(Reading time: 12 - 24 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

வியப்பாகவும் அதிசயமாகவும் பார்த்திருக்கிறாள். ஆனால் கணவனாக வரப் போகிறவன் என நினைத்து ஆசையாக அவள் அவனை பார்த்ததெல்லாம் இல்லை, இந்த திருமணம் முடிவானதிலிருந்தே அவனுக்கு பொருத்தமானவள் தானா? அவனுக்கு தன்னை பிடிக்குமா? என்று யோசித்து குழப்பிக் கொண்டிருந்தவள் எப்படி அவனை ஆசையாக காதலாக பார்ப்பாளாம்?

ஆனால் அவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே, அதனால் ஆமாம் என்பது போலவும், இல்லையென்பது போலவும் மாற்றி மாற்றி தலையசைக்க,

அவளது செய்கையில் அவனுக்கு சிரிப்பும் தாபமும் சேர்ந்து வந்ததால், அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவன் கழுத்து உயரத்திற்கு இருந்தவளை குனிந்து அவள் இதழோடு இதழ் பொருத்தியவனுக்கு தாபத்தை அடக்கமுடியாமல், அவன் இதழ்கள் அதற்கும் கீழிறங்கி அவள் கழுத்து வளைவுகளில் ஊர்வலம் வர, அவன் கைகளோ அவள் சேலைக்கு நடுவில் தெரிந்த வெற்றிடையில் ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தது.

அவனது செய்கைகளை அவள் ரசிக்கவே  செய்தாலும், இது பகல் நேரமென்பதால், "மாமா என்ன செய்றீங்க?" என்றுக் கேட்டவளுக்கோ, அவளுக்கே அது கேட்டிருக்குமா? என்பது சந்தேகம் தான்,

ஆனால் அவன் காதுகளிலும் அவள் கேள்வி விழ, "என்ன செய்றேன்.. ஒன்னுமே செய்யல.. நேத்து நைட்டே  என்னெல்லாமோ நடந்திருக்க வேண்டியது.. எங்க ரூமை அலங்காரம் செய்றேன்னு சொல்லி ரூம் ஸ்ப்ரேல்லாம் அடிச்சு விட்ருக்காங்க..

எனக்கு இப்படி ஓவரான வாசனையெல்லாம் ஒத்துக்காது.. தலைவலி, வாமிட்டிங் ஃபீலெல்லாம் இருக்கும்,  அதான் என்னால நேத்து ரூம்ல இருக்க முடியாம ஆஃபிஸ் ரூம்க்கு போயிட்டேன்..

இப்போ ப்ரெஷா குளிச்சிட்டு வந்து நிக்கற உன்னை என்னெல்லாமோ செய்யத்தான் தோனுது.. ஆனா வீட்ல கெஸ்ட்டெல்லாம் வந்திருக்காங்களே.. இல்ல ஃபர்ஸ்ட் நைட் நடக்கலன்னா என்ன? பர்ஸ்ட் டே வை செலப்ரேட் செஞ்சுருக்கலாம்.. ஆனா இப்போ முடியாதே.. ஆனா இன்னைக்கு நைட் என்னால சும்மால்லாம் இருக்க முடியாது.." என்று அவன் கைகள் அவளது மேனியில் ஊர்வலம் நடத்த பேசிக் கொண்டிருந்தான்.

நேற்று அவன் தனியாக படுத்துக் கொண்டது அவளுக்கு எதையெதையோ யோசிக்க வைக்க, இப்போதைய அவனது பேச்சு அவளுக்கு நிம்மதி அளித்தாலும், ஏன் நேத்து இப்படி என்று விஷயத்தை சொன்னால் என்ன? என்ற கேள்வியும் பிறக்க, அவளுமே அவனிடம் வெளிப்படையாக என்ன என்று கேட்டிருக்கலாமே என்று யோசிக்க மறந்தாள்.

"மாமா காஃபி எடுத்துட்டு வரட்டுமா?" என்றுக் கேட்க,

"அப்போ இப்போ சாப்பிட்ட ஸ்வீட்டோட டேஸ்ட் மறைஞ்சிடுமே.." என்று அவன் பதில் கூறினான்.

அவன் சொல்வது புரியாமல் அவள் விழிக்க, "இந்த ஸ்வீட்டை தான் சொன்னேன்.." என்று மீண்டும் அவள் இதழை சிறை செய்தவன், சிறிது நேரம் கழித்தே விடுவித்தான்.

"சரி நாம எங்கேயாச்சும் வெளிய போயிட்டு வரலாம்.. நான் போய் குளிச்சிட்டு வரேன்.. நீயும் ரெடியாகு.." என்று சொல்லிவிட்டு அவன் குளியலறைக்குள் செல்ல, அவளோ ஏதோ மாயலோகத்திற்குள் புகுந்தது போலிருக்க அதே மனநிலையோடு கீழே சென்றாள்.                            

தொடரும்..

Episode # 01

Episode # 03

Go to Verena nee iruppin.. Verethum vendame story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.