(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இருக்கணும்னு பிஸினஸை பிர்ச்சு கொடுக்க முடிவு பண்ணார்.

அதுபடி தன் இரண்டு பசங்களும் கார்மென்ட்ஸ் பிஸினஸையும் மருமகன்கள் மார்பிள் பிஸினஸையும் பார்த்துக்குற மாதிரி பண்ணிட்டு மூத்த பிள்ளையான அமித் வர்மாவை வர்மா க்ரூப்க்கு எம் டி ஆகினார்.

இரண்டு மூணு வருஷம் பெருசா எந்த பிரச்சனையும் இல்ல அதுக்கப்பறம் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பிச்சுது.இருந்தாலும் பெரியவங்க இருந்ததுனால எல்லாமே பேசி தீர்த்துகிட்டாங்க.

பொதுவா எந்த விஷயமுமே வீட்டு ஆட்களைத் தாண்டி வெளில வராது.அமித் சிநேகிதன்ங்கிற முறையில சில நேரம் என்கிட்ட மனசுவிட்டு பேசுவான்.அவன் சாகுறதுக்கு முந்தின நாள் கூட இராத்திரி ரொம்ப நேரம் என்கிட்ட பேசினான்.

மனசே ஒரு மாதிரி இருக்கு டா முத்து.எதோ ஒண்ணு தப்பா நடக்கப் போகுதுனு தோணுது.தியா பாவம் டா ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா இனியாவது அவளும் மகிழனும் சந்தோஷமா இருக்கணும்.அது மட்டும் தான் இந்த ஜென்மத்தில் எனக்கான ஒரே ஆசை..அது இதுனு என்னவோ பேசினான்.

ஒரு கட்டத்துக்கு மேல அவனைத் திட்டி தான் தூங்கவே அனுப்பினேன்.மறுநாள் காலையிலேயே கார்மென்ட்ஸ் குடோன்ல தீ பீடிச்சுருச்சுனு போன் வரவே அடிச்சு பிடிச்சு காரை எடுத்துட்டு ஓடினான்.

டிரைவர் எப்பவுமே ஒன்பது மணிக்குத் தான் வருவான்..விஷயம் அவசரம்ங்கிறதுனால நானே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.குடோன் அப்போ கொஞ்சம் ஊருக்கு வெளியே தான் இருந்தது.அப்படி இவன் வேகமா போனப்போ எதிரில வந்த லாரி

ஒரு மணி நேரத்துல வந்த அந்த போன் குடும்பத்தையே புரட்டி போட்டுருச்சு..பெரியய்யாவை கூட்டிகிட்டு நானும் சின்னவங்க ரெண்டுபேரும் ஓடினோம்.நாங்க போறதுக்குள்ளயே எல்லாம் முடிஞ்சுருந்தது.

ஆஸ்பத்திரில வச்சு பெரியய்யா அழுத அழுகை என் ஜென்மத்துக்கும் நான் மறக்க மாட்டேன்.லாரி ட்ரைவரைப் பிடிச்சு விசாரிச்சதுல நல்ல தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டிருக்கான்.

ஆத்திரம் தீர அடிச்சேன் அவனை..கொன்னுட்டு ஜெயிலுக்கு போற அளவுக்கு ஆத்திரம் எனக்கு..எல்லாருமா சேர்ந்து பிரிச்சு விட்டாங்க..கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள வீட்ல போட்டோவா தொங்கினான் என் சிநேகிதன்.

அந்த விஷயத்தை கேட்டு அப்படியே உக்காந்தவங்க தான் தியாம்மா ஒரு சொட்டு கண்ணீர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.