(Reading time: 14 - 27 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

அவங்க அப்பா அம்மா உன்னை பார்த்தாங்க, ஆனா பார்க்க வேண்டிய நீ ரெண்டு பேரும் ஒருத்தரை இன்னொருத்தர் பார்க்கல. அதனாலதான். அது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வந்து பார்த்தாதான் அது முறை. கோவில் சந்திப்பு, அது சும்மா ஒரு அறிமுகம் தான்என்று நிலாவிற்கு விளக்கினார் சங்கர்.

நிலா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள், அப்போது தான் அவளுக்கு ஒரு யோசனை உதித்தது. பெண் பார்ப்பது என்றால் அவனும் வருவான். எப்படியாவது அவனிடம் 5 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் தன் மனதில் இருப்பதைச் சொல்லிவிடலாம். எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறாள், பெண் பார்க்க வந்து தனியாகப் பேசுவது எல்லாம். அவள் யோசித்து முடிப்பதற்குள், வீடு வந்து சேர்ந்தார்கள் அனைவரும்.

அவர்கள் carஐ விட்டு இறங்கும் போது சங்கர் போன் ஒலிக்க அதை எடுத்து பார்த்தார் சங்கர்.

நாகராஜன் தான் கால் செய்திருந்தார். Attend செய்துசொல்லுங்க சம்பந்திஎன்றார் சங்கர். அதை கேட்ட உடனே புரிந்துக் கொண்டாள் நிலா யார் பேசுவது என்று.

சம்பந்திஎன்ற வார்த்தை அவளுக்கு உணர்த்தியது அவர்கள் அனைவரும் இந்த கல்யாணத்தில் காட்டும் திவிரம்.

சிறிது நேரம் அவர் பேசிவிட்டுக் கட் செய்தார். அது வரை அமைதியாக இருந்த சிவகாமி என்னவென்று விசாரித்தார்.

ஒன்னும் இல்ல மா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் கால் பண்ணியிருந்தார். நான் தான் hospital போயிருந்த விஷயம் சொல்லி அப்பறம் பேசுரதா சொல்லி இருந்தேன். அதான் இப்போ அடிச்சி அம்மாவிற்கு எப்படி இருக்கு கேட்டாருஎன்று பதில் அளித்தார் சங்கர்.

நல்ல மனுசன்ங்க, நல்ல குடும்பம். நம்ம நிலா குடுத்து வைதவதான்என்று நிலா காதில் விழும்படி பேசினார் சிவகாமி.

நிலாவின் பயம் அதிகரித்துக் கொண்டே போனது. வீட்டிற்குள் நுழைந்து, சிறிது நேரத்தில், “அப்பா Sunday அவங்க வீட்டில் இருந்து வருவாங்கனு சொன்னீங்கல, அப்போ நான் அந்த பையன் கிட்டக் கொஞ்சம் தனியா பேசனும். If you don’t mind” என்றாள் நிலா.

அவளின் கோரிக்கைக்கு சங்கர் என்ன சொல்லப் போகிறார் என்று சிவகாமியும் சங்கரை பார்த்தார்.

சங்கர் சிறிதும் யோசிக்காமல் “கண்டிப்பா நிலா. நீங்க ரெண்டு பேரும் பார்த்து பேசனும், அதுதான் இந்த சந்திப்போட நோக்கமே. So நீ தாராளமாக பேசலாம்என்று பதில் அளித்தார் சங்கர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.