(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“நாம் ஆக்ராவில் இருந்துக் கிளம்பும்போது உன்னிடம் கேட்டேனே. அதைப் பற்றி யோசித்தாயா?”

அவன் கேட்டது நன்றாக நினைவு இருந்தாலும் “என்ன கேட்டீங்க?” என்றுக் கேட்டாள்.

அவள் மறக்கவில்லை என்று அவளின் பாவனையில் உணர்ந்தவன், அவள் கேள்விக்குப் பதிலாக

“உனக்கும், எனக்கும் மட்டும் ஏன் கிரண் தேவி, இளவரசன் பற்றியக் கனவுகள் வர வேண்டும் என்றுக் கேட்டேனே?” என்றான்

அவள் தலைக் குனிந்தப் படி “தெரியவில்லை” என்றாள்.

“நாமளே ஏன் கிரண் தேவியாகவும், இளவரசனாகவும் இருக்கக் கூடாது?” என்றுக் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“அது எப்படி நீங்க சொல்றீங்க?”

“எஸ். எனக்கு அப்படி ரொம்பத் தோணுது. உன்னைப் பார்க்கும் போது உன் தைரியம், நகைச்சுவை எல்லாம் பார்த்து ஒரு பிடித்தம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த செல்வத்தின் ஆட்களிடம் நீ மாட்டும் ஒவ்வொரு தடவையும் எனக்கு பயம் ஏற்பட்டது. உன்னை நல்லபடியாகக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் என்னை பயபடுத்தியது. இது வரையில் என் வேலையில் இதை விட எத்தனையோ சீரியஸ் சூழ்நிலைகளைக் கையாண்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் அது என் மனதைப் பாதித்தது இல்லை. ஆனால் உன் விஷயம் மட்டுமே என்னை மிகவும் பாதித்தது. இப்படி ஒரு உணர்வு இதுவரைக்கும் எனக்கு எந்தப் பெண்ணிடத்திலும் தோன்றியது இல்லை.”

“சரி. இப்போது அது எல்லாம் ஏன் சொல்கிறீர்கள்?”

“நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று சட்டேன்றுக் கேட்டான்.

இப்படி ஒருக் கேள்வியைக் கிருத்திகா எதிர்பார்க்கவில்லை. ப்ரித்விக்குத் தன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாகி இருக்கிறது என்பதை அவன் பேச்சில் ஏற்கனவே புரிந்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கும் ப்ரித்வியின் மேல் ஒரு ஈர்ப்புத் தோன்றி இருந்ததும் உண்மைதான். அதிலும் செல்வம் காரில் வைத்து இவள் கழுத்தைக் குறி வைத்துத் தாக்கும் போது , வெளியே கார் கண்ணாடி ஜன்னல் வழியே, ப்ரித்வியின் திகைத்த முகமும், அவளைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற பதட்டமும் பார்த்தவளுக்கு , அவன் மேல் அவளுக்கு ஈர்ப்பையும் தாண்டிய அன்பு தோன்றி இருந்தாது. ஆனால் அவள் அதற்கு மேல் அதைப் பற்றி யோசித்தது இல்லை.

இப்போது ப்ரித்வியின் இந்தக் கேள்விக்கப் பதில் சொல்ல முடியாமல் முழித்தாள். பின்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.