(Reading time: 28 - 55 minutes)

காலை அறையை விட்டு எழுந்து வந்த விபாகரனை யாதவியின் சிரிப்பு சத்தம் தான் வரவேற்றது. யாதவி அவன் வீட்டில் காலடி எடுத்து வைத்த தினமா? இல்லை யாதவி அவனை விட்டு சென்ற தினமா? அந்த தினத்தை அவன் எப்படி சொல்வது? ஆனால் அந்த தினம் இந்த வீட்டின் மகிழ்ச்சியும் சேர்ந்து பறிபோன தினம்,

மகனின் வாழ்க்கை குறித்து கவலையில் முன்போல் இல்லாமல் மஞ்சுளாவின் உடல் நலமும் தளர்ந்து போயிருக்க, அவர் இப்படி காலையில் எழுந்திருப்பதில்லை, அர்ச்சனாவிற்கு எப்போதும் அந்த பழக்கமில்லை, ஏதோ விஜய் என்பதால், கொஞ்சம் வருடம் வெளிநாட்டில் தனியாக இருந்தவன் என்பதால் மனைவியின் இந்த குறைகளை சமாளித்து வாழ பழகிக் கொண்டவன்,

அதனால் காலையிலேயே காபி மணம் வரவே, இந்த நேரம் யார் விழித்து காபியெல்லாம் போடுவது என்பதை சிந்தித்துக் கொண்டே வந்தவன், யாதவி சிரிக்கவும் அவள் அழகை ரசித்துக் கொண்டே கீழிறங்கி வந்தான்.

முதலில் அவனை பார்த்த புவனா, "அடடே வாப்பா.." என்று வரவேற்க, திரும்பி பார்த்த யாதவி பின் சங்கடத்திற்கு ஆளானாள்.

அதை கண்டும் காணாத புவனா, "தேவிம்மா விபாக்கு ஒரு காஃபி போட்டு கொண்டு வா.." என்றதும்,

"நானா.." என்று இந்த முறை தயக்கத்தோடு கேட்க,

"இருக்கட்டும் ம்மா.. எனக்கு காலையில் காபி குடிக்கும் பழக்கமில்லை என்று அவன் சொல்ல,

" பரவாயில்லை இன்னைக்கு குடிப்பா.. நம்ம தேவி சூப்பரா காஃபி போடுவா.." என்றவர்,

அமைதியாக நின்றுக் கொண்டிருந்தவளிடம், "என்ன அப்படியே நிக்கற..போய் காஃபி போட்டுக் கொண்டு வா.. அப்படியே குளிச்சிட்டு வந்து நீதான் இன்னைக்கு டிபன் செய்யணும்.." என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவர்,

"தேவி சூப்பரா சமைப்பா விபா.." என்று அவனிடம் கூறினார்.

"இருக்கட்டும் ம்மா.. அம்மா எழுந்து வந்தா அவங்க பார்த்துப்பாங்க.." என்று அவன் சொல்ல,

"பொண்டாட்டி கையில் சாப்பிட ஆசையில்லையா? எல்லாம் தேவியே செய்யட்டும்.." என்றார்.

அதை அவனும் விரும்பியவனாக சரி என்றவன், "அம்மா இன்னும் கொஞ்ச நாள் நீங்க இங்க இருக்கீங்களா? நீங்க இங்க இருந்தா யாதவி கொஞ்சம் ஃப்ரியா இருப்பது போல இருக்கு.." என்று  சொல்ல,

"தேவி முன்ன மாதிரி இல்ல.. அவக்கிட்ட ரொம்பவே இப்போ மாற்றம் வந்திருக்கு.. அவ எல்லாத்தையும் பார்த்துப்பா கவலைப்படாத.." என்று அவர் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே, கையில் காஃபியோடு வந்த யாதவி, அதை விபாகரன் கையில் கொடுத்தாள். முன்பு போல் அந்த அளவுக்கு அவளிடம் பதட்டம் இல்லையென்றாலும், கொஞ்சம் இருந்தது.

"அம்மா நான் போய் குளிச்சிட்டு வரேன்…" என்று அவள் அங்கிருந்து செல்ல பார்க்க,

"இரு தேவி, விபா காஃபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லட்டும்.." என்று சொல்லி புவனா அவளை நிற்க வைக்க,

ஒரு முழுங்கு காஃபியை சுவைத்தவன், "ரொம்ப நல்லா இருக்கும்மா.." என்றதும், வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

"அம்மா அவளை இயல்பா இருக்க விடுங்க.. அவளாகவே சரியாகட்டும்.." என்றவன், அன்றைய நாளிதழை எடுத்து வந்து பிரித்து பார்த்தவன், அதில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியாக, அதேநேரம் சாத்விக் முன்பு அன்றைய நாளிதழை வசந்தன் விசிறி அடித்தார். 

மையல் தொடரும்..

Episode # 29

Episode # 31

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.