Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசு

handsTogether

ன்று கருப்பையாவுக்கு நினைவு திரும்பிவிட்டது என்று சொன்னதும் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.

முதலில் சிவரஞ்சனி மட்டும் அவனைக் காணச் சென்றாள்.

சிறிது நேரத்திலேயே அவள் அலறல் சத்தம்தான் கேட்டது.

மருத்துவர்கள் விரைந்தனர். ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

அவனுடைய நண்பர்கள் வந்த பிறகுதான் உண்மை தெரிந்தது.

அவனுக்கு அதிகமாக அடிபட்டிருந்தது நுரையீரலில்தான். ஆனால் அவனை முதன் முதலில் கவனித்த மருத்துவர் அவசரத்தில் கவனிக்காமல் இதயப்பகுதியை  மட்டும் கவனித்து அறுவை சிகிச்சையும் செய்துவிட்டார்.

மற்ற மருத்துவர்கள் வந்த பிறகுதான் அவனது நண்பர்களுக்குத் தெரிய வந்தது.

கருப்பையாவின் நண்பர்கள் அந்த மருத்துவரை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் அவர் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்திலேதான்  அப்படி  நடந்து கொண்டார்.

அவர்களைத் தடுத்துவிட்டாள்.

அந்த மருத்துவர் அவளிடம் கையெடுத்துக் கும்பிட்டு  மன்னிப்புக் கோரினார்.

"டாக்டர். அவர் உங்களுக்கு ஒரு சாதாரண கேஸ். ஆனால் அவர் எனக்கு வாழ்க்கை."

இதை மட்டும்தான் பேசினாள். வேறு எதுவும் பேசவில்லை. அமைதியாகிவிட்டாள்.

"அண்ணன் எப்போதும் ஹெல்மெட் போட்டுக்கிட்டுத்தான் வண்டி ஓட்டுவார். தலைக்கவசம் உயிர்க்கவசம்னு சொல்வாங்க. ஆனால் அது என் அண்ணனோட உயிரைக் காப்பாத்தலையே. போருக்கு போகும்போது உடலை மறைத்துக் கவசம் போட்டுக்கிட்டு போறதைப் போல் உடல் முழுக்கவுமா கவசம் மாட்ட முடியும்."

சரவணன் கதறியழுதான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கருப்பையாவின் இறுதிப்பயணத்திலே அவன் எத்தனை பேரை சம்பாதித்து வைத்திருந்தான் என்று தெரிந்தது.

சிவரஞ்சனி தனி உலகத்திற்குச் சென்றுவிட்டாள். அவள் மனம் விட்டு அழவில்லை.

அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்.

அவனுக்கு பதினாறாம் நாள் காரியம் நடைபெறும்போது பிரபாகரன் மொய் வசூலித்தது கண்டு மற்றவர்கள் கொதித்துப்போயினர்.

ஒரு சகோதரனாய் அவன் எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது வீட்டுக்குத் தான்தான் மூத்தவன் என்று உரிமையை நிலைநாட்டிக்கொள்ள விரும்பினான்.

வீட்டு நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான்.

கருப்பையா ஏற்கனவே கார் வாங்குவதற்காக முன்பணம் செலுத்தியிருந்தான். அதற்குள் என்னென்னவோ  நடந்துவிட்டது.

அதைத் தெரிந்து கொண்ட பிரபாகரன் அந்த கார் வேண்டாம் என்று சொல்லி கருப்பையா கொடுத்த முன்பணத்தை வாங்கிவிட்டான்.

அதைத் தெரிந்து கொண்ட கௌதம் அவனிடம் சத்தம் போட்டான்.

"அதை கேட்க நீ யார்டா? அது என்னோட அண்ணன் காசு. அவர் இப்ப இல்லாதப்ப அடுத்து நான்தானே எல்லாத்தையும் பார்த்துக்கனும்."

"அவனோட பணத்துக்கு  மட்டும் உரிமை கொண்டாடுறியே. அதே மாதிரி என்னிக்காவது அவனோட பொறுப்பை  பகிர்ந்திருக்கியா?"

"அதை கேட்க நீ யாராடா? என் அண்ணனே எதைப் பத்தியும் பேசினதில்லை."

அவனுடைய எடுத்தெறிஞ்ச பேச்சைக் கண்ட கௌதமுக்கு இதை அ ப்படியே விடக்கூடாதுஎன்று தோன்றியது.

கருப்பையாவும், சரவணனும் கணக்குப் பார்க்காமல் உழைத்துச் சேர்த்ததை எந்தவித சிரமமும் பாராமல் தான் அனுபவிக்க நினைப்பவனை என்னவென்று சொல்வது?

ஏற்கனவே பெரியவர்கள் சொத்தைப் பிரித்துக்கொடுக்காதது பிரபாகரனுக்கு வசதியாகப் போயிற்று.

ஆனால் அவனுக்குத் தெரியாத ஒன்று உண்டு. அது ஏற்கனவே சண்முகம் சொத்தைப் பிரித்துஉயில் எழுதி வைத்துவிட்டார்.

ஆனால் தங்களுக்குப் பிறகுதான் அதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று  சொல்லியிருந்தார்.

கௌதம் சரவணனிடம் பேசிவிட்டு சொத்துப் பிரிவினைப் பற்றிய பேச்சை எடுத்தான்.

"அண்ணா போய் கொஞ்ச நாள் கூட ஆகவில்லை. அதற்குள் இதைப் பத்தி பேச்சு ஆரம்பிக்கனுமா அண்ணா."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கௌதம் சரவணனைப் பார்த்து அவனை மாதிரியே பிரபாகரனும் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினான்.

ஆனால் அவனால் ஏக்கப்பட மட்டும்தான் முடிந்தது.

வக்கீலை வரச் சொல்லுவதற்கு முடிவெடுத்த பிறகு கவிதாவிடமும் சொல்லி அவளையும் வரச்சொன்னான். அவளும் எதற்கென்று தெரியாமல் தன் கணவனுடன் வந்துவிட்டாள்.

வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் கூடினர்.

பிரபாகரனுக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுsaaru 2019-03-01 06:58
Sad raasu
Reply | Reply with quote | Quote
# Nee irundhal naan iruppenAruna 2019-02-25 20:14
Superb narration mam :hatsoff: it hurts while reading... :sigh:
Reply | Reply with quote | Quote
# RE: Nee irundhal naan iruppenRaasu 2019-02-27 19:31
Thank you Aruna
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுAdharvJo 2019-02-25 19:59
:hatsoff: to you rasu ma'am...I know it would sad to narrate such brutally painful moments so very realistically... Frankly after 2nd page of previous epi I didn't dare to read the remaining pages :yes: ninga than heart-i squeeze paniduvingale :sad: hurting!! But series oda positive side makes me continue to read. Hope no more tragedies :yes:
:hatsoff: to ur frnd who inspired u to write this. Indha mathiri message ellam next time short story la sollidunga. Miss BB! Good thing series jet vegathula move aguradhu :)

Thank you!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுRaasu 2019-02-27 19:30
மிகவும் நன்றி அதர்வ். கண்டிப்பாக அடுத்த கதையில் எந்த கதை மாந்தரையும் நான் சாகடிக்கமாட்டேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுAdharvJo 2019-02-27 20:17
:dance: :dance: :dance: Subha ma'am embuttu sandhoshama irukku theriyumgala :D :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுrspreethi 2019-02-25 18:23
Nice update... Sila katchigala padikumbodhea namaku ivlo kashtama irukkea idhupola soozhal la irukavanga nilai yevlo vedhanai... :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுRaasu 2019-02-27 19:26
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுmadhumathi9 2019-02-25 18:12
:clap: really touching epi. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுRaasu 2019-02-27 19:25
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுmahinagaraj 2019-02-25 17:58
எவ்வளவு அழகான எபி தோழி.. :clap: :hatsoff: :clap:
ரொம்ப அற்புதமா இருக்கு ... :GL:
நினைவுகள் உள்ளவரை மரணம் என்பது உடலுக்கு மட்டுமே.. :yes: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுRaasu 2019-02-27 19:24
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுதீபக் 2019-02-25 17:22
Super mam story really a heart touching and emotional one. Really made me cry.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசுRaasu 2019-02-27 19:21
Thank you Deepak.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top