வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஜீவிகா ஜெயந்தோடு சேர்ந்து கொண்டாள்.
“ம்ம்கூம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்..”
“ஜி!!!”
“விட்றா ரினி செல்லம் அவ்ளோ அழகா இருக்க..ஆனாலும் அந்த மொக்கை ஹீரோ உன்கிட்ட மட்டும் எப்பவும் சூப்பர் ஹீரோவா தான் இருக்கார் போ..”
“ஹே அவரு ஒண்ணும் மொக்கை ஹீரோ எல்லாம் இல்ல..”
“பார்ரா சப்போர்டு ம்ம்..ம்ம் இதோ வந்துட்டாரு இல்ல.. இனி இங்க நடக்குற எதையும் கேட்கவோ பார்க்கவோ கூடாதுப்பா..”,என்றவள் குனிந்து உண்ண ஆரம்பிக்க ரினிஷாவின் நிலை தான் தடுமாற்றமாய் இருந்தது.
ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர்.
“வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும் நன்றி கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டர்.
“டேய் ஆத்வி கண்ணா உனக்கு கூட வாழ்க்கையில கல்யாணம் நடந்துருச்சு டா ஒரு வழியா!”
“ஏன் டீ இப்படி பண்ற கேக்குறவன் தப்பா நினைச்சுற போறான்.நல்லாயிருப்ப..அடக்கி வாசி ஜி..”
“பரவால்ல பயபுள்ளை நல்லாவே பம்முறான்..ஷானுக்குட்டி ஹேப்பியா இரு..எதாவது வம்பு பண்ணிணான்னா சொல்லு நான் பாத்துக்குறேன்..அப்பறம் ரெண்டு பேரும் ஒழுங்கா விருந்துக்கு வீட்டுக்கு வந்து சேருங்க சீக்கிரமே..”
“ஆத்வி வெரி வெரி ஹாப்பி ஃபார் யூ டா..சோ இதோ எங்க எல்லாரோட சின்ன கிப்ட்..”,என்ற ரேஷ்வா ஜீவிக்கு கொடுத்ததைப் போன்றே இரண்டு கவரை கையில் கொடுத்து இறுக அணைத்து விடுவித்தான்.
“எதுக்கு மச்சான் இதெல்லாம் நீங்க எல்லாம் ரெண்டு நாள் இங்க இருந்ததே எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா..ஏன் ஜி நீயாவது சொல்லலாம் தான..”
“சொன்னா கேட்டாதான டா ஆத்வி..இவனெல்லாம் அவ்ளோ பெரிய அப்பாடக்கரே இல்லனு சொல்லிட்டேன்..இருந்தாலும் நம்ம ஷான்காக எதாவது கொடுக்கனும்ல அதனால தான்..”