(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

ஏரியாவில் கிடைச்சாலும் இங்கே டிபரென்ட்டா இருக்கு. டேஸ்டாவும் இருக்கு”

“முன்னாடி எல்லா இடத்திலும், எல்லா சாப்பாடும் கிடைக்காது. இப்போ அப்படி இல்லையே. சவுத் இந்தியன் டிஷ் ன்னு நார்த்லேயும், நார்த் இந்தியன், சைனீஸ் தந்தூரின்னு எல்லா வெரைட்டியும் சவுத்லேயும் நிறைய கிடைக்குது. அல்மோஸ்ட் சின்ன ஹோட்டலில் இருந்து பெரிய ஹோட்டல் வரை கிடைக்குது. ஆனால் அந்த அந்த ஊரில் உள்ள சீதோஷணத்தோட ஸ்பெஷல் அயிட்டமா இல்லாமல், அவங்க ரெகுலர் சமையலோட சேர்த்து சாப்பிட்டா அந்த பூட் நமக்கு நல்லா ஒத்துக்கும். அதோட சத்தும் அப்படியே சேரும். அதனால் முடிந்த வரை அதை ஒருநாள் மெனுவா செட் பண்ணிடுவேன்”

“நைஸ். “ என்றாள்

“ஆமாம். நேத்திக்கு கனவில் ப்ரித்வி வரலையா?” என்றுக் கேட்க, கிருத்திகாவிற்கு மீண்டும் புரைக்கேறியது.

“வந்தாரே . ஏன் கேட்கறீங்க?”

“இல்லை. உன் கனவு பற்றிக் கேட்டப் பிறகு எனக்கு அந்த கிரண் தேவிய ரொம்பப் பிடிச்சு இருக்கு. அந்த காலத்திலேயே என்ன ஒரு வீரம் . நாட்டுப் பற்று எல்லாம் இருக்குப் பாரு. பெண்ணைப் போற்றிப் பாதுகாத்த நம் தேசத்தில் கொஞ்ச காலங்கள் பெண்ணை அடிமைப் படுத்தியும் வச்சிருந்தாங்க. அதற்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் அது தவறு தான். அப்பேற்பட்ட காலத்தில் இந்தக் கிரண் தேவி ஒரு போர் வீராங்கனை, உளவு பார்க்கிறது இது எல்லாம் கேட்டப்போ எனக்கு சிலிர்த்துப் போச்சு. இவங்க வரலாறு எல்லாம் இன்றைய இளம் பெண்களுக்குத் தெரிஞ்சா தன்னைக் காத்துக் கொள்வதின் அவசியத்தை உணர்ந்து கொள்வார்கள் இல்லையா?” என்று கூறவும் கிருத்திக்கு சந்தோஷமும் பொறாமையும் ஒன்றாகத் தோன்றியது. ப்ரித்வி சொல்லும் முன்னரே கிருத்தியின் சிந்தனையும் இப்படித் தான் இருந்தது.

ப்ரித்வியைப் போன்றவர்கள் கிரண் தேவியைப் போற்றுவதில் சந்தேகம் இல்லைதான். அதில அவளுக்கும் அளவில்லா மகிழ்ச்சிதான். அதே சமயம் ஒரு பெண்ணாக அவள் மனதில் சிறு பொறாமை தோண்றியதும் உண்மை.

ஆனால் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் ஆம் என்று மட்டும் தலை அசைக்க,

“ஹேய், சரி சொல்லு. நேற்று என்ன ஆச்சு?” என்றுக் கேட்டான்.

கிருத்தி சொல்லி முடிக்கவும்,

“ஒஹ் . அப்போ அக்பர்க்கு இளவரசர் ப்ரித்வி போட்டப் பிளான் தெரிய வந்துருதுன்னு சொல்றியா?” என்று கேட்டான் ப்ரித்வி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.