(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பலர் அங்கே டூரிஸ்ட்டாக வந்து இருந்தனர். நம் நாட்டவர், கோவில் என்பதால் வந்து இருந்தனர்.

ஒரு சுற்று சுற்றி விட்டு ஆம்பர் கோட்டைக்குச் சென்றனர். கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.

இந்தக் கோட்டையில் காணப்பட்ட ஏரியும் அதனைச் சுற்றியுள்ள தோட்டங்களையும் கண்ட கிருத்திகாவிற்கு , முந்தைய தினம் கனவில் பார்த்த இடத்தை உணர்த்தியது இந்த கோட்டை ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அங்கே இங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அங்கே யானை சவாரி செய்ய வசதி இருக்க, எல்லோருமே ஏறி யானை சவாரி செய்தனர். ஒரு யானையில் மூன்று பேர் ஏற, ஒரு சிலர் வரவில்லை என்றுக் கூறி விட்டனர்.

கிருத்திகா ஏறி இருந்த யானையில் ராகவி, கிருத்திகா, திலிப் மூவரும் ஒரு யானையில் அமர்ந்து இருந்தனர். ப்ரித்வி வேறு ஒரு மாணவர்களோடு ஏறிக் கொண்டான்.

எல்லோரும் ஏறியதும் யானைக் கிளம்பியது. அது எழுந்து நிற்கும்போது ஓ வென ஒரு கத்தல், பின் அடங்கியது. அது அசைந்து அசைந்து நடந்த்தில் கொஞ்சம் பயம் ஏற்பட, ஒரு சில நிமிஷங்களுக்குள் சரியாகி விட்டது. பின் எல்லோரும் யானை மேல் இருந்து செல்பி, இயற்கைக் காட்சிகள் என்று படமெடுத்துக் கொண்டனர்.

அதில் திலிப் “சிகப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது” என்றுப் பாட,

கிருத்தியும், ராகவியும் “இதோ வந்துட்டாருடா ஆசை நாயகன் அஜித். நீ பாடறத கேட்டு யானை மிரண்டு ஓடப் போகுது” என்று கிண்டல் அடித்தனர்.

“இந்த உலக அழகிகளைப் பார்த்து ஓடாத யானை, என் குரல் கேட்டு ஓடப் போகுதாக்கும்” என்று பதில் கொடுத்தான் திலிப்.

இவர்கள் இப்படி அரட்டை அடித்துக் கொண்டு இருக்க, யானை கோட்டை முழுதையும் ஒரு சுற்று சுற்றி வந்து இருந்தது.

யானை நின்றதும் இறங்கியவர்களுக்கு லேசாக தள்ளாட, தங்களை நிதானப் படுத்திக் கொண்டனர்.

அங்கேயே அன்றைய மதியப் பொழுதைக் கழித்தவர்கள், மாலையானதும் கிளம்பி ஜெய்பூர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.