(Reading time: 15 - 30 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“இப்போ எத்தனை மாசம் மகி” என்று கேட்டான்.

“மூணு மாசம்ண்ணா!”

“அவள் இங்கே வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவளை காரணம் காட்டி புகழ்கிறாய்”

“இருந்தால் என்னடா அதிதியின் அதிர்ஷ்டம்தான் பிள்ளை தங்கி இருக்கு. அவள் வந்தபின் கற்பகத்தின் உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் வந்திருக்கு தெரியுமா”

“ஓ…. “ அது உண்மைதான். அதிதி அம்மாவை அருமையாக கவனித்து கொள்கிறாள்.

“என்ன ஓ…?. அண்ணா ‘அதிதி தேவோ பவ’ன்னு சொல்லியிருக்காங்க தெரியுமா?”

அடப்பாவி! அது  நம் நாட்டின் விருந்தோம்பலின் சிறப்பை விளக்க  சொன்ன வார்த்தைகள். அதிதி என்றால் விருந்தினர்… அவர்களை தெய்வத்திற்கு சமமாக நினைத்து உபசரிப்போம் என்று சொன்னது.

“அது இந்த அதிதியை பற்றி இல்லை.”

“எனக்கு இந்த அதிதிதான். உனக்கு அண்ணியைபற்றி தெரியவில்லை”

“ஆமாம், உனக்குதான் அவளைபற்றி தெரியவில்லை. டைவர்ஸ் அதுஇதுன்னு ஓடிக் கொண்டிருக்கிறாய்” அப்பாவும் சேர்ந்து கொண்டார்.

“ஆமாம் எனக்குதான் தெரியவில்லை…” என்று கடுகடுவென கூறினான்.

“விடு மாப்பிள்ளை அதிதிக்கும் உனக்கும் ஏனோ ஒத்துப் போகவில்லை. அதனால்தான் உன்னால் அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”

“என்னால் இல்லை கௌதம்… அவள்தான் என்னை விலக்கி வைக்கிறாள். அதை உனக்கு நிருபித்து காட்டுகிறேன் பார்” என்றான்.

“சரி… சரி வா… . இருட்டும்  நேரமாகி விட்டது”

“ம்… நீங்கள் போங்கள். நான் குளித்து உடை மாற்றி வருகிறேன்” என்று அதிரதன் கிளம்பினான்.

“இரு நானும் வருகிறேன்” என்று கௌதமும் உடன் வந்தான்.

“ம்… சொல்லு கௌதம்” என்றான்.

“என்ன சொல்லணும்?”

“ஏதோ பேசத்தானே என்னுடன் ஒட்டிக் கொண்டு வருகிறாய் பேசுப்பா”

“ஹாங்… இதெல்லாம் நல்லா பேசு…. அது கிடக்கட்டும்.. ரத்தன்… அதிதியை முழுசா பிடிச்சுபோய்தானே கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாய். “

“ஆமாம் பிடிச்சுது என்றுதான் சொன்னேன். ஆனால் என்னுடைய வாழ்க்கை முறைக்கு அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.