(Reading time: 15 - 30 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

-அடிப்பாவி.. அவன் எப்போது அப்படி சொன்னான்?. இவளாக கதை விடுகிறாளே! உண்மையில் யார் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது?’

“உயிருக்கு உயிராக பழகியவர்களை பிரிப்பது பாவமில்லையா. உனக்கு என்ன தைரியம்”

-உயிருக்கு உயிராகவா… உலகமகா பொய் யுவர் ஆனர்…  அப்புறம் அதிதியின் தைரியம் பற்றி கேள்வி கேட்கிறாளே? அப்படி கேட்காதவனையே கதற விட்டாளே… தனு நீ காலி! வாயை மூடிட்டு போம்மா!

அமைதியாக அதிதி பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கவும் தனுவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. ஆவேசமாக அவள் அருகில் சென்று,

“முட்டை கண்னை வச்சிட்டு முறைத்து பார்த்தால் பயந்துடுவோமா… இப்ப எனக்கு பதில் வேணும்…  நானும் மாமாவும்…” அவள் முடிக்கும் முன்னே,

“”என்ன நீயும் உன் மாமாவும்… என்னவாம்? உயிரு தயிருன்னு எதுவோ சொன்னியே… எருமை… எருமை… உன் பேச்சை நம்பி நானும் கல்யாண மேடைக்கு போனேன் பாரு என்னை சொல்லணும். என்னவோ உன் மாமன் கல்யாணத்தை  நிறுத்திடுவான்… உன்னை தூக்கிட்டு போயிடுவான்… அப்படினெல்லாம் கதை விட்டியே..” பேசிக் கொண்டே அதிரதனையும் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.

“தூக்கிட்டு போகிற ஆளை பாரு. அதுகூட வேணாம் ஓடிப் போயிருக்கலாமில்ல. நீ சும்மா இருந்திருந்தால் ஊர் கூடும் முன்னே நானே கல்யாணத்தை  நிறுத்தி இருப்பேன். கடைசி நிமிடம்வரை கல்யாணம் நின்னுபோயிடும்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போணேன். உன்னை நம்பியதற்கு என்னைதான் ----ல அடிச்சுக்கணும்”

“இங்கே பாரு. நான் அவசரமா வெளிநாடு போயிட்டேன்”  தனுவிற்கு  குரல் இறங்கி போயிற்று.

“என்ன பெரிய வெளிநாடு?. வாழ்க்கை முக்கியம்னு நினைத்தால் ஓடி வந்திருக்க வேணமா? மிஞ்சி மிஞ்சி போனால் ஆயிரம் ரூபா செலவாகுமா”

-ஆயிரம் ரூபாயா… லண்டன் டு சென்னை செலவு…? ஐயோ… இந்த பொண்ணு எவ்வளவு உலகம் தெரியாதவளாக இருக்கிறாளே’ அதிரதன் மனதிற்குள் இரக்கப்பட்டான்.

“ம்… எங்க அம்மா கல்யாணத்தை  நிறுத்த ஏதாவது செய்யும்னு நினைச்சேன். இப்படி எங்க காதல் கைகூடாம போயிடுச்சே”

-‘காதலா… ! இதென்னடா ஓவரா பேசிகிட்டு இருக்கிறாளே. இரண்டு பேருமாக சேர்ந்து அவனுடைய வாழ்க்கைக்கு திரைகதை வசனம் எழுதி இருக்காங்க. அவனாக ஓடிப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.