Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

”அப்பா நான் 3 நாள் லீவு, நீங்க நிலத்தை பார்த்துக்குங்க” என சொல்ல அவரோ

”உனக்காக என்னவெல்லாம் செய்றேன் ஆனா கடைசியில பலன் இல்லைன்னு வையேன், எனக்கு கோபம் வந்துடும் முராரி”

”அப்படி எதுவும் ஆகாதுப்பா, 3 நாள் இருக்கே அதுக்குள்ள எப்படியாவது ராதா மனசுல நான் இடம்பிடிப்பேன்”

“அவள் என்கிட்ட வந்து முராரி வேணும்னு சொன்னாதான் என்னால அவள் வீட்ல போய் பேச முடியும் புரியுதா, அவளை கட்டாயப்படுத்தினா வேலைக்கு ஆகாது, ஏதோ நீ ஆசைப்பட்டேங்கறதுக்காக இவ்ளோ தூரம் இறங்கி வரேன், இல்லைன்னா நீ செய்றதை பார்த்துக்கிட்டு நான் சும்மாயிருக்க மாட்டேன் முராரி”

அப்பா என்னை நம்புங்க இப்பவும் சொல்றேன், ராதா இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே கிடையாது, எனக்கு அவள் வேணும், இந்த வீட்டுக்கு மருமகளா ராதா வந்தாள்னு வைங்க நிச்சயம் நீங்க சந்தோஷப்படுவீங்க ராதா போல நல்ல மனசு உள்ள பொண்ணு நீங்க எங்க தேடினாலும் கிடைக்காதுப்பா”

“ஆமாம் ராதா நல்ல பொண்ணு, அவள் இந்த வீட்ல இருந்தா சந்தோஷத்துக்கு பஞ்சமிருக்காது, அந்த காரணத்தாலதான் நான் உன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காம அமைதியா இருக்கேன். இல்லைன்னா வீட்டுக்கு வந்த விருந்தாளிங்ககிட்ட நீ தப்பா நடந்துக்கறேன்னு சொல்லி உனக்கு தண்டனை கொடுத்திருப்பேன்”

“அப்பா கவலையேப்படாதீங்க என் காதல் ஜெயிக்கும்”

“என்னோட நிபந்தனைக்கு நீ கட்டுப்பட்டுதானே இருக்க, இல்லை மறந்துட்டியா வேணும்னா ஞாபகம் படுத்தவா”

“ஞாபகம் இருக்குப்பா ஒருவேளை ராதா மனசுல என்னால இடம் பிடிக்க முடியலைன்னா நீங்க கைகாட்டற பொண்ணை நான் கல்யாணம் செஞ்சிக்கனும் அதுதானே”

“ஆமாம்”

“அதான் நான் அதுக்கும் சம்மதிச்சிட்டேனே, பொண்ணு என்ன ரெடியாவா இருக்கு பார்த்துக்கலாம்பா”

“பொண்ணை நான் ஏற்கனவே பார்த்து வைச்சிட்டேன், அதுக்குள்ள நீ ராதான்னு சொல்லவும்தான் பொறுமையா இருக்கேன்”

“அப்படியா யார்ப்பா அந்தப் பொண்ணு”

“எதுக்கு அவள்ட்ட பேசி விரட்டறதுக்காக ஒண்ணும் வேணாம், முதல்ல ராதா மனசுல இடம் பிடிக்கற வழியைப்பாரு. ஹரிஹர வம்சத்தைச் சேர்ந்தவன் ஒரு பொண்ணுகிட்ட முறையில்லாம நடந்துக்க கூடாது, எந்த கெட்டப்பேரும் உனக்கும் அவளுக்கும் வராம பார்த்துக்கடா அவ்ளோதான் சொல்லிட்டேன் சரி நான் கிளம்பறேன்” என சொல்லி அவர் எழுந்து நிலங்களை பார்க்கச் சென்றுவிட முராரியோ கவலையாக இருந்தான்

”எந்த கேப்ல அப்பா எனக்கு பொண்ணு பார்த்திருப்பாரு, ரெடியா ஒரு பொண்ணை பார்த்து வைச்சித்தான் என்கிட்ட நிபந்தனையே போட்டிருக்காரு, அது தெரியாம நானும் மாட்டிக்கிட்டேனே, இருந்தாலும் பரவாயில்லை எனக்கு நம்பிக்கையிருக்கு நிச்சயம் ராதா மனசுல நான் இடம்பிடிப்பேன்” என நினைத்துக் கொண்டு இருந்தவன் முன் வந்து நின்றாள் ராதா அவளைக் கண்டதும் அமைதியாக எழுந்து நின்றான்

”சொல்லு ராதா”

“டான்ஸ் கத்துக்கலையா”

“கத்துக்கறேன் எங்க இங்க ஹால்லயே கத்துக்கவா”

“இங்க வேணாம் வேலைக்காரங்க வேலை செஞ்சிக்கிட்டு இருப்பாங்க நாம ரூமுக்கு போலாம்”

“உனக்கு பரவாயில்லையா”

“ஏன் என்கிட்ட தப்பா நடந்துக்குவீங்களா”

“சே சே இல்லை கேட்டேன்”

“அப்புறம் என்ன எனக்கு என் மேல நம்பிக்கையிருக்கு, நீங்க என்ன செஞ்சாலும் நான் மயங்கமாட்டேன் வாங்க” என சொல்லி அவள் முன்னால் செல்ல அவள் பின்புறமே காந்தம் ஈர்க்கப்பட்டது போல நடந்துச் சென்றான்.

அவளது அறைக்குள் சென்றதும் கட்டில் முனையில் அமர்ந்தவள் அவனைப் பார்த்து

”ஒரு முறை நேத்து கத்துக்கிட்டத ஆடிக்காட்டுங்க” என சொல்ல அவனும் தனது சட்டையை கழட்ட ஆரம்பிக்கவே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”என்ன செய்றீங்க” என ராதா அலற

”சட்டயை கழட்டறேன்”

“அதான் எதுக்கு”

“டான்ஸ் ஆடறப்ப வேர்வையில நனைஞ்சிடும் ராதா அதான்” என செல்லியபடியே சட்டையை கழட்டி வைத்துவிட்டு அவள் முன் நின்றான். நேற்றாவது பனியனுடன் நின்றான் இன்று வெறும் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நிற்கவே ராதாவிற்கு கூச்சமே வந்தது

”என்ன இது இப்படி நிக்கறீங்க பனியன் போடலையா”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாராணி 2019-03-29 12:59
கதை விருவிருப்பாக செல்கிறது ராதாவின் திட்டத்தால் பிரச்சனை வருமோ
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாSrivi 2019-03-28 22:55
Aaha.. ennadhu idhu .. cool update though
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாvijayalakshmi 2019-03-28 20:00
interesting story kalakkala irukku epi pavam murari radha kitta maati kittan idha vachu inime enna nadakumo avangalukkula
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாmadhumathi9 2019-03-28 20:00
wow really fantastic epi. :clap: (y) hey :dance: radhaavin manathilum muraari iruppathu mikka magizhchi. :grin: :-)
But radhaavin appa,athai ivargalai ellaam samaalithu eppadi ondru sera pogiraargal :Q: romba interesting aaga poguthu kathai.egarly waiting 4 next epi. :thnkx: :thnkx: big :thnkx: 4 big epi. :-) happy.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாsasi 2019-03-28 20:08
Quoting madhumathi9:
wow really fantastic epi. :clap: (y) hey :dance: radhaavin manathilum muraari iruppathu mikka magizhchi. :grin: :-)
But radhaavin appa,athai ivargalai ellaam samaalithu eppadi ondru sera pogiraargal :Q: romba interesting aaga poguthu kathai.egarly waiting 4 next epi. :thnkx: :thnkx: big :thnkx: 4 big epi. :-) happy.

நன்றி மது எப்படியோ உங்க பிசி லைப்ல எனக்காக நேரம் ஒதுக்கி கதையை படிச்சி கமெணட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி கதையை இன்னும் விருவிருப்பா ஆக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் அதுக்காக பல ட்விஸ்ட்டுக்கள் கதையில சேர்க்கலாம்னு இருக்கேன் மதி கண்டிப்பா நீங்க படிக்கனும் குட்நைட்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 12 - சசிரேகாmadhumathi9 2019-03-29 12:55
:yes: we are egarly waiting for more twist. (y) :thnkx: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top