(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

யா ஐ அம் ஃபைன்..ஏன் என்னாச்சு?”

பார்த்தா அப்படி தெரியலேயே!”

“??!!”

மார்னிங்ல இருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன்..சம்திங் மிஸ்ஸிங்..என்னை நம்பி ஷேர் பண்ணலாம் நிஜமாவே ப்ரெண்டா நினைச்சா..”

இருளை வெறித்து நின்றவள் சில நொடிகள் அமைதியையே பதிலாய் கொண்டிருந்தாள்.அதற்கு மேல் கேட்பதற்கு ஒன்றுமில்லையென மகிழனும் தோளைக் குலுக்கியவாறு அங்கிருந்து நகர முற்பட அவள் பார்வை மாறாது வார்த்தைகள் மட்டும் வெளிவந்தன..

 “இன்னைக்கு என் பர்த் டே..”

ஹே..ஹாப்பி பர்த் டே ஷியாமா..”

லேசாய் புன்னகைத்தவள்,”தேங்க் யூ..பட் இது என் பிறந்த தேதி இல்லை..”

“??!”

நான் ஆசிரமத்தில சேர்க்கப்பட்ட தேதி..அதனால அவங்களைப் பொறுத்த வரை என்னோட பிறந்தநாள்..”

வாட்உன் பரெண்ட்ஸ்??”

எனக்கு சரியா எதுவும் தெரியாது.யாரோ ஒருத்தர் நாலு வயசு குழந்தையான என்னை அந்த ஆசிரமத்து வாசல்ல விட்டுட்டு போனார்னு சொல்லுவாங்க..அதைத் தவிர எதுவும்..”,என்றவள் தோள் குலுக்கி இரு கைகளையும் மார்பின் குறுக்கே இறுகக் கட்டிக் கொண்டாள்.

ரியலி சாரி..இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே இல்ல..”

தட்ஸ் ஓகே..எத்தனை முயற்சிபண்ணாலும் இந்த நாளை மட்டும் என்னால சாதாரணமா கடந்து வர முடியுறதே இல்ல..கண்ணுக்குத் தெரியாத அந்த கடவுள் மேல கோபைம் வரும்..என்னை பெத்தவங்க மேல கோபம் வரும்..

ஒரு பொண்ணா விவரம் தெரியாத வயசுல அனுபவிச்ச ரணங்கள் நியாபகம் வரும்.நிறையவே கசப்பான அனுபவங்கள் வாழ்க்கையில்.சின்ன குழந்தைனு கூட பார்க்காம இந்த உலகம் காட்டின கொடுரப் பக்கங்கள் நிறையவே இருக்கு எனக்குள்ள..

இன்செக்யூயூரிட்டி பயம் ஆண்கள்னாலே ஒருவித வெறுப்பு இப்படி நிறைய இது எல்லாத்தையும் உடைச்சு எறியணும்ங்கிற வெறில சேர்ந்ததுதான் இந்த வேலை.ஸ்பான்ர்ஸ் மூலமா கிடைச்ச படிப்பை பத்திரமா பிடிச்சுகிட்டேன்.நினைச்ச படிப்பை முடிச்சு இந்த வேலையில் வந்து நின்ன முதல் நாள் அத்தனை பெரிய கர்வம் எனக்கு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.