(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பெரிய தந்தையான மகாராணாப் பற்றித் தெரிந்துக் கொள்ளும்போது அவ்வப்போது உன்னையும் அறிவேன். ஆனால் ஏன் இப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?”

“உங்களைப் பற்றி அறிந்து வரச் சொல்லி ரானா கூறினார் ராணி”

“என்னைப் பற்றி அறிந்து வரச் சொன்னாரா அல்லது அக்பர் பற்றி உளவு பார்க்க அனுப்பினாரா தேவி?”

அதைக் கேட்டதும் சற்றுத் திகைத்தாலும், உண்மையும் அல்லாது பொய்யும் அல்லாது

“மகாரானாவிற்கு இந்த திருமண ஒப்பந்தங்கள் பிடிப்பதில்லை ராணி. அதைத் தடுக்கவே முயற்சி செய்தார். என்றாலும் தங்கள் தந்தைக்கும், ரானாவிற்கும் உள்ள பகையால் முயற்சி பலனளிக்கவில்லை. தங்களின் நலம் அறிந்து வரச் சொன்ன அதே நேரத்தில் , இங்குள்ள மற்ற நிலவரங்களையும் அறிந்து வரச் சொன்னார்”

“யூகித்தேன். எப்போது ஒற்றர்களை விட்டு விட்டு உன்னை நேரடியாக அனுப்பி வைத்தாரோ , இனி எப்போது வேண்டும் என்றாலும் போர் நடக்கலாம். சரி. சரி. நீ உடனே அந்த ராஜபுத்திர வீரனோடு புறப்பட்டு ராணாவிடம் சென்று சேர்ந்து விடு”

“அவர் வெறும் வீரன் அல்ல சகோதரி. பிகானர் ராஜ்யத்தின் இளவரசர். “ என்றுக் கூறி விட்டு “ தற்போது அவர் இங்கு இல்லையே. அவர் என்னைத் தேடி அந்த மீனா பஜாருக்குத் தான் சென்று இருப்பார். நான் அங்கேயே சென்று விடுகிறேன்” என்றாள் கிரண் தேவி.

“இல்லை. நீ அங்கே செல்ல வேண்டாம். என் யூகம் சரியானால், அந்த இளவரசன் உன்னைத் தேடி நம்மைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கலாம். யாரும் அறியாதவாறு நீ பின் தங்கி விடு. என்னுடைய ஆசிகள் உனக்கு. மேலும் ராணாவிடம் என் வணக்கத்தைச் சொல்” என்றுக் கூறிவிட்டு வீரர்களை அழைத்தாள்.

மீண்டும் அரண்மனை நோக்கிச் செல்லச் சொல்லிக் கட்டளையிட, வீரர்கள் புறப்பட்டனர். அவர்கள் சற்றுத் தூரம் சென்றதும், ஒரு மிகப்பெரிய மரக் கூட்டத்தை கடந்தனர். அந்த இடத்தில் ராணி கிரண் தேவி அவர்களிடம் இருந்து பிரிந்து, ஓர் மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

அவர்கள் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்த ராணியின் பின்னால் இருந்து

“தேவி” என்றக் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பியவள் , அங்கிருந்த இளவரசரைக் கண்டதும்,

“இளவரசே” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“தேவி, நாம் இங்கு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. எனவே நம் பயணத்தைத் துவக்குவோம். செல்லும் வழியில் பேசிக் கொள்ளலாம்” என்றுக் கூறவும், வேறு எதுவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.