(Reading time: 14 - 28 minutes)

தோஷம்ங்கிறது போல..”

மாம்ஸ் ஆனாலும் செமயா ஆடுனீங்களே..உங்களுக்குள்ள இப்படி ஒரு கலைஞன் இருக்கான்னு சொல்லவேயில்லையே கோபால்.ஏன் கோபால் ஏன்??”

ஜெயந்தின் முகத்தைக் கண்ட ரினிஷாவும் ரேஷ்வாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

ஒரு வழியாய் இரவு உணவு முடிந்து நால்வருமாய் கிளம்பத் தயாராக ஆத்விக் அவர்களை அங்கேயே தங்குமாறு கூறினான்.

இல்லடா ஆத்வி ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரல நானும் ரினியும் மார்னிங் சீக்கிரமே வந்துரோம்..”

ஜீவிக்கா நீங்களாவது இங்க என்கூட இருங்களேன்.ஆல்ரெடி டயர்டா இருக்கீங்க..மாமா நீங்க போய் உங்க ரெண்டு பேருக்கும் தேவையானதை எடுத்துட்டு வந்துருங்க ப்ளீஸ்..”

அடடா என்ன ஒரு பாசம்..உன் பாசத்துல என் கண்ணு வேர்க்குது ஷானுகுட்டி..சரி அப்போ சொல்லு இன்னைக்கு இப்படி பேசுற வாய் நாளைக்கு பேச்சு மாறக் கூடாது.நாளைக்கும் ஆத்வி வீட்ல தான் தங்க போறேன்..உன்கூடவே இருந்து உன்னை பத்திரமா பாத்துக்குவேன்..டீலா?”

அவள் கூறுவதன் பொருள் உணர்ந்து ரினிஷா அவளுக்கு ஹபை கொடுக்க ஆத்விக்கோ தலையில் அடித்துக் கொண்டான்.ரேஷ்வாவும் ஜெயந்தும் ஒன்றும் கூற வழியின்றி அமைதியாய் சிரித்து நிற்க ஷான்யாவோ முகம் சிவக்க நின்றிருந்தாள்.

ப்பா என்ன ஒரு வெட்கம்..ஷானுகுட்டி நானும் வீட்டுக்கு போய்ட்டு சீக்கிரமே வந்துரேன்..கத்தின கத்துல தொண்டை எப்போ வேணா அவுட் ஆய்டும்..போய் கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்துட்டு தெம்பா வரேன் டீ செல்லம்..”,என குழந்தையை கொஞ்சுவதைப் போல் கொஞ்சிக் கொண்டிருக்க ஷான்யா செல்லமாய் அவளை அடித்தவாறு அணைத்து விடுவித்து விடையளித்தாள்.

என்ன டா ஆத்வி உங்களை விட எங்க ரொமன்ஸ் நல்லா வொர்க் அவுட் ஆகுது..”

போ போ பேச்சைக் குறை..இதெல்லாம் பார்த்து எனக்கு ஒண்ணும் பொறாமையே இல்லையே..கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்..”,என்றவன் அனைவரையும் வழியனுப்பி வைத்தான்.

மறுநாள் காலையிலேயே ஜீவிகா ஜெயந்த் தங்கள் பெற்றோரோடு வந்திருக்க ரேஷ்வாவும் ரினியும் சற்று நேரத்தில் உள்ளே நுழைந்தனர்.நால்வரும் ஒரே மாதிரியான உடையில் தங்களைப் பார்த்துக் கொள்ள ரேஷ்வா தனது மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டான்.

அவர்களை கண்டதும் ராஜசேகர் அருகில் வந்து வரவேற்க ஜீவிகா வழக்கம்போல்,

வாவ் அங்கிள் ஷான்க்கு அண்ணா மாதிரி ஆய்ட்டீங்களே..பார்த்து யாராவது வந்து ப்ரோப்போஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.