(Reading time: 13 - 25 minutes)
Kaarigai
Kaarigai

துணி துவைக்கும் போதெல்லாம் மாரியப்பன் இன்று வருவதை எண்ணி அவளுக்கு அடிவயிற்றை பிசைந்தது. அன்று என்ன நடந்தது என அவளுக்கு தெரியவில்லை என்றாலும் அவன் தன்னிடம் நடக்க முயன்ற விதம் அவளுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்கி இருந்தது. துணி எல்லாம் துவைத்து முடித்து விட்டு எழுந்தவள் மீண்டும் தலையை சுற்ற அப்படியே அமர்ந்தாள்.

"என்னாச்சு ஏன் மயக்கம் வர மாதிரியே இருக்கு. செத்து போக போறானா?" அந்த சின்ன பெண் மனம் சாக போகிறோமா என்று எண்ணியதும் மிரண்டு போனது.

"அம்மா அக்கா" உமாவின் சத்தம் கேட்கவும் எழுந்து வந்தவள், "உமா கைகால் கழுவிட்டு வா, நான் உனக்கு சாப்பிட கொண்டு வரேன்" என்றவள் கொல்லையில் துணியை எல்லாம் காயம் போட்டு விட்டு வந்து உமாவுக்கு சிற்றுண்டி எடுத்து கொடுத்தாள்.

"அக்கா நீ சாப்பிட்டியா?" என்ற உமா, பவித்ரா பதில் சொல்லும் முன் அவள் தட்டில் இருந்த அந்த வடையை எடுத்து பவித்ராவின் வாயில் ஊட்டினாள். அதை வாயில் வைத்த மறுநொடி பவித்ராவுக்கு குமட்டி கொண்டு வர, வேகமாக கொல்லையை நோக்கி ஓடினாள் பவித்ரா.

அடிவயிற்றை புரட்டி கொண்டு வந்தது. அவள் வாந்தி எடுக்கவும் கண்ணம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

"அம்மா அம்மா அக்கா வாந்தி எடுக்கறாங்கமா" கண்ணம்மாவை கண்ட உமா அவளிடம் ஓடினாள். அதற்குள் வாயை கழுகிக்கொண்டு உள்ளே நுழைந்த பவித்ராவை கண்ட கண்ணம்மா "என்னத்த தின்னு தொலைச்ச?" எனவும், "கொஞ்சூண்டு வடை தான்மா கொடுத்தேன்" என்றாள் உமா.

"உனக்கு கொடுத்தா அதை நீ தின்னு...பெரிய தர்மப்பிரபு..." என்று உமாவின் தலையில் காட்டியவள் "அவ சின்ன பொண்ணு. அவ தான் கொடுக்கறானா நீ உடனே வாங்கி தின்னுடிவியா? இப்போ வாந்தி எடுத்து ஏதாவது வந்துச்சுனா? வா வா வேலை இருக்கு...சும்மா இதான் சாக்குன்னு படுத்துக்காத" என்றவள் சமயலறையில் நுழைய அவள் பின்னாடி சென்றாள் பவித்ரா.

சமையலறையின் ஒரு ஓரத்தில் நின்று வெளியே ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டீவியை பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா. நேரம் பதினொன்றை கடந்திருந்தது. மாரியப்பன் இருப்பதாலோ என்னவோ அவளுக்கு உறக்கமே வரவில்லை. ஹாலில் டிவி ஓடும் சத்தம் கேட்கவும் உள்ளே ஒரு மூலையில் நின்றபடி அதை பார்த்து கொண்டிருந்தாள். கண்ணம்மாவும் மாரியப்பனும் ஏதோ பேசியபடி இருந்தனர்.

மாரியப்பன் இருமவும் தண்ணீர் எடுக்க எழுந்த கண்ணம்மா, பவித்ரா நிற்பதை பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.