(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

போதும் ப்ரித்வி வந்துக் காப்பாற்றியதையும் அவள் சொல்ல சொல்ல, அவள் பேச்சில் பார்த்த இடங்களை விட, ப்ரித்வியின் பெயரே அதிகம் இடம் பெற்றது. ஆனால் இத்தனையும் சொன்னவள், அந்தக் கனவைப் பற்றியோ, அது அவளுள் ஏற்படுத்தியத் தாக்காத்தைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. ஏனோ அது தங்களுக்குள்ளான ரகசியம் என்பது போல் அவளுக்குத் தோன்றியது.

அதே போல் ப்ரித்வியும் கிருத்தியின் தைர்யம், கேலி, இயல்பான செய்கைகள் என்று தன் தங்கையிடம் பகிர்ந்தவன், கிரண் தேவி , இளவரசன் பற்றி அவளிடம் சொல்லவில்லை.

ப்ரித்விக்குக் கிருத்தியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற, கிருத்திக் காலேஜ் செல்ல ஆரம்பித்ததைத் தெரிந்துக் கொண்டு, நேராக காலேஜ் சென்றான்.

அங்கே அவளின் ஹெச்.ஒ.டி யைப் பார்த்து பேசி விட்டு, கிருத்தியிடம் பேச வேண்டும் என்றான். எதற்கு என்ற கேள்விக்கு, அங்கே நடந்த சில விஷயங்களைப் பற்றி போலீஸ் ரிபோர்ட் கொடுக்க வேண்டும். அதைப் பற்றிச் சில விவரங்கள் கேட்க வேண்டும் என்றான்.

அவர்களும் அவளை அனுப்பி வைத்தனர்.

கிருத்தியைப் பார்த்ததும் அவன் கண்களில் மின்னல் வந்தது. கிருத்திக்கும் அவனை எதிர்பாராமல் சந்தித்ததில் சந்தோஷமே. அவள் கண்களில் அந்த மகிழ்ச்சித் தெரிய, உள்ளமோ அவன் ஏன் வந்து இருக்கிறான் என்ற படபடப்பு ஏற்பட்டது.

அருகில் வந்ததும்

“ஹாய் கிருத்தி” என்றுப் ப்ரிதிவிக் கூற,

“ஹாய் “ என்றாள்.

“உன்கிட்டக் கொஞ்சம் பேசணுமே”

“என்ன பேசணும்?”

“ஹ்ம்ம். இங்கே வச்சு வேண்டாம். வெளியில் மீட் பண்ணலாமா?”

அவள் யோசிக்கவும், “ரொம்ப தள்ளி எல்லாம் இல்லை. இங்கே காலேஜ் ரோட்டில் இருக்கும் காபி ஷாப் தான்” என்றான்.

கிருத்தி சரி என்று தலை அசைக்கவும், அவளைத் தன்னோடு வரச் சொன்னான். அவள் அது கடைசி வகுப்புத் தான் என்பதால், தன் ஸ்கூட்டியில் வந்து விட்டு, அங்கிருந்து அதிலேயே வீட்டிற்குச் சென்று விடுவதாகவும் கூறினாள்.

அவனும் சம்மதித்து காபி ஷாப் செல்ல, கிருத்தியும் பின் தொடர்ந்தாள்.

இருவருக்கும் வேண்டியதைக் கேட்டு ஆர்டர் கொடுத்தப் பின் ப்ரித்வியிடம் திரும்பி

“என்ன பேசணும் ?” என்றுக் கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.