(Reading time: 10 - 19 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

"எங்க மாமா, பாடமெல்லாம் இங்கிலீஷ்ல நடத்தினாங்களா? அதான் கொஞ்சம் புரிஞ்சுது, நிறைய புரியல, இப்போவாச்சும் புரியுதான்னு பார்க்கிறேன்." என்று அவள் சூழ்நிலையை சொல்ல,

"அதெல்லாம் பெரிய பிரச்சனையில்லை, நான் உனக்கு சொல்லித் தரேன். அதுக்கு முன்ன சொல்லு, முதல் நாள் காலேஜ் எப்படி போச்சு?" என்றுக் கேட்க,

"ம்ம் பைனல் இயர்ல ரமான்னு ஒரு ஃப்ரண்ட் கிடைச்சுருக்காங்க, வீட்டுக்கு வரும்போது நாங்க ரெண்டுப்பேரும் தான் சேர்ந்து வந்தோம்," என்று அவள் உற்சாகத்தோடு சொல்ல,

"அடடா, முதல்நாளே சீனியரை ஃப்ரண்ட் பிடிச்சாச்சா? நித்தி வேற லெவல் தான் போ," என்று கேலி செய்ய,

"நீங்க வேற மாமா, நீங்க காலேஜ் உள்ள என்னை விட்டுட்டு போனதும், டிபார்ட்மெண்ட் தேட்றேன்னு ஒரு கும்பல்க்கிட்ட மாட்டிக்கிட்டேன். அதுவும் எல்லாம் எங்க டிபார்மெண்ட் சீனியர்ஸ், கழுத்தில் தாலி, நெத்தியில் குங்குமமெல்லாம் பார்த்து ரேகிங்கிற பேரில் என்னென்னவோ கேட்க ஆரம்பிச்சிட்டாங்க, நல்லவேளை ரமா தான் வந்து எனக்கு ஹெல்ப் செஞ்சாங்க, சீனியரா இருந்தாலும் கிட்டத்தட்ட ரெண்டுப்பேருக்கும் ஒரே வயசு, இதில் ரமாவுக்கும் படிக்கும்போதே கல்யாணம் ஆகிடுச்சு, அதான் ஈஸியா ரெண்டுப்பேரும் ஃப்ரண்ட் ஆயிட்டோம்," என்று நடந்ததை விளக்கமாக கூறினாள்.

"ம்ம் ரேகிங் வேறயா? இப்போதைக்கு என்னடான்னு தான் அதெல்லாம் இருக்கும், ஆனா கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு நினைச்சுப் பார்த்தா இதெல்லாம் ஒரு ஜாலியான மெமரி நித்தி."

"என்ன மாமா நீங்களும் ரமா போல பேசறீங்க, சாதாரணமா நடந்தா பரவாயில்லை, ஆனா என்ன வேணாம் பேசலாம்னு மத்தவங்க மனசை சங்கடப்படுத்தறது போல பேசுவது சரியா? நான் கல்யாணம் ஆனவன்னு என்னல்லாம் கேட்டாங்க தெரியுமா?

ஃப்ர்ஸ்ட் நைட்ல என்ன செய்வாங்க? குழந்தை எப்படி பிறக்கும்? இப்படியெல்லாமா கேட்பாங்க? அது ஒருத்தரோட ஃபர்சனல் ஆச்சே, அதை போய் இத்தனை பேர் முன்ன பேசறோமேன்னு தோன வேண்டாமா? எனக்கு அவங்க கேட்டது அழுகை வரது போல இருந்துச்சு தெரியுமா? ரமா வரலன்னா கொஞ்ச நேரத்தில் அழுதுருப்பேன்.

இப்படி ரேகிங் என்கிற பேரில் அவங்களுக்கு பிடிக்காததை செய்ய சொல்லி அதனால் எத்தனை மரணம் நடந்திருக்கு? அப்போதும் இன்னும் இந்த ரேகிங்கை ஒரு ஜாலியா செய்றது எனக்கென்னவோ சரியாப் படல மாமா," என்று அவள் பேசி முடிக்கவும்,

"வாவ் நித்தி, அந்த சிட்டுவேஷனை நீ தைரியமா ஹாண்டில் செய்யலன்னாலும், அது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.