(Reading time: 15 - 30 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

இருந்துடட்டுமான்னு இருக்கு.." என்று அவன் கிறக்கத்தோடு கூறினான்.

"முக்கியமான வேலைன்னு சொன்னீங்களே மாமா.." என்று அவள் கேட்க,

"ம்ம் அதான் பார்க்க வேண்டியிருக்கு.. இல்ல அப்படியே உன்னோட வெளியில் ஜாலியா எங்கேயாச்சும் சுத்திட்டு, நைட் அப்படியே.." என்று ஏதோ சொல்ல வர,

"மாமா சாப்பிடும் போது பேசக் கூடாதுன்னு அம்மா சொல்வாங்க.. பேசாம சாப்பிடுங்க மாமா.." என்று வெட்கத்தோடு கூறினாள்.

"அப்பா இத்தனை நாளில் இன்னைக்கு தான் பெருசா ஒரு டயலாக் பேசியிருக்க.." என்றவன்,

சாப்பிட்டு முடித்ததும், "முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வரப் பார்க்கிறேன் நித்தி.. வீட்ல பாட்டியும் அத்தையும் எழுந்ததும் நான் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன்னு சொல்லிடு" என்றவன்,

"அப்புறம் நைட் ரெடியா இரு.." என்று அவள் காதில் ரகசியமாக சொல்லி, அவள் கன்னத்தில் முத்தமிட்டு விடைப் பெற்றுச் சென்றான்.

அவன் கொஞ்சம் கோபமாக பேசியதில் கவலை கொண்ட மனம், இப்போதைய அவனது பேச்சில் அப்படியே மகிழ்ச்சிக்கு தாவ, அவள் முகமோ இரவு வரை வெட்கத்தின் சாயத்தை பூசிக் கொண்டிருந்தது.

இரவானதும் அவன் சொன்னதை ஞாபகத்தில் வைத்திருந்தவள், குளித்துவிட்டு வந்து நல்ல புடவையாக எடுத்து அணிந்தவள், தலையை பின்னி வஞ்சி வாங்கி வைத்திருந்த பூவை முன்பே அறையில் எடுத்து வைத்திருந்தவள், அதை தலையில் வைத்துக் கொண்டு, எப்போதும் முகப்பூச்சை தவிர மற்ற அலங்காரங்களை முகத்திற்கு செய்துக் கொள்ள மாட்டாள் என்பதால், அதை மட்டும் பூசி, நெற்றியில் பொட்டு வைத்தவளுக்கு, நேற்று இரவு அவனோடு தனியறையில் இருக்க போவதை குறித்து ஏற்பட்ட தயக்கம் இன்று இல்லை.

அனைத்தும் முடிந்ததா? என்று தன்னை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்டவளுக்கோ, அப்போது தான் பழனியில் நடைப்பெற்ற இவர்களின் திருமணத்திற்கு வந்த அவளின் தோழிகள் பரிசாக கொடுத்திருந்த வாசனை திரவியமும், "பர்ஸ்ட் நைட்ல மறக்காம இதை அடிச்சுக்கோ டீ.." என்று கேலி செய்ததும் ஞாபகத்திற்கு வரவும்,

நேற்று அவர்கள் அலங்காரம் செய்யும் போதே, இதுபோல் வாசனை திரவியத்தை தனக்கு அடித்து விட்டதை நினைவில் கொண்டவள், இப்போது தோழிகள் கொடுத்ததை எடுத்து உடல் முழுதும் அடித்துக் கொள்ள நினைத்தாள். பின் சாப்பிட்டு வந்து அடித்துக் கொள்ளலாம் என்று அதை மேசை மீது வைத்தவளுக்கு,

நேற்று இரவு இதுபோல் வாசனைகள் தனக்கு ஒத்துக் கொள்ளாது என்று கணவன் சொன்னது துளி கூட ஞாபகத்திற்கு வரவேயில்லை. அதை சுத்தமாக மறந்தவளாக, கீழே சாப்பிடச்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.