(Reading time: 14 - 28 minutes)

பண்ணிட போறாங்க..அப்பறம் ஆன்ட்டி நிலைமை பாவம் இல்லையா?”

வந்தவுடனே ஆரம்பிச்சுட்டியா நீ..வாங்க முதல்ல எல்லாரும் டிபன் சாப்டுங்க..”

குட் அங்கிள் நான் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் உண்மை மாதிரியே வெட்க படுறீங்க பார்த்தீங்களா..ஐ லைக் யூ..”

அவர் சிரித்தவாறே அங்கிருந்து நகர ரேஷ்வா அவளிடம்,

நீ ஒருத்தி போதும் ஆத்வி வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்குறதுக்கு..”

நம்மளால முடிஞ்ச நல்லதை எப்பவுமே எல்லாருக்கும் பண்ணிட்டே இருக்கணும் ரேஷ்..”

அப்பறம் ஏன் ஜீவிம்மா எனக்கு மட்டும் எந்த நல்லதையும் யாரும் பண்ண மாட்றாங்க..”

ஆஹான்..மாம்ஸ் இங்க வாங்க..அடிக்க மாட்டேன் சும்மா வாங்க பார்க்கலாம்..வர வர ஓவர் ரவுசா இருக்கு பாத்துக்குறேன்..”

பேசியவாறே ஜீவிகாவும் ஜெயந்தும் முன்னே செல்ல வழியில் இருந்த அறைக்குள் ரினிஷாவை இழுத்து நிறுத்தினான் ரேஷ்வா.

ரேஷ்!!என்ன பண்றீங்க?”

இன்னும் ஒண்ணும் பண்ணவேயில்ல அதுகுள்ள இப்படி கேட்டா என்ன பேபி சொல்றது..”

யூ க்ரேஸி..ரேஷ் ஏற்கனவே எல்லாரும் நம்மளை தான் பார்த்துட்டே இருக்காங்க..ஒரு போட்டோ லீக் ஆனாலும் அவ்ளோ தான்..”

என் ரினி பேபிக்கு என்னால கஷ்டம் வர விடுவேனா சொல்லு..அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ஒரு ஒன் மினிட் என் கூட இரு அது போதும்..”,அவனது பேச்சில் முகம் சிவந்தவளாய் அவன் விழிகளையே பார்த்து நின்றாள்.

ஸ்வீட்கார்ட்!”

“..”

எப்படி நீ இவ்ளோ ப்யூட்டிபுல்லா இருக்க..என்னால கண்ணை எடுக்கவே முடில..”

ரேஷ்..யூ மேக்கிங் மி நெர்வெஸ்..”

அவளின் இரு கரங்களையும் தன் கரம் கொண்டு ஆதரவாய் அழுந்தப் பற்றியவன் மறு கையால் அவளது இடக்கன்னத்தை வருடி தன்புறம் லேசாய் இழுத்து கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து நகர்ந்தான்.

விழி மூடி திறந்தவளாய் அவனையே பார்த்திருந்தவள் சட்டென அவனை அணைத்துக் கொள்ள புன்னகையோடு தன்னோடு சேர்த்தணைத்து விடுவித்தவனாய்,

லவ் யூ பேபி..கீப் ப்ளஷிங் லைக் திஸ்..”,என்றவன் சற்று இடைவெளிவிட்டு,

நீ முதல்ல போ பேபி நான் கொஞ்ச நேரத்துல வரேன்..”,என்றவாறு வழிவிட்டு நகர்ந்து நின்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.