(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவர்களை அழைத்துச் சென்றாள்.முன்னிருக்கையிலேயே இருவரும் அமர அந்த இரண்டு மணி நேர பயணம் நிறைய நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது இருவருக்கும்.

இருந்தும் எந்த ஒரு இடத்திலும் தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய உரையாடல் எழவே இல்லை.இருவரின் வேலை  சம்மந்தப்பட்ட அரசியல் விளையாட்டு என்பதைப் பற்றியதாகவே இருந்தது.

கோயம்புத்தூர் ஏர்போர்ட்டை அடைந்தவர்களுக்குத் தயாராய் கார் வெளியே காத்திருக்க அங்கிருந்த அவனின் கெஸ்ட் கவுஸை நோக்கி கார் பறந்தது.

இது வேலை விஷயமா நான் அடிக்கடி வர்ற இடம் அதனாலேயே இந்த ப்ராப்பெர்டி வாங்கினோம்..இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ணலாம்.நாளைக்கு மார்னிங் 8 மணிக்கு நான் கிளம்பினேன்னா திரும்ப வர சாய்ந்திரம் ஆய்டும்..”

ஓ அப்போ நான் மார்னிங் உங்க அம்மாவோட ஊருக்கு கிளம்புறேனே..நீங்க இல்லாம நான் முதல்ல போறதுதான் எனக்கும் வசதி..தங்குற இடம் எல்லாமே நான் பாத்துக்குறேன்..அட்லீஸ்ட் நீங்க வர்ற வர..”

ம்ம் அதுவும் கரெக்ட் தான்..அப்படியே பண்ணிடலாம்..”,எனும்போதே அவர்களுக்கான இடம் வந்துவிட வேகமாய் ஒரு வேலையாள் வந்து அவர்களின் பெட்டிகளை உள்ளே எடுத்துச் சென்றார்.

பயணக் களைப்பு என்பதைத் தாண்டி அந்த ஊருக்கே உரிய அழகு மனதை வருடுவதாய் இருந்தது.இருவரும் அவரவர் அறைகளில் சென்று அடைந்து கொள்ள ஷியாமாவிற்கு சற்று காலார நடந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே இரவு பைஜாமாவில் தன் கைப்பேசியையும் ஹெட்செட்டையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆடியோ வடிவிலான அவளுக்குப் பிடித்த ஒரு கதையை ஒலிக்க விட்டு நடக்க ஆரம்பித்திருந்தாள்.என்றும் இல்லாத ஒரு சோர்வு அவளிடத்தில் பயணம் முதலே மகிழனும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.இருந்தும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

இப்போது தனது அறைக் கண்ணாடி கதவு வழியே அவளை வெளியில் பார்த்தவன் அங்கு செல்ல அவனைக் கண்டதும் சட்டென தான் அத்தனை உணர்ச்சிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாள்.

தூங்கலையா?”

இல்லை சும்மா கொஞ்ச நேரம் நடந்துட்டு போலாமேனுதான்..நீங்க?”

உன்னைப் பார்த்தவுடனேதான் வந்தேன்..ரியலி ஆர் யூ ஓகே?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.