(Reading time: 15 - 30 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

"திடீர்னு வந்த வேலை பாட்டி.. கொஞ்சம் கேர்லஸா வேலைப் பார்த்து சொதப்பி வச்சிருக்காங்க.. அதை சரி செய்யலன்னா, பெரிய லாஸ் வந்துடும் பாட்டி.. அதான் நானே இங்க ஆஃபிஸ்க்கு வர வேண்டியதா போச்சு.."

"சரி முக்கியமான வேலைன்னா எதுக்குடா நித்யாவை கோவிலுக்கு கூட்டிட்டுப் போன.."

"இல்ல அவக்கிட்ட வெளிய போலாம்னு சொல்லியிருந்தேன்.. திடீர்னு வேலை வரவும், சரி கோவிலுக்காவது கூட்டிட்டு போகலாம்னு தான்.. ஏன் பாட்டி என்னாச்சு.."

"அவளை வீட்டுக்கு தனியா அனுப்பிச்சிருக்க.. அவளுக்கு இந்த ஊரு புதுசு இல்லையா? அதுவும் அவ தனியா இங்க வெளியப் போனதே இல்லை.. நான் தான் அவளை கோவிலுக்கோ இல்லை ஏதாவது விசேஷத்துக்கோ கூட்டிட்டு போவேன்.. அப்படியிருக்க அவளை தனியா அனுப்பி வச்சிருக்க.. வீட்டுக்கு வர தெரியாம வழி மாறி போயிருந்தான்னா என்ன செய்றது கார்த்தி.. உன்னால அழைச்சிட்டு போக முடியலன்னா ஒரு கால் டாக்சி புடிச்சு அவளை அனுப்பி வச்சிருக்கலாமில்ல.."

"உண்மையிலேயே அதுக்கெல்லாம் நேரமில்ல பாட்டி.. அவளுக்கு தனியா போய் பழக்கமில்லன்னு எனக்கு தெரியாது.. இப்போ நித்தி வீட்டுக்கு சேஃபா வந்துட்டாள்ள.."

"அதெல்லாம் பத்திரமா வந்துட்டா.. இருந்தாலும் முன்ன போல அவளை கண்டுக்காம இருக்காத.. இப்போ அவ உன் பொண்டாட்டின்னு ஞாபகத்தில் வச்சுக்க.."

"இனி அதெல்லாம் கவனமா இருப்பேன் பாட்டி.."

"சரி உன்னோட தாத்தா, மாமா குடும்பம், சித்தி குடும்பம் எல்லோரும் ஊருக்கு போக ரெடியா இருக்காங்க.. உனக்காக தான் காத்திருக்காங்க.. சீக்கிரம் வீட்டுக்கு வாடா.."

"அய்யோ வேலையில் சுத்தமா அதை மறந்துட்டேன் பாட்டி.. இதோ கொஞ்ச நேரத்தில் கிளம்பிட்றேன்.. அவங்கக்கிட்ட சொல்லுங்க.."

"நான் சொல்லிக்கிறேன்.. நீ பதட்டப்படாம பொறுமையா வா.." என்றவர் அலைபேசியை வைத்தார்.

சொன்ன நேரத்திற்கு வர முடியாமல் கார்த்திக் கொஞ்சம் தாமதமாகவே வரவும், விருந்தினர்கள் கிளம்ப தயாராக இருக்க, அவன் வந்ததும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர். அவனே அவர்களோடு விமான நிலையத்திற்கு செல்வதாக சொல்ல, இன்னும் அவன் மதிய உணவு உட்கொள்ளாமல் சோர்வாக தெரிந்ததால்,

"கார்த்திக்.. நீ முதலில் சாப்பிடு.. நான் இவங்களை ஏர்போர்டிற்கு கூட்டிட்டுப் போறேன்.." என்று ஞானசெல்வம் கூறிவிட்டு அவர்களோடு புறப்பட்டுச் சென்றார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.