(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 27 - தேவி

Kaanaai kanne

Kaanaai kanne

Kaanaai kanne

முள் செடியில் சிக்கிக் கொண்டு இருந்த ராணியின் ஆடையை எடுக்கச் சென்ற போது, மற்றொரு பக்கமிருந்த முள் செடி ராணியின் காலில் தைத்தது. ராணியின் சன்னமான குரல் கேட்டு , அருகில் வந்த இளவரசன், அவள் காலைப் பிடித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.

ராணியின் முக வசீகரத்தில் திகைத்து நின்று இருக்க, பிகானர் இளவரசரின் இமை தட்டாத பார்வையைக் கண்ட ராணி நாணத்துடன் தலை கவிழ்ந்தாள். அந்த அசைவில் தன்னை உணர்ந்த ப்ரிதிவிராஜ் தானும் வேறு பக்கம் பார்த்தான். பின் அந்த முள்ளை எடுத்து விட்டு, நீர்க் குடுவையில் இருந்த நீரை விட்டுக் காலில் முள் தைத்த இடத்தை சுத்தம் செய்தான்.

“இனிப் பாதகமில்லை தேவி. “ என இளவரசர் கூற, ராணியும் தன் காலைக் கீழே வைத்தாள்.

பின் மீண்டும் திரும்பி தன் ஆடையை எடுக்க முயல, அவளைத் தடுத்த இளவரசன், தானே கவனமாக அதை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய ராணி, தன் முகத்தை மூட முயல, ப்ரித்விராஜ் அவள் கைகளைப் பிடித்தான்.

திடுக்கிட்டு இளவரசரை ஏறிட்டுப் பார்த்தன ராணியின் விழிகள்.

“தேவி, சந்திரனை ஒத்த தங்களின் அழகு முகம் பார்க்க வெகுநாட்களாக காத்து இருந்தேன். இன்றே என் எண்ணம் ஈடேறியது. இன்னும் சற்று நேரம் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டுமே” என்ற ப்ரித்வியின் வார்தகைளைக் கேட்ட ராணி நாணத்துடன் விழி தாழ்த்தினாள்.

இவர்களுடன் வந்த மற்றவர்கள் முன்னே சென்று இருக்க , ராணி முகம் மறைக்காமல் தாங்கள் வந்த பாதையில் நடக்க, இளவரசனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சற்றுத் தூரம் வரை மெளனமாக நடந்தவர்கள், தங்கள் புரவியில் ஏறிய பின்பு அவள் தன் முகத்தை மூடினாள். இளவரசன் ஒரு முறைத் திரும்பிப் பார்த்து விட்டுப் பின் புரவியை வேகமாகத் தட்டி விட்டான்.

அவனுக்கு இணையாக ராணியின் புரவியும் வேகம் எடுத்தது. இருவரும் மற்றவர் இருக்கும் இடம் வந்த பின்பு, நிதனாமாக நடை போட்டனர். அற்புதாரண்யா மலையில் இருந்துப் புறப்பட்டவர்கள், நடுவில் சிறிது நேரமே ஓய்வெடுத்தாலும், உதய்பூர் அருகே அந்து சேர இரவு ஆகி விட்டது.

சற்று அடர்ந்த காடுகளில் பயணம் மேற்கொண்டதால், கதிரவன் மறைய ஆரம்பித்த சில மணி நேரங்களில் ப்ரித்விராஜ் , ராணி கிரண் தேவி மற்றும் அவர்களோடு வந்தவர்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.