(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“கனவில் வந்த சீகுன்ஸ் பார்த்தா அப்படித்தான் தெரியுது” என்று கூறவும், ப்ரித்வி சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

இப்போதும் கை , வாய் யுத்தம் மட்டும் நடந்து கொண்டு இருந்தது.

ஏதோ யோசித்தவன், தன் சென்னை ஆட்களோடு போனில் பேசினான். பிறகு கிருத்தியின் பெரியப்பாவிற்கும் பேசினான். அவன் பெரியப்பாவிடம் பேசவும் இவள் போனிற்காக கைகளை நீட்ட, அதைக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் தன் பேக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

கிருத்தி கோபமாக முறைத்து விட்டு, அங்கிருந்து எழுந்து போகவும் சுதாரித்தவன், நிமிர்ந்து பார்த்தான்.

“ஹேய்.. எங்கே எழுந்துட்ட? நீ இன்னும் சாப்பிட்டு முடிக்கலியே?”

“ஹலோ பாஸ், அது உங்க தட்டு. நாங்க எல்லாம் டிஷ் வாஷேர் பரம்பரை. தட்டைக் கழுவ கூட வேண்டாம். அவ்ளோ கிளீனா சாப்பிடுவோம்” என்றுக் கூற , சிரித்து விட்டான். பின் வேகமாக சாப்பிட்டுப் பின் கை கழுவிக் கொண்டு வந்தான்.

அவள் குல்பி ஐஸ் கிட்டே நிற்கவும், தனக்கும் அவளுக்குமாக இரண்டு வாங்கிக் கொண்டு வந்தான்.

அவன் அவளிடம் நீட்டியதும் டபக்கென்று வாங்கியவள்,

“பாஸ், இதுக்கு உண்டான பைசா வாங்கிக்கணும்” என்றாள்.

“ஏன்மா? இந்த ஒரு குல்பிலே. நான் ஏழை ஆயிடப் போறேனா என்ன?”

“அது எல்லாம் கிடையாது. பிரெண்ட்ஸ் கூட வெளியில் சாப்பிடப் போனால் கூட, என்னுடைய ஷேர் நான் கொடுத்திடுவேன். அப்படிப்பட்ட பிரெண்ட்ஸ் கூட மட்டும் தான் வெளியிலும் போவேன்”

“குட் பாலிசி. சரி நாளைக்கு பார்க்கும்போது கொடு” என்று அவன் கூறவும்,

“தேங்க்ஸ் பாஸ்,” என்றாள்.

ஐஸ்கிரீம் முடிக்கும் வரை பேசாமல் இருந்தவன், அவள் முடிக்கவும்,

“கிருத்தி, நம்ம பிளான அந்த செல்வம் கண்டுபிடிச்சிட்டான்னு நினைக்கிறேன்.“ என்றான்.

“எப்படிச் சொல்றீங்க பிரின்ஸ்?”

“எஸ். உன்னோட கனவு படி அக்பர் இளவரசர், ராணி இருவரும் உளவு பார்க்க வருவதை கண்டுபிடித்து விடுகிறார் இல்லையா?”

“ஆமாம்”

“கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில் தான் நாம இருக்கோம். என்ன அப்போ அது நாட்டுக்காக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.