(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இருந்த கோலம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு..அதைவிட மகிழன் தம்பியோட அம்மா..அந்த பொண்ணு முகத்தை பாக்குற தைரியம் கூட எனக்கு இல்ல..என்னதான் அவன் வர்மா குடும்பத்தோட மூத்த வாரிசா இருந்தாலும் என்னோட நல்ல சிநேகிதன்..வேலைக்காரனா ஒரு நாளும் என்னை பார்த்ததில்ல அவன்.

அவன் இழப்பு என்னையே அத்தனை பாதிச்சுது னா மத்தவங்களை பத்தி கேட்கவா வேணும்..மகிழன் தம்பிக்கு 15 வயசு அப்போ..இரண்டும் கெட்டான் பருவம்..பெரியய்யா தான் தம்பியை முழுசா மீட்டெடுத்தார்.ம்ம் கடவுளுக்கு இரக்கமே இல்லையோனு முதல் முதலா அன்னைக்குத் தான் தோணிச்சு.”

எனக்கு அவங்களைப் பத்தி சொல்றீங்களா?மகிழன் கிட்ட கேட்டா எனக்கே நியாபகம் இல்லாத விஷயத்தை கேட்டா நான்என்ன சொல்றதுனு சொல்றான்.”

அதற்குள் அவரை யாரோ அழைக்கும் சத்தம் கேட்க ஷியாமாவை தோட்டத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு பத்து நிமிடத்தில் வருவதாய் சொல்லிச் சென்றார்.

தோட்டத்தில் இருந்த பென்ஞ்சில் அமர்ந்தவள் ஏதேனும் விவரம் கிடைக்குமா என்ற சிந்தனையிலேயே இருக்க அருகில் கேட்ட காலடி சத்ததில் நிமிர்ந்து பார்த்தாள்.அங்கு மகிழனை கண்டவள் சிநேகப் புன்னகையோடு எழுந்து நின்றாள்.

ஹாய் குட் மார்னிங்..”

குட் மார்னிங் ஷியாமா..என்ன காலையிலேயே இங்க வந்துட்டீங்க..சாப்பிட கூட இல்ல போல..”

ம்ம் உங்க சித்தப்பாவை பார்த்துட்டு வந்தேன் அப்படியே ஏதேதோ யோசனை அதுமட்டுமில்லாம பெருசா பசி எதுவும் இல்ல..அதான்.”

ம்ம்..முத்து அண்ணா என்ன சொல்றார்?”

உங்க சித்தப்பா இன்னமும் யாரோ அங்க அந்த சமயத்துல இருந்த மாதிரி தான் சொல்றார்.ஆனா முத்து அண்ணா யாருமே இல்லனு சொல்றார்.”

மே பி முத்து அண்ணா சொல்றது தான் உண்மையா இருக்கலாம் இல்லையா?”

வாய்ப்பு இருக்கு..ஆனா எனக்கு எப்பவுமே செல்ப் இன்ஸ்டிங்கிட் மேல ரொம்ப நம்பிக்கை உண்டு மகிழன்.நம்ம மனசு எப்பவுமே நமக்கு சரியான அறிகுறிகளைத் தான் காட்டும்னு நம்புவேன்.”

சோ?”

சோ உங்க சித்தப்பாவோட உள்ளுணார்வுப் படி நிச்சயம் அங்க யாரோ இருந்துருக்காங்க.அவர் என்கிட்ட சொல்லும் போது குழப்பத்துல சொன்ன மாதிரியே இல்ல..ரொம்பவே தெளிவா அவர் பீல் பண்ணதை அப்படியே சொன்னார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.