(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

நம்மளை ஒருத்தங்க பார்வையால பின் தொடர்ந்தாலே அதை உணர்ற சக்தி நமக்கு இருக்கும் போது…இது பொய்யாகுறதுக்கு வாய்ப்பு இல்ல மகிழன்.”

எல்லாம் சரி தான் ஆனா அத்தனை சீசீடிவியும் செக் பண்ணி பார்த்தாச்சு யாரும் வந்து போனதற்கான அறிகுறி இல்ல.அன்னைக்கு முழு நாளும் எல்லா காட்சிகளும் பதிவாய்ருக்கு.அப்படி இருக்கும் போது..ஹவ்??!!”

நீங்க வீட்டுக்கு வெளியே சொல்றீங்க..நான் வீட்டுக்குள்ள சொல்லிட்டு இருக்கேன்..”

என்ன சொல்ல வர?!”

ஒருவேளை உங்க அத்தை சொன்ன மாதிரி அமானுஷ்யம் எதாவது??”,

ஜஸ்ட் ஷட் அப் ஷியாமா படிச்ச பொண்ணு மாதிரி பேசு..அவங்க தான் ஏதேதோ உளர்றாங்க னா..இந்தகாலத்துல நீ கூட இதெல்லாம் நம்புறியா?அதுவும் ஒரு அதிகாரியா இருந்துட்டு எப்படி உன்னால இவ்ளோ சில்லியா யோசிக்க முடீயுது..ரியலி டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரம் யூ..”,என்றவன் அவள் அழைப்பைக் கூட காதில் வாங்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அவன் அங்கிருந்து செல்வதற்கும் முத்து அவளை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது.

என்னாச்சு பாப்பா தம்பி கோவமா போற மாதிரி இருக்கு?”

ஆங்ங் அதெல்லாம் ஒண்ணுமில்லணா சின்ன வாக்குவாதம்..வேற ஒண்ணும் இல்ல..சரி நீங்க உக்காருங்க..”

அங்கிருந்த பௌன்ஞ்சில் அவர் அமர்ந்த பின் எதிர் இருக்கையில் அமர்ந்தாள் ஷியாமா.

உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணுது பாப்பா..”

என்ன ணா?”

இல்ல உன் நடை பழகுற விதம் எல்லாம் அப்படியே போலீஸ் மாதிரி இருக்கு..ஒருதனி கம்பீரம் இருக்கு மா உன்கிட்ட..”

ஹா ஹா நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதனால கொஞ்சம் பையன் மாதிரி வளர்த்துட்டாங்க..என் ப்ரெண்ட்ஸ் கூட இப்படிதான் சொல்லுவாங்க”,என்றவள் இயல்பாய் முடித்துக் கொள்ள பதிலுக்கு புன்னகைத்தவர் அமைதியாய் இருந்தார்.

சொல்லுங்க ணா மகிழன் அப்பாவை பத்தி கேட்டேனே..”

ம்ம் என்னத்தை சொல்றது..நான் இந்த வீட்டுக்கு வந்த அப்போ 27 வயசு அப்போ அவனுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து பதினைஞ்சுநாள் இருக்கும்.சிலரை பார்த்தவுடனேயே நமக்கு ஒவ்வொரு விதமான உணர்வு வந்துரும்ல அப்படிதான் எனக்கும் அவனைப் பார்த்தவுடனே ஒரு நட்புணர்வு இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.