(Reading time: 14 - 28 minutes)

இதெல்லாம் உனக்கு தேவையா ஆத்வி..ஜி பத்தி தெரிஞ்சும்..”

யோசிச்சுருக்கணும் ரினி..மொத்த மானத்தையும் இங்கேயே கப்பல்ல ஏத்திருவா போல..தாயே இரக்கம் காட்ட கூடாதா?”

ம்ம் அப்போ மூடிட்டு கொடுக்குறதை வாங்கணும் ஆத்வி பையா..லைப்ல ஒன் டைம் தான் கிடைக்கும்.இதுக்கப்பறம் நீயே கேட்டாலும் அஞ்சு பைசா தேறாது என்கிட்ட..சோ அனுபவிச்சுக்கோ தம்பி..”

அவர்களின் பின்னிருந்த விருந்தினர்கள் எல்லாம் கடுப்பாகி கொலைவெறி ஆகும் வரை மேடையை விட்டு நகராமல் நின்றவர்கள் ஒருவழியாய் இடத்தை காலி செய்தனர்.

ஆத்விக் மற்றும் ஷான்யாவின் பெற்றோரிடம் விடைபெற்று நால்வருமாய் அங்கிருந்து கிளம்பினர்.மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து மணமக்கள் ஆத்விக்கின் வீட்டிற்கு கிளம்பத் தயாராக ஷான்யாவிற்கு எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் போனது.

ஆதரவாய் தோள்பற்றியவாறு அவளை சமாதானப்படுத்தியவன் அவளின் பெற்றோரிடம்,

ஷான்யாவை நினைச்சு இனி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம் மாமா..அவ கண்டிப்பா ரொம்வே சந்தோஷமா இருப்பா..அது என் பொறுப்பு.அதே நேரம் உங்களுக்கு அவளை எப்போ பார்க்கணும்னு தோணிணாலும் தாராளமா வீட்டுக்கு வாங்க..என் அப்பா அம்மா மாதிரி தான் நீங்களும் எனக்கு..”

இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம் மாப்பிள்ளை..இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க அது போதும் எங்களுக்கு”,என்றவர் இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

இரவு சம்பிரதாயத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ஆத்விக்கின் தாய் கையில் புடவையோடு ஷான்யாவைத் தேடி வந்தார்.

இந்தா டா மருமகளே இதை கட்டிட்டு வா..”

பேருக்காய் சிரித்து வைத்தவள் ஏதோ யோசனையோடே அதை வாங்கிக் கொள்ள அவள் கைப்பற்றி நிறுத்தியவராய்,

ஏன் டா என்னவோ போல இருக்க இனி இது உன் வீடு..எந்த பயமும் தயக்கமும் உனக்கு வேண்டாம்.ஆத்விக் எல்லாம் சொல்லிருக்கான்.இனி நீ எதுக்காகவும் பயப்பட வேண்டாம்.நானும் மாமாவும் ஆத்விக்கு ப்ரெண்ட்ஸ் மாதிரி இனி உனக்கும்.சந்தோஷமா இருக்கணும்.எதுவாயிருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ.அதுக்கெல்லாம் அவசியம் இருக்காது ஆத்வியே உன்னை நல்லா பார்த்துப்பான்.இருந்தலும் சொல்ல வேண்டியது என்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.