு தேவையான அவள் பயன்படுத்தும் பொருட்களையும் துணிமணிகளையும் 2 பெட்டிகளில் அடுக்கி வைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள். அங்கும் தனக்கு தேவையானதை பெட்டியில் அடுக்கி வைத்தவள் தேவிக்காக வாங்கிய புடவையையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்கு அந்நேரம் முராரியின் நினைவு வரவே

”அட அவர் பாட சொல்லிக் கேட்டாரே நான்தான் பாடலை இப்ப பாடினா என்ன” என நினைத்தவள் உடனே அவனுக்கு ஃபோன் செய்தாள். ரிங் போனது அவன் எடுக்காமல் போகவும் 2 நிமிடம் காத்திருந்தாள், மறுபடியும் ஃபோன் செய்ய அவன் எடுக்காமல் போகவே அமைதியாக போனை வைத்துவிட்டு எழுந்து வெளியே செல்ல முயல அந்நேரம் ஃபோன் வரவும் ஓடிவந்து அந்த போனை எடுத்துப் பார்த்தாள் முராரி என இருக்கவே ஆசையாக ஃபோன் அட்டன்ட் செய்தாள்

”2 முறை உங்களுக்கு ஃபோன் பண்ணேன் தெரியுமா ஏன் எடுக்கலை” என உரிமையாக கோபித்துக் கொண்டாள் ராதா. அவளது பேச்சைக்கேட்டு திகைத்தவன்

”வேலையா இருந்தேன், ரைஸ்மில்லுல இருந்த மிஷின்கள் சத்தத்தில ஃபோன் ரிங் சவுண்ட் கேட்கலை மன்னிச்சிடு” என சொல்ல அவளோ

”பாட சொல்லிக் கேட்டீங்களே இப்ப பாடவா” என கேட்க

”இப்பவா இப்ப நான் வேலையா இருக்கேனே”

”வேற எப்ப பாடறது”

”நைட்ல பாடு”

“நான் நைட்லதான் அக்காவோட உங்க ஊருக்கு வர கிளம்பறேன்”

”ஓ சரி இரு ஒரு மணி நேரம் கழிச்சி நானே ஃபோன் பண்றேன், இந்த வேலையை முடிச்சிட்டு நிலத்துக்கு வந்துடறேன் அங்க ப்ரீதான் அப்ப ஃபோன் பண்றேன்” என சொல்ல அவளும் சந்தோஷமாகி

”சரி நான் காத்திருக்கேன்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். அவனோ அவள் காத்திருக்கேன் என சொன்னது அவன் மனதுள் மாற்றங்களை ஏற்படுத்த அலைபாயும் மனதை கட்டுக்குள்  கொண்டு வந்து தன் வேலைகளை விரைவாக முடிக்கலானான்.

ஒன்றரை மணி நேரம் கழித்து ராதைக்கு ஃபோன் செய்தான் முராரி அவளும் அவனது போனிற்காக காத்திருந்தவள் போல முதல் ரிங்லயே ஃபோன் எடுத்தாள்

”ஏன் லேட்டு”

“மன்னிச்சிடும்மா ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன், இப்ப ப்ரீதான் விடியறவரைக்கும் யாரும் என்னை தொல்லை பண்ண மாட்டாங்க நீ பாடு நான் கேட்கறேன்”

“என்ன பாட்டு பாடட்டும்”

“நேத்து பாடின மாதிரி பாடாம தமிழ் பாட்டா பாடு”

“கண்ணன் பாட்டு பாடவா”

“பாடு உன் விருப்பம் ராதா” என அவன் அன்பாக சொல்லவும், அவனது பேச்சில் இருந்த அன்பு கண்டு மெல்ல சிரித்தாள், அந்த சிரிப்பு மறுபக்கம் இருந்த முராரிக்கு கேட்டு குறுநகை புரிய ராதாவும் பாட்டு பாடத் தயாரானாள்.

”குழலூதும் எழில் காணவே கண்ணன்

குழலூதும் எழில் காணவே

சூழும் கோப்பியர்கள் முகம் நாணவே

கண்ணன் குழலூதும் எழில் காணவே

சூழும் கோப்பியர்கள் முகம் நாணவே

பதநிச ரிநிச தநி

பதமபகம ரிகசரி

நிசதநி பதநிச

கண்ணன் குழலூதும் எழில் காணவே

ஓடோடி ஓடோடி

கோடான கோடி தவம் செய்து உனை காண

கோடான கோடி தவம் செய்து உனை காண

கோவிந்தா என்றழைத்து

பிருந்தாவனம்தனில்

ஓடோடி வந்தேன் கண்ணா

கண்களை மூடியபடியே பாடியவள் முழுபாடலை பாடி முடித்ததும் கண்கள் திறந்துப்பார்க்க அவள் எதிரே வைகுந்தன் கோபமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்

மறுபக்கம் அமைதி நிலவுவதைக் கண்ட முராரியோ

”ஓ பாட்டு முடிஞ்சிடுச்சா, சும்மா சொல்லக்கூடாது ரொம்ப அழகா பாடிட்ட ஒரு நிமிஷம் நான் என்னையே மறந்துட்டேன் அழகா இருக்கு உன்னோ குரல்” என பாராட்ட அதைக்கேட்ட ராதாவோ மெல்ல இதழில் புன்னகை புரிய அதைப் பார்த்த வைகுந்தனோ கோபமாக

”ஏய் யார்கிட்ட ஃபோன்ல பேசி சிரிச்சிக்கிட்டு இருக்க, இதான் நீ படிக்கற லட்சணமா இரு இப்பவே நீ செய்றத அம்மாகிட்ட சொல்றேன்” என ஆவேசமாக கத்திவிட்டு அவன் வெளியே செல்ல ராதாவிற்கு பயமே வந்தது.

மறுபக்கம் வந்த குரலும் பேச்சையும் கண்ட முராரியோ கோபத்துடன்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாmahinagaraj 2019-01-19 13:00
வாவ் அழகு ஓவியம்... சூப்பர் மேம்... :clap: :clap:
நீங்க சொன்னதுல்ல நட்பு,காதல் சரி.. அது என்ன வெறுப்பு... :Q: :Q: எதாவது பயங்கரமானது நடக்க போகுதா...
ராதா,முராரி ரெண்டுபேரும் பேசரது கேக்க இனிமையா இருக்கு.. :roll: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாvijayalakshmi 2019-01-18 18:37
nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாராணி 2019-01-18 18:34
கதை விறுவிறுப்பா போகுது. ராதா மற்றும் முராரியின் பேச்சுவார்த்தையும் எண்ணங்களும் அருமை. தாராவின் எண்ணம் ஈடேறுமா கோவிந்தன் மற்றும் முராரி முதல் முறையாக ராதாவையும் தாராவையும் சந்திக்கப்போகிறார்கள் அவர்களின் சந்திப்பு எப்படியிருக்குமோ யாருடைய உறவு காதலாகுமோ யாருடைய உறவு வெறுப்பாகுமோ பொறுத்திருந்து பார்க்கலாம் அருமையான பகுதி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-18 17:18
all good but parkamale love varuma enna? just 2 mins pesina lova? no way radha look soft character but murari eppadi radhava parkamale aasaipadararu its ok. next epila love at first sighta rathavukkum tharavukkum ivangaloda santhippu enna feelings undakumnu theriyala adhai therindhu kolla adutha epikaga waiting nice epi (y)
Reply | Reply with quote | Quote
# கலாபக் காதலாAnjana 2019-01-18 13:42
Nice update.. murai and radha.. govindan tara nice pair.. eagerly waiting for next ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாSindhu ramesh 2019-01-18 08:22
Nice episode mam..... Murari ratha.... Govind thara... :cool: combination sooper.. :clap: .. Intha rendu jodiyum onnu seruma.... Illa antha vaigunthanuke ratha va Kalyanam panni vechiduvangala.,..... Let's see .... Waiting for next Update :hatsoff: :GL: a
Reply | Reply with quote | Quote
# superbSHIRUTHADEWI SETHAREN 2019-01-18 08:21
anannai tangaiyum ...thambiyai akka meet up..so eagerly waiting... murari will accept ratha..what happen vakunthan..what combination name .. rathey krishna change rathey murari ( krishna name also) semma sis. love you all story.something i cannot miss to read...but very less comment sorry for that..if have time comment you...waiting another week.. murari for kuladeiva pooja with ratha...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகாmadhumathi9 2019-01-18 06:25
wow nice epi :clap: (y) :thnkx: 4 this epi. :Q: radha,muraarikkulla natpu or kaadhal thaane varanum?ean veruppu vara kaaranam ennavaaga irukkum endru therinthu kolla adutha epiyai miga aavakaaga ethir paarkkirom.interesting ah kathai poguthu. :clap: :thnkx: :thnkx: :GL: :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top