(Reading time: 7 - 13 minutes)

“நல்லது.  தாங்கள் இருவரும் உதய்ப்பூர் வடக்கே உள்ள நிலவரம் அறிந்து வரவேண்டும்.  அங்கே மொஹம்மதியர்கள் உண்மையகாவே படைகளை விலக்கிக் கொண்டுள்ளாரவென்று தெரியவேண்டும்.  இளவரசி அனுப்பிய மற்ற வீரர்களில் இருவர் பாதேப்பூர் சிக்ரி சென்று கண்காணித்து வரவேண்டும்.  உங்களோடு நான்கு வீரர்களை அழைத்துச் செல்லுங்கள்.  அங்கே ஒற்றறிந்து செயதிகளை மற்ற வீரர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டும்.  இயன்ற வரை வாய்மொழிச் செய்திகளே பரிமாறப்படட்டும். என் உத்தரவு வரும் வரை தங்கள் ஒற்றறி தலை நிறுத்த வேண்டாம். “

வீரர்கள் சம்மதமாகத் தலையசைத்தனர் ஒருவன் மட்டும்

“தளபதி அவர்களே,  இதை மகராஜும் செய்கிறாரே.  தாங்களும் இதே செயலில் ஈடுபட்டு இருப்பதன் காரணம் அறியலாமா? “  என்று கேட்டான்.

“மஹராஜ்ஜிற்கு கிடைக்கும் தகவல்கள் தாமதமாக இருப்பதாக தோன்றுகிறது.  காரணம் அறிய விரும்புகிறேன்.  தகவல்களில் முழு விவரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை . தற்போது உங்கள் இருவருக்கும் என் நோக்கம் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். “

“புரிந்து கொண்டோம் யுவராஜ் “  என, 

“யுவராஜ் வேண்டாம்.  உங்களைப் போல் ஒருவன் தான் நான்.  தளபதி என்றே அழையுங்கள்” என்றான் ப்ரிதிவி.

வீரரகள் கிளம்பவும்,

“உங்களோடு அழைத்துச் செல்லும் வீரர்கள் தவிர மற்றவர்களை மகாராஜ் மற்றும் இளவரசி பாதுகாப்பிற்கு செல்லட்டும்.  யார் எங்கே சென்றாலும் இவர்களின் பாதுகாப்பு எல்லைக்குள் இருக்குமாறு அவர்களுக்கு உத்த்ரவிட்டு விடுங்கள். “

“உத்தரவு “ என்றுவிட்டு கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் ப்ரித்வியின் எண்ணங்கள் முழுதும் அன்று மாலை ராணாவைப் பார்க்க வந்த வீரனைப் பற்றியே சிந்தித்தது.

மறுநாள் அதிகாலை ராணாவின் பேரிகை முழங்க வெகு வேகமாக அணி திரண்டனர் ராணா படை veerargal.  பார்த்துக் கொண்டிருந்த ப்ரிதிவிக்கு திருப்தியாக இருந்தாலும்,  ஏனோ மனம் பதைத்துக் கொண்டுதான் இருந்தது.

முதல்நாள் இரவு பேசியபடி படைகளை உதய்பூர் நோக்கி நகர்த்தாமல் அற்புதாரண்ய மலை மேல் நகர்த்தவும் வீரர்கள் குழம்பி போயினர்.  என்றாலும் ராணா முதலில் நடக்கவே அவர்களும் பின்பற்றினர்.

மலைப் பாதைக் கடுமையாக இருந்ததால் வீரர்கள் சோர்ந்து போயினர்.  முதல் நாள் ஆட்டத்தின் விளைவு வேறு இன்னும் பலவீனப்படுத்தி இருந்தது.

நண்பகல் வேளையில் எல்லோரும் சோர்ந்து விட,  ராணா மட்டுமே எதிலும் கவனம் கொள்ளாமல் ஏதோ சிந்தனையில் இருந்தார்.

இளவரசி வீரர்களின் சோர்வை உணர்ந்தவளாக,  தன் பெரிய தந்தையின் சிந்தனையைக் கலைத்தாள்.

கிரண் தேவி இன்றைக்கு ராணாவின் அருகே புரவியோடு வந்து கொண்டிருந்தாள்.  அவரின் சிந்தனையின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாதவளாக

“கா ஹூ “ என்று அழைத்தாள்.

அவளின் அழைப்பில் சிந்தனை கலைந்து அவள் புறம் ராணா திரும்பி னார்.

“சொல் தேவி “

“காஹூ,  வீரர்கள் களைத்து விட்டனர்.  அடுத்து வரும் ஓடை அருகில் இளைப்பாறலாமா?

“அதற்கு உள்ளாகவா  ? என்று வினவிய ராணாவும்,  “ஒ உச்சி வேளை வந்து விட்டTu?  எல்லோரும் இளைப்பாறட்டும் “ என்றுவிட்டு தன்  சேட்டேக்கூடன் தனியே நடந்தார்.

அவரின் மெய் காப்பாளர்ளோடு  ப்ரிதிவி ராஜ் அனுப்பிய வீரனும் செல்லக் கண்டு ப்ரித்வி ராஜ் நிம்மதி அடைந்தான்.

வீரர்கள் ஒரு  ஓடையில் இறங்க,  அரச குடும்பப் பெண்கள்  வேறு பக்கம் இறங்கினர்.  அவர்கள் கூட்டமாக இறங்கவே அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை நீங்கியவனாக தன் களைப்பைப் போக்கத் திரும்பினான்.

அப்போது சட்டென்று ஒரு எண்ணம்.  இளவரசியின் முகம் காணலாமே.  தோன்றியவுடன் இளவரசியைக் கண்களால் தேட,  ராணாவைப் போல் இளவரசியும் தனிப் பாதையில் சென்று கொண்டிருந்தாள்.

இளவரசியின் பாது காப்பின் நிமித்தமும்,  அவளின் முகம் காணும் நோக்கில் ப்ரித்வி இளவரசியைப் பின்  தொடர்ந்தான்.

இளவரசியும்  எச்சரிக்கை யோடு தான் நடந்தாள்.

ஆனாலும் ஓடைக்கு அருகில் ஒரு மீட்டர் இருக்கும் போது இளவரசியின் அருகில் ஒரு அம்பு பறந்து இருந்தது.

அப்படியே ஆடி ப் போய் நின்றான் ப்ரித்வி.

ஹாய் பிரெண்ட்ஸ்,  லேப்டாப் இல்லாம மொபைலில் type செய்த  அத்தியாயம் இது.   பிழைகள் இருந்தா மன்னிக்கவும்.   படிச்சு கமெண்ட் செய்யவும் 

தொடரும்!

Episode # 18

Episode # 20

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.