(Reading time: 14 - 27 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

மாததிற்குள் இருந்ததால், திருமண ஏற்பாட்டிற்கு போதிய நேரம் இருக்காது என்று நான்கு மாதத்தில் வரும் தேதியைப் பேசி முடிவு செய்தனர் இரு வீட்டாரும். இருவரிடமும் தேதியை ஞாயற்று கிழமை சொல்லி கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

பெற்றோர்கள் ஒரு விஷயத்திற்காகவும், பிள்ளைகள் அதற்கு மாற்றாக எதிர் பார்த்த அந்த ஞாயறு கிழமை வந்தது.

ரகுவின் பெரியப்பா, ரகு, நாகராஜன் மற்றும் பானுமதி ஆகிய நால்வர் பெண் பார்க்கும் படலத்திற்குச் சென்றனர்.

மொத்த பயணத்திலும், ரகுவின் பெரியப்பா நிலாவைப் பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார். அதற்கு நாகராஜனும், பானுமதி மட்டும் பதில் கூறிக் கொண்டே வந்தனர். ரகு அதைக் கேட்டுக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக ஏதோ யோசனையிலே வந்தான்.

அனைவரும் நிலா வீட்டை அடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னரே ரகு வீட்டாரும், நிலா வீட்டாரும் நல்ல நண்பர்களாக ஆயிருந்ததால் சகஜமாகப் பேசி உரிமையோடு நடந்து கொண்டனர்.

தனக்கு பிடிக்க வில்லை என்றாலும் தன் பெற்றோருக்காக தன் அறையில் ரெடி ஆகிக் கொண்டிருந்தாள் நிலா. அவளுக்கு உதவியாக அவளது தோழி நிஷா கூட இருந்தாள். பெரிய ஆடம்பரம் இல்லாமல்ஒரு நீல நிற saree, தலை சிறிது மல்லிகை பூ என simpleஆக dress செய்திருந்தாலும் அதிலும் தேவதை போலவே இருந்தாள் நிலா.

வெளியே இருந்த சலசலப்பு நிலா நிஷா இருவருக்கும் கேட்டாலூம், நிலா அதைக் கண்டு கொள்ளாதவள் போல் இருந்தாள். நிஷா மச்சி மாப்பிள்ளை சார் வந்தாச்சி போல, இரு போய் liteஆ ஒரு sightஅ போட்டுட்டு வரேன்என்று கூறிவிட்டு, நிலாவின் பதிலுக்காக காத்திருக்காமல் அறையின்  வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

நிலா “நில்லு டிஎன்று தடுத்தும் கேட்காமல் அறைக்கு வெளியே சென்று, kitchenக்கு செல்வது போல் போனால். போகும் போது அங்கே அமர்ந்து இருந்தவர்களையும், குறிப்பாக ரகுவையும் நன்றாகவே கவனித்தாள்.

மீண்டும் நிலா அறைக்குச் சென்று “மச்சி, பையன் செமயா இருக்கான் டி. ரொம்ப பிகு பண்ணாம கல்யாணம் பண்ணிக்கோ. வேணுனா அப்புறமா கூட room போட்டு காதலிச்சிக்கோஎன்றாள் நிஷா.

அவ்வளவு நல்ல இருந்தா நீயே கட்டிக்கோஎன்றாள் நிலா.

இப்போவே தாலி கட்டிக்க நான் ரெடி. என்ன ஒன்னு, நாளைக்கு நீ miss பண்ணிட்டமேனு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.