Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா

வன் இரண்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடலாம் என்று நினைத்திருக்க ,அப்படி இப்படி என்று இவர்கள் கிளம்ப மணி நான்காகி போனது. எவ்வளவு சொல்லியும் தங்க மறுத்துவிட்டான் பாலா  ஏற்கனவே பொன்னி கோபத்தில் இருந்தததால் .. மல்லிகாவின் முகத்தில் தெரிந்த கோபத்தை அவள் கண்டறியவில்லை. மல்லிகாவும் கோபமாகத்தான் இருந்தாள்!!

"சித்தி ... வினோதினியை இங்க அனுப்புங்களேன் .."என்று சொல்ல

"எதுக்கு ?" என்றாள் அடக்கப்பட்ட கோபத்தில்

"ம்" என் பக்கத்துலயும் ஒரு எரிமலை, முன்னாடியும் ஒரு எரிமலை நான் பொசுங்கி போயிடுவேன் போலிருக்கு .... வினோ என் பக்கத்துல இருந்தா என்னை காப்பாத்துவா இல்ல?” என்று கேட்க

வினோ “க்ளுக்” என்று சிரிக்க, "வர வர உன் சேட்டை அதிகமாச்சு வினோ ,இருக்கட்டும் வீட்டுக்கு போய் வெச்சிக்கிறேன் " என்று அவள் தாய் சொன்னதும்,

"வை பிரதர்  இப்ப ஹாப்பியா நீ?" என்று அவளும் பாலாவை முறைக்க , இருக்கிற  லேடீஸ் எல்லாம் என்னை இப்படி முறைச்சா சின்ன பையன் நான் என்ன பண்ணுவேன்?” என்று அருகில் கண் மூடி அமர்ந்திருந்த பொன்னியின் காதருகே சற்று சத்தமாகவே பேச ....கண்களை திறந்து அவனை முறைத்தவள் மீண்டும் கண்களை மூடி கொள்ள .அதற்கு மேல் அவனும் பேசவில்லை.

வெகு நேரம் கழித்து தனது தோள் மீது ஏதோ பாரம் இருப்பது போல் உணர்ந்தவள் விழிக்க அவள் தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் அவன் . ஓட்டுனரை தவிர அனைவருமே உறங்குவது போல் தான் இருந்தது ,

மெல்ல தோளில் சரிந்திருந்த அவன் தலையை விலக்க நினைக்க சட்டென விழித்தவன் சூழலை உணர்ந்து "சாரி ஏதோ தூக்கத்துல" என்று சொல்லிவிட்டு மீண்டும் நேராக அமர்ந்து உறக்கத்தை தொடர  "என்ன இவன் இப்படி தூங்குறான்?" என்று தான் தோன்றியது அவளுக்கு அவளுக்கென்ன தெரியும் தூக்க மாத்திரை கொடுத்து அவளை தூங்க வைத்தவன் ஒரு நொடி கூட உறங்கவில்லை என்று?

உறங்கிய சில நொடிகளில் எல்லாம் மீண்டும் அவள் தோளில் சரிய "வேணும்னே பண்றான் ....பிராடு என்றவள் மீண்டும் அவன் உறக்கத்தை கலைக்கும் விதத்தில் அவன் தலையை விலக்க முனைய .... உறக்கம் கலைந்ததில் எரிச்சல் ஆனவன். "என்னடி உன் பிரச்சனை ..தூங்குறேன் இல்ல ...சும்மா இம்சை பண்ணிட்டு" என்று ஒரு கையால் பின்னிருந்து அவள் இடையை இறுக்கி பிடித்து கொண்டு அவள்  தோளில் இன்னும்

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையாJessy 2019-10-25 14:46
nice epi mam padikka padikka interesting ah irukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-10-25 14:12
:clap: nice epi mam (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :clap: kathai interesting saga poguthu. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையாrspreethi 2019-10-25 13:54
Super update.... Waiting for next update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top