(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

வருவாயா?” என்றுக் கேட்க,

“அது என் கால் அளவை யாருக்கும் காண்பிக்க முடியாததால், எடுத்து வந்து விட்டேன் அரசே” என்றுக் கூறவும், எனில் இவர்கள் யார் என்பது போல் கையசைத்துக் கேட்க, அவர்களை ஒரு பார்வைப் பார்த்து விட்டு,

“அரசே, எனக்கு எல்லோரையும் விரட்டி வேலை செய்ய வைக்கும் தைரியம் இல்லை. அதே போல் என் தாய் மொழியில் பேசக் கூடியவர்கள் இங்கு யாரும் இல்லை . “ அதனால் இவர்கள் என்னோடு இருக்கட்டுமே” என்றுக் கேட்கவும் , சம்மதமாக தலை அசைத்தார்.

அப்போது எல்லோரையும் ஒரு முறை பார்த்த அக்பரின் பார்வை , கிரண் தேவியின் முகத்தில் சற்று அதிகமாகவே படர்ந்து மீண்டது.

ராணி தன் சிரம் தாழ்த்தி இருந்ததால், அந்தக் கண்களின் பயத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லை.

அதே போல் இளவரசன் ப்ரித்வியையும் அவர் கண்கள் கண்டு கொண்டது. இளவரசனும் அக்பரின் பார்வையை புரிந்து கொண்டாலும், கண்டு கொள்ளாமல் நின்று இருந்தான்.

அக்பர் அவனைச் சற்று ஆச்சரியமாக நோக்கியவர், பின் அவரின் முகத்திலும் புரிந்து கொள்ள முடியாத பாவனை தோன்றியது.

பின் மீண்டும் தன் ராணியிடம் திரும்பி , “ராணி, இவர்களை உனது அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொள். இந்த வீரர்களை உன் காவலுக்கு பயன் படுத்திக் கொள் “ என்று மட்டும் கூறி விட்டு,

அங்கிருந்த பெண்கள் பக்கம் திரும்பியவர்

“இங்குள்ள பழக்கம் தெரியும் தானே. தினமும் புர்கா போட வேண்டும் “ என்றுக் கூறினார்.

பெண்கள் எல்லோரும் சற்றுக் கவலையுடன் பார்க்க, அக்பர் ஓய்வெடுக்கச் சென்றதும், அவர்களிடம் ராணி ஜோதா பேசினாள்.

“பெண்களே , ஒன்றும் யோசனை செய்யாதீர்கள். நம் அரண்மனைக்குள் எந்தக் கட்டுப்படும் இல்லை. வெளியில் செல்லும் போது அவர்கள் கட்டுபாடுக்குள் அடங்கி நடந்து கொள்ளுங்கள். அதற்கு மேல் உங்களுக்கு உதவ என்னால் இயலாது” என்றுக் கூறவும் மெலிதாக தலை அசைத்துக் கொண்டார்கள்.

வீரர்கள் பக்கம் திரும்பியவள்,

“வீரர்களே நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு வாருங்கள். வந்து தங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள் யார் , யார் எந்த திசையில் காவல் புரிவது என்று” என்றுக் கூறி அனுப்பி வைத்தாள் ஜோதா ராணி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.