(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அதான் வந்தேன்”

“ஒஹ். குட். நானும் அது விஷயமாத் தான் வந்தேன்” என்றவர், இன்ஸ்பெக்டரிடம் திரும்பி

“சார். என் பொண்ணு கிருத்திகா கிட்டே நீங்க எதுவும் ரிபோர்ட் வாங்கனுமா? அவளை எப்போ கூட்டிட்டு வரணும்?” என்றுக் கேட்டார்.

“நோ அர்ஜென்ட் சார். ப்ரித்வியும் அந்த இடத்தில் இருந்ததால், அவர் கொடுத்த ரிபோர்ட் வச்சு நாங்க மேலே ப்ரோசீட் பண்ணிடுவோம். ரெண்டு நாள் கழிச்சு அவங்க ப்ரித்வி சொன்னது எல்லாம் உண்மையான்னு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தாப் போதும். அப்போ உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். நீங்க அவங்களைக் கூட்டிட்டு வாங்க” என்றார்.

“தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்” என்று விட்டுக் கிளம்பினார். ப்ரித்வியும் அவரோடு கிளம்பினான்.

அவனின் எண்ணம் முழுதும் கிருத்திகாவே. கிட்டத்தட்ட இருபது நாட்களாக அவளைச் சுற்றியே அவன் செயல்கள் இருந்ததால், இப்போது அவன் கண்களும், மனதும் அவளைத் தேடத் தொடங்கியது.

மேலும் கிரண் தேவி, இளவரசனின் கதை கேட்டும், அவன் அதை உணர்ந்ததும் அவனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. கிரண் தேவி செய்த செயல்கள் ஒவ்வொன்றிலும் கிருத்திகாவே தெரிந்தாள். ஆரம்பத்தில் முகம் மறைத்தத் தோற்றத்தைப் பற்றிக் கிருத்திகா கூறும் போதே, அந்த முகத்தில் கிருத்திகாவையே தேடியது அவன் உள்ளம்.

கிருத்திகவை விட்டுத் தனியே வந்த இந்த இரண்டு மூன்று மணி நேரத்தில், குறைந்தது முப்பது தடவையாவது அவளை நினைத்து இருப்பான்.

அங்கே கிருத்திகாவோ வீட்டிற்குச் சென்றவுடன் குளித்து விட்டு, தன் அம்மாவை வம்பிழுத்தப்படி சாப்பிட்டவள், படுக்கச் சென்று விட்டாள். மீண்டும் எழுந்தது வயிறு பசித்தப் பின்தான். சாப்பிட்டப் பின் மீண்டும் தூக்கம் என்று இரண்டு நாட்களை கழித்தப் பின் தான் அவள் இந்த பூலோகத்திற்குத் திரும்பி இருந்தாள்.

அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் ஒரே ப்ரித்வி புராணம் தான். கிருத்தித் தன் தாயிடம் டூரில் நடந்ததைச் சொல்ல, அவருக்கோ பயமும், பதட்டமும் ஏற்பட்டது. பின் அவரின் கணவர் சக்தியும், பிரதாப்பும் சமாதானப்படுத்தவே கொஞ்சம் அமைதியானார்.

ஆனால் கிருத்திகாவை திட்டுவதை நிறுத்தவில்லை. அவளின் அசட்டுத் தைரியமும், அதிகப் பிரசங்கித்தனமுமே இத்தனைக்கும் காரணம். அந்த செல்வத்தைப் பற்றிக் கொஞ்சம் பொறுமையாக பெரியவர்களிடத்தில் சொல்லி இருந்தால் இத்தனை பிரச்சினை ஆகியிருக்கதே என்றுப் போக வர அவளுக்கு லட்சார்ச்சனை தான்.

அவரைச் சமாதனப்படுத்த என்று அவள் அங்கே நடந்ததையும், ஒவ்வொரு பிரச்சினையின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.