(Reading time: 14 - 28 minutes)

ஒரு மணி நேரமா அதை தான பண்ணோம்..போய்யா..என்னால முடில கொடுத்த ரூபாய்க்கு போட்டோ எடுக்க சொன்னா அவர் உன் சொத்தையே எழுதி கேட்பார் போல..டேய் ஆத்வி எங்கயிருந்து டா பிடிக்குற..”

ஹா ஹாஹா ஜீ அது என் மாமனார் செலக்ஷன்..”

ஐய்யையோ ஷானுகுட்டி நம்ம ராஜு அங்கிள் செலக்ஷனா அதான் செமயா இருக்கு..நோ நோ முறைப்பு..அச்சோ முகமெல்லாம் வேர்க்குது பாரு வா நம்ம உள்ளே போய்டலாம் இல்லைனா ஒரிஜனல் மூஞ்சி தெரிஞ்சுரும்..”

அக்கா!!!”

ஜீவிகா ஏதோ கூற வருவதற்குள் அவள் வாயை மூடிய ஜெயந்த் பேச விடாமல் உள்ளே அழைத்துச் சென்றான்.அதன் பின்னான பொழுதுகள் நிற்க நேரமில்லாமல் கடந்தது.

ஒருபுறம் ரினிஷா ரேஷ்வாவிடம் விருந்தினர்கள் ஆட்டோகிராப் வாங்குவதும் போட்டோ எடுப்பதுமாய் இருக்க மறுபுறம் ஜீவிகா வஞ்சனையில்லாமல் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

ஜெயந்த் அவளை சமாளித்து அவ்வப்போது சாப்பிடுவதற்கு ஏதேனும் கொடுத்து கவனித்துக் கொண்டிருந்தான்.ஆட்டம் பாட்டமென பொழுதுகள் கழிய ரேஷ்வாவும் ரினிஷாவும் தங்களை மறந்து கீழே ஆடிக் கொண்டிருக்க வேகமாய் எழுந்த ஜீவிகாவை அவசரமாய் பிடித்து அமர வைத்த ஜெயந்தோ,

பிச்சுருவேன் உன்னை..உள்ளே பாப்பா இருக்கு டீ”,என்றான் அவசரமாய்.

சாரி மாம்ஸ் ஒரு ஆர்வத்துல..டோண்ட் வொரி எதுவும் பண்ண மாட்டேன்.”,என்று அசடு வழிந்தவளாய் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த இருவருமாய் ஜெயந்தையும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்.

வழக்கம்போல் இசை வெள்ளத்தில் நனைந்தவளாய் ஜீவிகா வாயினுள் விரல் வைத்து அடித்த விசிலில் மொத்த அரங்கமும் மணமக்களை விட்டுவிட்டு இவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவர்களாய் மூவரும் இருக்கையில் அமர கூட்டம் சற்று கலைந்தது.

யோவ் ஹீரோ நாளைக்கு சோஷியல் மீடியா மொத்தமும் நீங்க ரெண்டு பேர்தான் ட்ரெண்ட் ஆக போறீங்க..என்னா ஆட்டம்!”

ஹா ஹா விடு ஜி ஓவர் நைட்ல பேமஸ் ஆனா நல்லதுதான..ஆனா மச்சான் செமயா ஆடுறீங்களே..ஜீ க்கு டஃப் காம்படீஷன் கொடுப்பீங்க போலயே..”

உங்களோட எல்லாம் சேர்ந்து நானும் எப்படி ஆய்ட்டேன் பாருங்க..இதுக்கு பேர்தான் சகவாச

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.