(Reading time: 15 - 30 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“எனக்கு நினைவு வந்து விட்டது. இதுபோலத்தான் நான் டென்த் படிக்கும்போது சொன்னீங்களே… போர்களத்தில் முன்னின்று தேரை வழி  நடத்தி எதிரிகளை துரத்தியடித்து… முன்னேறுபவன்”

“இப்போது போர்களம் இல்லை அதிரதன். வாழ்க்கைதான் போர்களம். நாம்தான் நம்முடைய தேரை வழி  நடத்தி செல்ல வேண்டும்”

புரிகிறது… அதிதியுடனான வாழ்க்கையை போராடி சீராக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அப்படியென்ன அவசியம்…?

“உன்னை அதிதியுடன் போராடு என்று சொல்லவில்லை. அதிதியுடன் இணைந்து போராடு. சீர் செய்ய வேண்டியவை இன்னும் இருக்கின்றன. சரி நான் அம்மாவை பார்க்கப் போகிறேன்.” அவர் அவனை விட்டு கிளம்பினார்.

இன்னும் என்ன சீராகணும்?. படித்தாயிற்று… வேலை கிடைத்தாயிற்று…  நாட்டிற்கு தேவையான நல்ல விசயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்…. நல்ல மகன்…  நல்ல அண்ணன்… இன்னும் என்ன?

அக்டோபர்-14

அதே நீதிமன்ற அறை!

அதே கவுன்சலர்… அவர் முன் அதிரதனும் அதிதியும் நின்றார்கள்.

அவர்களுடைய வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டவர்,

“இருவரும் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திருமணம்கூட எளிதாக செய்து கொள்ளலாம். ஆனால் சட்டபடி விவாகரத்து பெறுவது என்பது ரொம்பவும் கடினமானது. இங்கே ரொம்பவும் கேள்வி கேட்போம். மியுட்சுவல் என்ற வார்த்தை உண்மையானதுதானா, ஸ்திரமானதுதானா என்று தெரிந்து கொள்ளத்தான் வழக்கை விசாரிப்போம்.”

இருவரும் அமைதியாக இருந்தனர்.

“ஏனெனில் உணர்ச்சி வசப்பட்டு  நிறைய பேர் டைவர்ஸ் வாங்கி விட்டு பிறகு வந்து புலம்பிக் கொண்டு நிற்கின்றனர். முக்கியமாக பெண்கள்…” என்று கூறி  நிறுத்தினார்.

“புது பிசாசைவிட பழைய பிசாசை எளிதாக சமாளித்து இருக்கலாமோ என்று தோன்றும்போல” என்று சிரித்தவர்,

“வெவ்வேறு சூழலில் இருந்து வந்து இணையும் இருவருக்குள்ளும்  நூறு சதவிகிதம் கருத்து ஒற்றுமை இருக்கும் என்று சொல்ல முடியாது.  அதிலும் வாழ்க்கையின் பாதியில் வந்து இணையும் ஒரு உறவு பல பரிசோதனைகளை தாண்டினால்தான் உறுதியாகும். அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.