அவர்கள் சென்றதும், "வஞ்சி.. காலையிலிருந்து உனக்கு நிறைய வேலை.. அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடு.. நித்யா கார்த்திற்கு சாப்பாடு போடுவா.. நானும் கொஞ்ச நேரம் போய் படுக்கிறேன்.." என்று இருவருக்கும் தனிமை கொடுக்கும் எண்ணத்தில் மகளிடம் கூறிவிட்டு குறிஞ்சியம்மாள் தனது அறைக்கு செல்லவும்,
வஞ்சியோ, "நித்திம்மா.. ரெண்டுப்பேரும் சாப்பிடுங்க.. நான் போய் படுக்கிறேன்.." என்று அவளிடம் சொல்லிவிட்டு சென்றார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கோ, கைகழுவிவிட்டு வந்தவன், உணவு மேசையில் சாப்பிட தட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளிடம், "நித்தி நீ இன்னுமா சாப்பிடாம இருக்க.." என்றுக் கேட்டான்.
"மதியம் கார்த்திக் சாப்பிட வீட்டுக்கு தான் வருவான்.. நீங்க ரெண்டுப்பேரும் சேர்ந்து சாப்பிடுங்க.." என்று வஞ்சி சொல்லியிருந்தார்.
அப்போதே அவளுக்கு பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் அன்னை சொல்லவே, சரி என்று தலையாட்டிக் கொண்டாள்.
அதன்பின் அவனுக்காக அவள் காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ வருவது போல் தெரியவில்லை, பேசாமல் சாப்பிட்டு விடலாமா? என்று கூட நினைத்தாள்.
ஆனால் வஞ்சி திட்டுவாரோ என்று பயந்து அமைதியாக இருந்தாள். நேரமாகிவிட்டதால் அவரே சாப்பிட சொல்லுவார் என்று எதிர்பார்த்தாள். ஆனால் விருந்தினர்களை கவனிக்கவே அவருக்கு சரியாக இருக்க, அவரும் அவளை சாப்பிட சொல்ல மறந்துவிட்டார்.
குறிஞ்சியம்மளோ விருந்தினர்கள் உடனே சேர்ந்து சாப்பிட்டதால், அவரும் பேத்தியிடம் சாப்பிட சொல்லி சொல்லவில்லை, இதில் கார்த்திக் வந்ததும் விருந்தினர்களோடு விமான நிலையம் செல்ல வேண்டுமென்று சொன்னதால், அவன் வரும் வரைக்குமா சாப்பிடாமல் இருப்பது என்று அவள் கவலைக் கொள்ள, இப்போது அவன் சாப்பிட வந்ததே அவளுக்கு நிம்மதியை கொடுத்தது.
இருந்தாலும் அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? “நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தேன் மாமா..” என்று அவள் பதில் கூற,
அவளது பதிலில் அவன் சோர்வெல்லாம் நீங்க, “அப்போ நீயும் உட்காரு.. நாம சேர்ந்து சாப்பிடலாம்..” என்று அவனே அவள் கைப்பிடித்து அமர வைத்தான்.
அதுமட்டுமில்லாமல் அவளுக்கு தானே பறிமாறியவன், “நீ எனக்காக சாப்பிடாம காத்திருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நித்தி.. ஆனா எவ்வளவு நேரமாச்சு பார், இவ்வளவு