(Reading time: 14 - 28 minutes)

யாதவி கல்லூரிக்கு வரும் வழியில் சாத்விக் அவளுக்காக காத்திருந்தான். நேற்று தான் அவளை பற்றி அவனிடம் சொல்லியிருந்தாளே, அதை வைத்து இப்போது அவளை காண காத்திருந்தான்.

இப்படி செய்யலாமா? இது தவறில்லையா? என்று யோசித்தாலும் பண்ணை வீட்டில் தந்தை எப்போதும் இவனது அடுத்த படம் குறித்து மற்றவர்களோடு உரையாடுவதிலேயே இருக்க, இவனுக்குமே அங்கிருக்க பிடிக்கவில்லை.

ஒரு படம் நடித்து முடித்து அது இன்னும் வெளிவராத நிலையிலும் கூட, அவனால் சுதந்திரமாக வெளியில் சுற்றவும் முடியவில்லை. பொதுவாக அதை அவன் விரும்பவும் மாட்டான். நேற்று யாதவியுடன் இருந்த அந்த சில நிமிடங்கள் அவனுக்கு மகிழ்ச்சியாக கழியவே, அவளுடன் சிறிது நேரமாவது பொழுதை கழிக்க வேண்டும் என்று வந்திருந்தான்.

அதுவும் மற்றவர்களுக்கு தன்னை கண்டால் உடனே அடையாளம் தெரியாதப்படி கண்ணில் கூலர், தலையில் தொப்பி அணிந்து, முகத்தை கைக்குட்டையால் கட்டியப்படி தன் பைக்கின் அருகில் நின்றிருந்தவன், யாதவி நடந்து வரவும் அவளை பார்த்து கையசைத்தான்.

முதலில் யாரிவன் என்று விழித்தவள், பின் அருகில் வரவும் சாத்விக் கைக்குட்டையை கழட்ட, அடையாளம் கண்டுக் கொண்டவள் “ஹாய்..” என்று கையசைத்து அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

தெரிந்த விபாகரனிடம் பேச கூட தயங்கியவள், நேற்று சில நிமிடங்கள் தான் பார்த்திருப்பாள். இதற்கும் அவன் யார்? என்ன செய்கிறான்? ஏழையா? பணக்காரனா? என்றுக் கூட தெரியாது. இருந்தும் அவனிடம் பேசினாள். எந்த நேரம் என்ன செய்வாள்? எப்படி நடந்துக் கொள்வாள்? என்பதை கணிக்கவே முடியாது.

இப்போது கூட சாத்விக் எப்படியோ இரண்டு மூன்று வயது தான் அதிகம் இருப்பான் என்பதால் இயல்பாக எழுந்த நட்புணர்வா? இல்லை அவனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற இரக்கமா? இல்லை பார்ப்பதற்கு ஹீரோ லுக்கோடு அழகாக இருந்ததால் ஏற்பட்ட ஈர்ப்பா எது என்று தெரியாமலேயே அவனோடு பேசினாள்.

“அன்னைக்கு அப்புறம் உனக்கு என்ன பதில் சொல்லி அனுப்பினாங்க..” என்று அவள் கேட்க,

விரல்களை சேர்த்து கட்டை விரலை நிமிர்த்தி பின் கவிழ்த்து “ஊத்திக்கிச்சி..” என்றான்.

“கவலைப்படாத சீக்கிரம் உனக்கு சான்ஸ் கிடைக்கும்.. ஆமாம் நீ எந்த ஊரு..”

“சென்னை..”

“ம்ம் எப்போ ஊருக்கு போகணும்..”

“பர்ஸ்ட் டைம் பாண்டிச்சேரி வந்திருக்கேன்.. கொஞ்ச நாள் சுத்தி பார்த்துட்டு தான் போவேன்..” என்றான்.

அதற்குள் கல்லூரி அருகே வரவும் அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள். அதன்பின்பும் இருவரும் இதுபோல் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அடிக்கடி அவன் திரைப்படத்தில் வரும் பாடலையே அவள் வாய் முனுமுனுத்துக் கொண்டிருக்க,

“ஆமாம் இது எந்த படத்தோட பாட்டு.. யார் நடிச்சது..” என்று தெரியாதது போல் கேட்டான்.

“இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகல.. அடிக்கடி ரேடியோல இந்த பாட்டு போடுவாங்க.. யாரோ சாத்விக்னு ஒரு நியூ ஆக்டர் நடிச்ச படமாம்.. ப்ரண்ட்ஸ் சொன்னாங்க..” என்றாள்.

இவ்வளவு தகவல் தெரிந்திருக்கிறது, ஆனால் என்னை தெரியவில்லையே எப்படி என்று குழம்பினான். இதுவரை அவளிடம் அவனை அடையாளம் காட்டிக் கொண்டதில்லை, அவள் பேரைக் கேட்ட போது கூட, சது என்று தன் பெயரை சுருக்கி தான் சொல்லியிருந்தான்.

“ஹை என்னை கூட அம்மா யதுன்னு தான் கூப்பிடுவாங்க.. யது சது மேட்ச் ஆகுதுல்ல..” என்று சொல்லி அவள் சிரித்த போது, அவன் மனதில் இதமான மழைச்சாரல் வீசியது.

“ஆமாம் நீ சாத்விக்கை பார்த்ததில்லையா?” என்று அவன் கேட்க, அவள் கையிலிருந்த சாதா அலைபேசியை எடுத்து காண்பித்தாள்.

அது அப்போது தான் நடுத்தர குடும்பத்தில் ஸ்மார்ட் போன் சிறிது சிறிதாக புகுந்த காலம், அதிலும் அதிக பயன்பாடுகள் நிறைந்த ஸ்மார்ட் போன் எப்படியும் பத்தாயிரத்தை தாண்டும்,

அந்த சமயத்தில் ஆளுக்கொரு ஸ்மார்ட் போன் வைத்து சீன் காட்ட சில விலை குறைந்த சைனா செட்டுக்களையாவது வாங்கி விடுவார்கள். ஆனால் பரிட்சைக்கு பணம் கட்டவே திண்டாடும் ரத்னா மகளுக்கு எப்படி ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுப்பார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தந்தையிடம் லெகங்கா கேட்டது போல் ஒரு சைனா செட் ஸ்மார்ட் போனாவது கேட்கலாம், ஆனால் அதற்கும் ரத்னா தடைவிதித்து விட்டார். படிக்கும் காலத்தில் சாதா அலைபேசியே போதும் என்று சொல்லிவிட்டார். ரத்னா மகளுக்கு எவ்வளவு அளவு செல்லம் கொடுப்பாரோ, அதே அளவு கண்டிப்பும் காட்டுவார்.

அவள் தோழிகள் தன் தந்தையிடமோ இல்லை சகோதரனிடமோ இருந்து ஸ்மார்ட் போன் வாங்கி, இரண்டு மூன்று நாட்களுக்கு இண்டர்நெட்டுக்கான ரீசார்ஜ் செய்து யூட்யூபில் இப்படி புதுப்படங்கள் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்வார்கள். சில பேரிடம் அலைபேசி இல்லையென்றாலும் கூட தோழிகளுடன் இணைந்தாவது அதை பார்த்து விடுவார்கள். ஆனால் அப்படி கூட பார்ப்பதை யாதவி அவமானமாக கருதுவதால் அவள் அந்த நேரம் தோழிகளிடம் இருந்து ஒதுங்கியே இருப்பாள்.

வீட்டிலும் அடிக்கடி பழுதாகும் பழைய தொலைக்காட்சி என்பதால் அதிலும் நிறைய நிகழ்ச்சிகள் பார்க்கமாட்டாள். அனைத்து புத்தகங்களில் இருக்கும் சினிமா செய்திகளை கரைத்து குடிக்கும் புத்தக புழுவாகவும் அவள் இல்லாததால் அவளுக்கு சாத்விக் பற்றி தெரியாமலேயே போனது.

அதை கேட்டவனுக்கோ அவளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்கும் ஆசை வந்தது. ஆனால் அவனைப் பற்றி அவளிடம் தெரிவிக்காததாலும், அதே சமயம் அந்த அளவுக்கு அவனுக்கு உரிமை இல்லை என்பதாலும், அவள் படிப்பை குறித்த அக்கறை அவனுக்கு இருந்ததாலும் அந்த ஆசையை கைவிட்டான்.

அவன் தான் சாத்விக் என்பதை அவளிடம் சொல்லாமலே அவளோடு பழகுவதில் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்க, அவளிடம் அவன் அப்படியே நடித்துக் கொண்டிருக்க, ஒருநாள் அவன் தான் சாத்விக் என்று தெரிந்துக் கொண்டவளுக்கோ அதை நினைத்து கர்வமாக இருந்தது.

மையல் தொடரும்..

Episode # 18

Episode # 20

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.