(Reading time: 11 - 22 minutes)

“இன்னும் இந்தப் பிரின்ச விடலையா நீ? யாராவது கேட்டா எந்த நாட்டுக்கு நீ இளவரசன்?” என்று கேட்டு தர்ம அடி கொடுக்கப் போகிறார்கள்?”

“அடப் போங்க பாஸ். அத எல்லாம் ஈஸியா சமாளிக்கலாம்”

“எதை? தர்ம அடி வாங்குறதையா?

“மச். அப்படி இல்லை. நீ எந்த நாட்டுக்கு இளவரசர்ன்னு கேட்டா, இந்நாட்டு இளவரசர்ன்னு சொல்லிடு” என்றாள்.

“அது எப்படின்னு கேட்பாங்களே?

“ஹ. அதுக்குதான் இந்த ஆல் இன் ஆல் அழகு ராணி வேணுங்கறது. “ என்று ‘தன்னைத் தானே கலாயித்தவள்,

“உங்ககிட்டே யாரவது எப்படி நீங்க இளவரசர்ன்னு கேட்டா, பாரதியார் தான் சொல்லிருக்கார். “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” ன்னு. நான் அவ்ளோ வயசானவன் இல்லை. அதான் இளவரசன்னு சொல்லிடுங்க” என்றாள்.

அவள் பேசியதைக் கேட்டு கல கலவென்று சிரித்த ப்ரித்விராஜ்

“அடிப்பாவி. எதுக்கு எல்லாம் பாரதியார இழுக்கிற? அவர் மட்டும் உசிரோட இருந்தா அவர் பேனாவையும், மையையும்  தூக்கி ஆத்தில் வீசி எறிந்சுருவார்”

“உங்களுக்குத்தான் விவரம் பத்தலை பிரின்ஸ். நீங்க சொல்ற மாதிரி பேனாவைத் தூக்கி எறிஞ்சுட்டு, மொபைல்ல அழகா வடிவேலு டெம்ப்ளேட் செட் பண்ணி மீம்ஸ் போட்டு அதை வச்சே அகில உலக மீம்ஸ் கிரியேட்டர் சங்கத் தலைவர் ஆகிடுவார்.”

அவள் கூறியதில் மேலும் சிரித்த ப்ரித்விராஜ்

“போதும் தாயே. போதும். இதுக்கு மேலே சிரிக்க முடியல. “ என்றான்.

அப்போது ஒவ்வொருவராக வரத் தொடங்க, இருவரும் அவரவர் பிரெண்ட்ஸ் கூடச் சேர்ந்து கொண்டனர்.

பிரேக் பாஸ்ட் முடித்தவுடன், முதலில் நேராக தில்வாரா கோவில்களுக்குச் சென்றனர்.

தில்வாரா என்பது ஜைனக் கோவில்களின் கூட்டமைப்பு ஆகும். முழுக்க வெள்ளை நிற சலவைக் கற்களால் கட்டப் பட்டது. ஆதி கோவில் என்று சொல்லக் கூடிய லூன் வாசகி கோவில் பழமை வாய்ந்தது. ஜைன மதிக் குருமார்கள் தீர்த்தரங்கர் என்று அழைக்கப் படுவர். அப்படி ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் அமைக்கபட்ட கோவில்களைக் கண்டு வந்தனர். சித்திர வேலைப்பாடு மிக்கத் தூண்களும், சிறு சிறு சிற்பங்கள் செதுக்கப்பட்ட உயர்ந்த மேற்கூரைகளும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்குப் பின் அச்ச்சல்கார் கோட்டைக்குச் சென்றனர். மேவார் என்றழைக்கப் படும் ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவினர் கட்டியக் கோட்டை இது. ஒரு சில சரித்திர நிகழுவுகள் எல்லாம் இக்கோட்டையில் நடைபெற்று இருக்கின்றன. உள்ளே அச்ச்சலேச்வார் மகாதேவர் கோவில் இருந்தது. வெளிக் கட்டமைப்பு ஜைன முறைப்படி இருந்தாலும், உள்ளே தென்னிந்தியக் கோவில்களை ஒத்து இருந்தது. பித்தளை நந்தியும், மூன்று கல்லால் ஆன காளைகளும் இங்கே பிரசித்தி வாய்ந்தவை.

மவுண்ட் அபு முழுக்க முழுக்க ஆன்மீக பூமிதான். உலக ஆன்மீகப் பல்கலைக் கழகமும் இங்கே இருந்தது. மவுண்ட் அபுவின் உச்சியில் விஷ்ணு பாதம் பதிந்து இருப்பதாக ஒரு சிலர் நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள். அதே போல் துர்கா கோவிலும் உள்ளது.

சமய பேதமின்றி சைவ, வைணவ, ஜைனம் என அனைத்து இனத்தவர்களும் வந்து செல்லும் இந்த பூமி ஆன்மீக பூமி அல்லாமல் வேறு என்ன?

மதிய உணவு முடிந்தவுடன் ஸ்டுடென்ட்ஸ் சிலர்,

“பாஸ் , ரொம்ப போரடிக்குது. ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட் கூட்டிட்டு போங்களேன்: என்றனர்.

“இதுவும் டூரிஸ்ட் பிளேஸ் தானே பசங்களா?

“பாஸ். அறுபது வயசுக்கு மேலே வர வேண்டிய இடத்துக்கு எல்லாம், இப்படி இருபது வயசு பச்சை மண்ணுகளை அழைச்சுட்டு வரீங்களே? உங்களுக்கு எல்லாம் வறண்டு போன சஹாரா பாலைவனத்தில் தான் பொண்ணு கிடைக்கும்”  என்று சாபம் விட்டனர்.

“அடப் பாவிகளா? எடுகேஷனால் டூர்ன்னா இப்படித்தானே போட முடியும். இதுக்குப் போய் இப்படி ஒரு சாபம் கொடுக்கறீங்களே. “

“அதுக்குதான் பாஸ் விமோசனமும் சொல்றோம். நல்ல டூரிஸ்ட் ஸ்பாட் கூட்டிப் போங்க , உங்களுக்கு சிம்லால மாமியார் வீடு அமையும்”

“கடவுளே. இவனுங்க கொடுமைக்கு சஹாரா பாலவனமே பெட்டெர் போலே.” என்றவன்

“அடுத்து, நாம லேக் போகப் போறோம் கைஸ் “

இப்போது ஹோய் என்ற சத்தம் காதைப் பிளந்தது.

ராஜஸ்தானின் சிம்லா என்று அழைக்கப்படும் மவுண்ட் அபுவில் அடுத்து நாக்கி ஏரிக்குச் சென்றனர்.

நாக்கி என்ற வார்த்தை நகம் என்ற சொல்லைக் குறிக்கும். பழைய வரலாறோடு தொடர்புடையது. நான்கு புறமும் மலைகள் சூழுந்து இருக்க, அமைதியான அழகான ஏரி.

ஏரியை ஒட்டி டோடர் ராக் என்றழைக்கப் படும் மலை உள்ளது. பார்பதற்கு தேரை போன்ற வடிவமுடைய இப்பாறை வேறு எங்கும் காண முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.