(Reading time: 12 - 23 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

யாரையும் அவ்ளோ சீக்கிரம் நம்ப மாட்டேன்.அதனாலேயே ஒரு குற்றவாளியை கண்டு பிடிக்குறதுங்கிறது எனக்கு சுலபமா இருந்தது.எந்த சென்டிமென்டும் கிடையாது.அதனால பயமும் கிடையாது.

எனக்கான மரியாதையும் என் மீதான பயமும் தான் எனக்கான மிகப் பெரிய சொ.து..நம்மளோட முதல் சந்திப்பும் அப்படி அமைஞ்சது தான்.ஆனா நீங்க ஒருவிதத்துல என்னை ப்ரெண்டா நினைப்பீங்கங்கிறது நானே எதிர் பார்க்காத ஒண்ணு..

எப்படி சொல்றது யூ ஆர் அ கைண்ட் சோல் பை நேச்சர்…ஆனா அது எல்லாருக்கும் ஏன் உங்களுக்கே தெரியாத மாதிரியான முகமூடி தான் இந்த எம்வீனு புரிஞ்சுது.உங்களுக்கு எப்படி நண்பர்கள்னு யாரும் கிடையாதோ அதே தான் எனக்கும்.இந்த நம்பிக்கை பாண்டிங் இதுல எல்லாம் துளியும் நம்பிக்கை இருந்தது இல்ல.

அதனாலேயே என்னைப் பத்தின எந்த உண்மையும் யாருக்கும் தெரியாது..அம்மா அப்பா குடும்பம் அது இதுனு எனக்கு தோணுற விஷயத்தை கேட்குறவங்களுக்கு சொல்லிடுவேன்..

ஆனா கேஸ் இன்வெஸ்டிகேஷனைத் தாண்டி யூ ஆர் டிரஸ்டிங் மீ..அந்த ஒரு விஷயம்தான் இப்போ இத்தனையும் உங்களோட பேசுறதுக்கான காரணம்..நவ் பீலிங் பெட்டர்..தேங்க்ஸ் பார் தட்..”

கைகளைப் பின்புறம் கட்டியவனாய் கால்களை அழுத்தமாய் தரையில் பதித்திருந்தவன் தன் பக்கவாட்டில் நின்றவளை ஒரு முறை பார்த்தவாறு,”வாழ்க்கை யாருக்கு எந்த மாதிரியான ப்ளேவர் வச்சுருக்குனு கண்டு பிடிக்க முடியுறதே இல்லை..சீயர் அப்..உனக்கும் எனக்கும் பெருசா வித்தியாசம் இல்லை..நீ யாரும் இல்லாம அநாதைனா நான் எல்லாம் இருந்தும் அநாதை அவ்வளவு தான் வித்தியாசம்.

அதுவும் என் நிலைமையைப் பார்க்கும் போது உன் நிலைமை ரொம்பவே பரவாயில்லை தான?”

சோ ட்ரூ..இத்தனை பெரிய குடும்பமா இருந்து என்ன ப்ரோயோஜனம்.ஒருத்தருக்கொருத்தர் உண்மையான பாசம் இல்ல..சொல்லப் போனா உண்மையே இல்லை.எத்தனை விதமான மனுஷங்க..தப்பா எடுத்துக்கலனா ஒரு விஷயம் சொல்லவா?கேஸை விசாரிக்குற அதிகாரியா இல்லை..உங்களோட ப்ரெண்டா..”

கண்டிப்பாசொல்லு..”

உங்க தாத்தாவின் இறப்புக்கான காரணம் யாருனு தெரியும் போது அதை உங்களால கண்டிப்பா தாங்கிக்க முடியாம போறதுக்கான வாய்ப்புகள் இருக்கு..சோ ஸ்டே ஸ்டார்ங்..”

ஏன் அப்படி சொல்ற?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.