லேட்டா சாப்பிட்டா உடம்புக்கு என்னாகிறது.. அதனால நான் வர லேட்டாச்சுன்னா எனக்காக காத்திருக்க வேண்டாம் சரியா.." என்று சொல்ல,
"பாவம் மாமா இன்னும் சாப்பிடாம பசியோடு இருந்தாலும், நான் சாப்பிடலன்னு கவலைப்பட்றாங்க.. நானோ அவங்க சாப்பிட்டாங்களான்னு கவலைப்படாம என்னோட பசியையே நினைச்சுக்கிட்டு இருக்கேன்.." என்று மனதில் நினைத்து கவலைக் கொண்டாள்.
"நம்ம கல்யாணத்தை கொண்டு தான் ஒருவாரம் ஆஃபிஸ்க்கு போக வேண்டாம்னு நினைச்சேன், இல்ல மதியம் நான் வீட்டுக்கு வர மாட்டேன்னு உனக்கே தெரியுமில்ல.. ஆனா இந்த ஒருவாரம் கூட என்னை ஃப்ரியா இருக்க விட மாட்டங்குறாங்க.. அதான் காலையில் அவசரம் அவசரமா உன்னை தனியா வீட்டுக்கு அனுப்பிட்டு நான் ஆஃபிஸ்க்கு போக வேண்டியதா ஆச்சு.. நீ வேற இப்படி தனியா வீட்டுக்கு வந்ததேயில்லைன்னு பாட்டி சொன்னாங்க.. எனக்கு அது தெரியாது, சாரிடா..”
“அய்யோ எதுக்கு மாமா சாரில்லாம் சொல்றீங்க.. எனக்கு தனியா வந்ததில் ஒன்னும் பிரச்சனையே இல்ல.. ஆனா பாட்டி தான் கொஞ்சம் பயந்துட்டாங்க..”
“புரியுது.. ஆனாலும் உன்னை தனியா அனுப்பிச்சிருக்க கூடாது.. இருந்தாலும் வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகப் போகுது.. நீ இன்னும் தனியா போக வர பழகலன்னா எப்படி? அதுக்கெல்லாம் பழகிக்கணும் என்ன?” என்று அவன் கேட்கவும், அவள் சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, "நான் இன்னைக்கு நைட் லேட்டா தான் வீட்டுக்கு வருவேன் நித்தி.. ஆஃபிஸ்ல இன்னும் வேலை முடியல.. எல்லோரும் கிளம்பறாங்கன்னு தான் பாதியிலேயே விட்டுட்டு வந்தேன்.. அதனால நான் நைட் வர வரைக்கும் சாப்பிடாம இருக்காத.. சீக்கிரமா சாப்பிட்டிடு.. அதுக்கு முன்ன நல்லா தூங்கி எழுந்துடு.. ஏன்னா இன்னைக்கு நைட் நமக்கு ரொம்ப முக்கியம் தெரியுமில்ல.." என்று சொல்லி கண்ணடித்தான்.
அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து அவள் வெட்கப்பட, அதை ரசித்தப்படி அவளை பார்த்திருந்தவன், அவள் உணவை கையில் எடுத்து சாப்பிட போகும் போது, அவள் கையைப் பிடித்து தானே அதை தன் வாயில் ஊட்டிக் கொண்டான்.
"அய்யோ மாமா இது எச்சில்.." என்று அவள் சொல்லவும்,
"புருஷன் பொண்டாட்டி நமக்குள்ள இனி இந்த எச்சிலெல்லாம் இல்ல.." என்று சொல்லி அவளுக்கு தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதத்தை எடுத்து ஊட்டி விட்டவன்,
"எனக்கு ஆஃபிஸ் போக மனசே இல்ல நித்தி.. ஏண்டா இப்போ வீட்டுக்கு வந்தோம்னு இருக்கு.. பேசாம ஏதாவது செஞ்சுக்கோங்கடான்னு சொல்லி போன் பண்ணிட்டு இங்கேயே