விட்டதை அக்பரிடம் சொன்னபோது மிகவும் ஆத்திரப்பட்ட அக்பர் அரண்மனைக்குள்ளும் வெளியிலும் வீரர்களை விட்டுத் தேடச் சொன்னார்.
அவள் தப்பித்தால் ஜோதா அரண்மனைக்குத் தானே செல்வாள் என்று எண்ணியவர் அங்கேயும் சென்றுப் பார்க்க , கிரண் தேவிப் பற்றி ஜோதாவே அவரிடம் விசாரிக்கவும் திரும்பி தன் அரண்மனைக்கு வந்து விட்டார்.
ஆனால் அக்பரின் அமைச்சர் அறியாமல் நந்தவனத்திற்குள் நுழைந்த ராணி கிரண் தேவி, இருட்டும் வரை காத்து இருந்து, மெதுவாக நந்தவனத்தில் உள்ள மரங்கள் வழியாக கோட்டை வாயிலை ஒட்டி வந்து விட்டாள்.
ஆனால் அவளால் கோட்டையை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. நந்தவனத்தில் இருந்த மரங்களே மிகவும் உயரமாக இருக்க, கோட்டை மதிலோ அதையும் விட உயரமாகவே இருந்தது. வாயில் கதவு அருகில் செல்லலாம் என்றால் அங்கே வீரர்கள் நின்று இருந்தனர். எப்படித் தப்பிப்பது என்ற யோசனையின் போது தான் ஜோதா ராணியின் சிவிகை அரண்மனைக்குள் சென்றது.
வீரர்கள் வெளியே நின்ற விதம், மற்ற பணிப்பெண்கள் கைகளில் ஒன்றும் இல்லாததைப் பார்த்த கிரண் தேவி, இன்னும் சற்று நேரத்தில் ஜோதா வெளியேறி விடுவார் என்று உணர்ந்து கொண்டவளாக , மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பணிபெண்களோடு இணைந்துக் கொண்டாள்.
மற்றப் பெண்களுக்கு எல்லாம் அச்சம் இருக்கவே, அவர்கள் யாரும் இவள் சேர்ந்துக் கொண்டதை அறியவில்லை. காமினியும் ராணியோடு வந்திருக்க, கிரண் தேவியைக் கண்டுக் கொண்டாள். மற்ற பணிப்பெண்கள் ஏதோ பேச வந்ததையும் , அவளே திசை மாற்றி விட்டாள்.
பிறகு ராணி ஜோதா வெளியே வரவும் , இவர்களும் இணைந்துக் கொண்டனர்.
அதற்குப் பின் ஜோதா அவளைக் கண்டுக் கொண்டதும், மற்றதும் கூறி முடித்தாள் கிரண் தேவி.
பின், கிரண் தேவி இளவரசரிடம்
“தாங்கள் எப்படி என்னைப் பின் தொடர்ந்தீர்கள் இளவரசே?” என்று வினவினாள்.
“உன்னைக் காணவில்லை என்று காமினி சொன்னதும். உனக்கு என்ன ஆபத்து நெருங்கி இருக்குமோ என்று பயந்து இருந்தோம். பின் ஜோதா ராணியிடம் சென்று முறையிட்டும், அக்பரிடம் கேட்டும் உன்னைப் பற்றியத் தகவல் கிடைக்காமல் போராடும் நிலைக்குச் சென்றோம். மீண்டும் மீனா பஜார் சென்று பார்த்தும் எதுவம் புலப்படவில்லை. அதற்குப்