(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“இருக்கட்டும் பெண்ணே. உன் கோபத்தைக் கைவிட்டு, நீ தப்பித்துச் செல்லப் பார் “

“சற்று நேரம் முன்புதானே உங்கள் பேரரசர் , அவரின் விளையாட்டுக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தார். அப்படிப்பட்டவரை உயிரோடு விட வேண்டுமா?”

“ஆனால் அவர் என் அரசர் பெண்ணே. உன்னால் அவருக்கு ஆபத்து ஏற்படுமாயின் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்”

“ஹ. ஹ. உங்களைப் போன்றவர்களால்தான் உங்கள் அரசருக்கு தப்பு, சரிப் பற்றியக் கவலை இல்லை போலிருக்கிறது. ஒரு நிபந்தனையின் பேரில் உங்கள் அரசரை விட்டு விடுகிறேன்“ என்றவள்,

“உங்களுக்காகவோ, என் உயிருக்காகவே பயந்து நான் இதைச் செய்யவில்லை. இவரை வெல்வதற்காக மட்டுமே காத்து நிற்கும் ராஜபுத்திரத்தின் விடிவெள்ளி மகாரானாவிர்காக விட்டு விடுகிறேன். ஆனால் இந்த நவரோஜ் மேளா இன்றே கடைசியாக இருக்க வேண்டும் அமைச்சரே. இனிமேலும் இதை நடத்துவது, எல்லாம் தெரிந்த எனக்கு ஒப்பவில்லை. அதனால் இந்த வாளின் மேல் ஆணையாக இந்த நவரோஜ் மேளா இனி நடக்காது என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும்”

இப்போது அக்பர் முதல் முறையாக வாயைத் திறந்து “அது உனக்குத் தேவை இல்லாதது பெண்ணே. உனக்கு விருப்பம் இல்லையென்றால் செல். என்னைக் கட்டுபடுத்த உன்னால் இயலாது” என்றார்.

அதற்குள் அமைச்சர் குறிகிட்டு “வேண்டாம் அரசே. இதுநாள் வரை எத்தனையோ கெடுபிடிகளிலும் மக்கள் அமைதியாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற அவர்களின் சுயமைரியாதை சீண்டும் விஷயத்தில் நாம் இனியாவது இறங்காமல் இருப்பதே நம் ஆட்சியைக் காப்பாற்றும். இதனால் நமக்கு எதுவும் பாதகமில்லை. எனவே இந்த நிபந்தனையை நிறைவேற்ற உத்தரவு அளியுங்கள்” என்றார்.

அக்பர் சில கணங்கள் யோசித்தாலும், முடிவில் சரி என்று ஒத்துக் கொண்டார்.

“ஆனால் அமைச்சரே, பேரரசரான என்னை அச்சுறுத்த நினைத்ததற்கு உரிய தண்டனையாக இந்தப் பெண்ணைச் சிறையில் அடையுங்கள். வெளியில் விட்டால் ஆபத்து.” என்று உத்தரவிடவும், அக்பரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தக் கிரண் தேவி அமைச்சரோடு சென்றாள்.

அக்பரின் அரண்மனையில் இருந்து சிறைச்சாலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொழுது அவர் அறியாமல் நந்தவனத்திற்குள் நுழைந்து விட்டாள். அவளைத் தவற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.