(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 36 - தேவி

முதல் நாள் கனவைப் பற்றியேக் கிருத்திகாவின்  சிந்தனை இருந்து இருக்க, ப்ரித்வியின் எச்சரிக்கை தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்த வைத்தது.

உதய்பூர் லேக்கில் செல்லும்போது கடத்த முயன்றவர்களை விசாரித்ததில், அவர்களுக்கு போனில் வந்த தகவல் மட்டுமே. அதிலும் அவளைக் கடத்தி ஒரு காரில் சேர்ப்பது மட்டுமே அவர்கள் வேலை. எந்தக் கார் , நம்பர் எல்லாம் கூட இவர்கள் காரியம் முடித்தப் பின் பேசும்போது தான் தெரிவிக்கப் படும் என்ற கட்டளை.

இதில் இவர்கள் கடத்தவே இயலாமல் , மாட்டிக் கொண்டார்கள் என்றவுடன் அவர்கள் யாரிடம் பேசினார்களோ அந்த செல் நம்பர் தற்போது உபயோகத்தில் இல்லை என்று விட்டதாகக் கூறினார்கள்.

செல் நம்பர் , போன் ஐ.எம்.இ எல்லாம் ட்ரேஸ் செய்ததில் எல்லாம் உதய்பூரில் வாங்கியது, இவர்கள் மாட்டிக் கொண்ட அரை மணி நேரத்தில் அதை உடைத்துப் போட்டதும் தான் தெரிய வந்தது.

மவுண்ட் அபு ஏறும்போதும் மறைந்து இருந்து பேசியவர்களை இனம் காண முடியவில்லை.

கிருத்திகாவை பின் தொடரும் ஆட்கள் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு நபர்கள் வருவதால், அவளைத் தான் பின் தொடர்கிறார்கள் என்று சந்தேகிக்க முடியாத வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் ஹவா மஹால் காண இவர்கள் காலேஜ் மாணவர்கள் மட்டுமில்லாமல், வேறு சில கல்லூரிகளிலும் இருந்து ஸ்டுடென்ட்ஸ் வந்து இருந்தனர். அதைத் தவிர சில டூரிஸ்ட் பஸ்கள் வேறு கண்ணில் பட்டது . போக அன்றைக்கு விடுமுறை நாள் ஆதலால், உள்ளூர் கூட்டமும் இருந்தது. இதில் யார் அவளைப் பின் தொடர்கிறார்கள் என்றுப் புரியவில்லை.

ப்ரித்வியின் எச்சரிக்கைக்குப் பின் கிருத்திகா , ராகவியோடு சேர்ந்து கொண்டாள். ப்ரித்விக்கு முதல் நாள் அவளுக்கு கனவு வந்ததா என்றுக் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதற்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.

ஹவா மஹால் சுற்றி விட்டு அங்கிருந்து பிர்லா மந்திர் சென்று வந்தனர். வடக்கிந்திய முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த கோவில் லக்ஷ்மி நாராயணர் என்ற பெயரில் உள்ள பெருமாள் கோவில் ஆகும். பிர்லா குரூப்பால் இந்தியா எங்கும் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு பிர்லா மந்திர் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒரே மாதிரியான கட்டட அமைப்புகள் கொண்டவை. மேலும் அநேகமாக வெள்ளை மார்பிள் அல்லது கற்களால் கட்டப்பட்டவை.

அந்தக் கட்டடக் கலைக்காகவும் , அதன் தூய்மை மற்றும் பராமரிப்பு இதற்காக வெளிநாட்டவர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.