(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

வந்து சேர்ந்தனர்.

அங்கே லோக்கல் ஷாப்பிங் இருக்க, முதல் நாள் மால் ஷாப்பிங் முடித்து இருந்தும் , இங்கும் போக வேண்டும் என்று மாணவர்கள் , குறிப்பாக மாணவிகள் கேட்கவே , அவர்கள் பேராசிர்யர்களிடம் கேட்டு சம்மதித்தான்.

ஒரு சிலர் அலுப்பு என்று அறையில் இருக்க, ஒரு பஸ் மட்டும் எடுத்துக் கொண்டு விருப்பப்ட்டவர்கள் போய் வரலாம் என்றான். சரியாக இரண்டு மணி நேரத்தில் வந்து விட வேண்டும் என்றுக் கூறிவிட்டு, யார் போகிறார்கள் என்றுக் குறித்துக் கொண்டான்.

கிருத்திகா முதல் நாள் முடித்த ஷாப்பிங் போதும் என்பதால் அறையில் இருந்தாள். ப்ரித்வியும் மற்றவர்களை கவனமாக தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி விட்டு தன் அறைக்குச் சென்றான்.

சற்று நேரம் கழித்து , அங்கே இருந்தவர்களை உணவிற்கு அழைக்க, ஒரு சிலர் வந்தனர். ஒரு சிலர் அறையிலேயே இருந்து கொண்டனர்.

கார்டன் பகுதியில் இவர்கள் குழுவிற்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தமாக பணம் கட்டியிருந்தாலும், அங்குள்ள பணியாளர்களுக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு வழிகாட்ட ப்ரித்வி அமர்ந்து இருந்தான்.

சற்று நேரத்தில் கிருத்திகா வர, பபே முறை உணவு என்பதால் தட்டில்  எடுத்துக் கொண்டு அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள்.

ப்ரித்வியும் தனக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்தவன் , அவள் அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிரே அமர்ந்து கொண்டான்.

மும்முரமாக கைக்கும் வாய்க்கும் இடையே சண்டைப் போட்டுக் கொண்டிருந்த கிருத்தி “ஹாய் கிருத்தி” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

வாயில் கச்சோரியை முழுங்கிக் கொண்டு இருந்தவள், பதில் சொல்ல முடியாமல் “ஹாய்” என்று குழரலாகக் கூற, புரைக்கேறி இருமல் வந்தது.

“ஹேய்.. பார்த்து பார்த்து .. முழுங்கிட்டுப் பேசு” என்று கூறினான் ப்ரித்வி.

அவன் கூறவும் வேகமாக முழுங்கியவள் “ஹாய் “ என்றாள்.

“இப்போ ஓகே வா”

“ஓகே” எனவும்

“சாப்பாடு எப்படி இருக்கு?”

“சூப்பர் பாஸ். உங்க ஐடியா நல்லா இருக்கு.  ஒவ்வொரு ஊரிலும் அங்கே இருக்கிற பூட் ஒரு நாள் சாப்பிட வச்சிடறீங்க. சோ எல்லா வெரைட்டியும் சாப்பிட முடியுது. அதே டிஷ் நம்ம

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.